ராவணன் மைதிலி 27
ராவணன் 27
மிக எளிமையாக வீட்டிலே ஆதிலா வளைகாப்பு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். உச்சக்கட்ட பாதுகாப்போடு அங்கு கூடி இருந்தனர். நலங்கு வைத்து வலயல்கள் போடும் போது மின்னும் ஆதிலா முகத்தை பார்த்து நெஞ்சம் நிறைந்தாள் ஜனனி.
அவளுக்குள் ஏக்கங்கள் நிறைய இருக்கிறது. இருந்தாலும் தனக்கு கிடைக்காதது அடுத்தவர்களுக்கு கிடைக்க கூடாது என்று நினைக்க மாட்டாள். ஏக்கமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைவாள். என்ன செய்வது உள்ளங்கையில் தெரிந்த குழந்தைகளின் அசைவை மறக்க முடியவில்லையே. அவளை கவனித்த வீர் அருகில் வந்து இடையோடு வலைக்க அவன் தோளில் சாய்ந்தாள்.
"உனக்கு ஒன்னும் இல்லையே?" என்றவனை நிமிர்ந்து பார்த்து சிறு புன்னகையுடன் கண்கள் சிமிட்டினாள்.
அவனுக்குள் ஏதோ உணரப்பட ஜெஸ்வந்த்க்கு கண் காட்டினான். அடுத்து அடுத்து அணைவர் ஒரு மாதிரி பார்க்க வெண்ணிற புகை மண்டலம் அங்கு உருவானது. தன் கணவனை கொன்றவனை பழி தீர்க்க அனைவரையும் இன்று கொன்று குவிக்கும் வெறியோடு வந்தாள் ரிதன்யா. இருபதுக்கும் மேற்பட்ட ஆட்களோடு வெறி பிடித்தவள் போல வந்தாள்.
விஷ புகையின் வீரியத்தில் அனைவரும் மயங்கி போயிருப்பார்கள் நமது வேலை ஈஸியாக முடியும் என்று வந்தவளுக்கு பெரிய அதிர்ச்சி. அனைவரும் கேஸ் மாஸ்க் அணிந்திருந்தனர். ஜெயிலில் அவன் அனுப்பிய ஸ்பை மூலம் அவர்கள் திட்டத்தை அறிந்து கொண்ட வீர் அதற்கு ஏற்ப முன்னேர்பாடோடு இருந்தான்.
அதை மிக தாமதமாக புரிந்து கொண்ட ரிது "மறுபடியும் நீ என்ன ஏமாத்திட்ட வீர்.." பற்கள் கடித்து கூறினாள்.
"நீ திருந்தவே மாட்டியா ரிது?" தமக்கை மனசு மாற மாட்டாளா? என்கிற ஏக்கத்தில் கேட்டான்.
அவளோ, "என் புருசன கொன்னு என்ன அனாதையாக்கின உன்ன, உன்ன சேர்ந்தவங்கள சும்மா விட மாட்டேன்.." என்று துப்பாக்கியை எடுக்க, இரு தரப்பில் இருந்து சண்டை ஆரம்பம் ஆனது.
ஆதிலா உட்பட அணைத்து பெண்களையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல, ஜெஸ்வந்த் தங்கை ஜோவித்தா மட்டும் ஷர்ட் கண்ணை லோட் செய்து கையில் எடுத்தாள். அங்கு கூடி இருந்த அனைவரும் மாஃபியாகள். அவர்களுக்கு துப்பாக்கி சண்டை எல்லாம் புதிது இல்லை. சுட்டு தள்ளினர்.
கூலிக்கு வந்த ரிது ஆட்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டு துளைத்து விழுந்தனர். கோபத்தில் கத்தினாள் ரிது. அதிலும் ஆதிலா தங்கை குண்டு குறைய குறைய லோட் செய்து சுட்டு தள்ளிக் கொண்டே இருந்தாள். ஹம்சாவின் தம்பியை சமாளிக்க முடியாமல் ஆதிலா தந்தை தடுமாறினார்.
விட்டால் அவன் அவரை கொன்று விடுவான் என்கிற நேரத்தில் கண் லோட் செய்யும் சத்தம் கேட்க மறுநொடி அவன் குரல்வலையில் புல்லட்டை இறக்கி கொன்றாள். ஆடி போனார் ஆதிலா தந்தை. ஜெஸ்வந்தை பார்க்க, "எங்க வீட்ட எல்லாருக்கும் துப்பாக்கி தான் செல்லப்பிள்ள. நடக்க ஆரம்பிக்கும் போதே துப்பாக்கி சுட சொல்லி கொடுப்பாங்க மாமா. ஆண் பெண் பேதம் இல்ல.." என்றான்.
அதற்குள் அடுத்தவன் வர மீண்டும் சண்டை ஆரம்பம் ஆனது. ரிது காசு கொடுத்து அழைத்து வந்த ஆட்கள் ஒருவர் பின் ஒருவராக விழ பயந்து போன ஹம்சா தங்கை கணவன் ஓடப் பார்க்க அவன் பின் மண்டையில் இறங்கியது வீர் துப்பாக்கியில் இருந்து வந்த புல்லட். ஓடிய வேகத்தில் மண்ணில் விழுந்து இறந்தான்.
இதையெல்லாம் பார்த்து கடுப்பான ரிது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீர் அருகில் வர அவனுக்கு முன் வந்து நின்றார் வீர் அன்னை.
அவரை பார்த்து ஒரு நொடி தடுமாறியவள் கையில் இருந்து துப்பாக்கி கீழே விழ, கத்தியை வைத்து அவர் கதையை முடிக்க போகும் நேரம் அவள் கையை அவர் பிடிக்க, பெண்கள் இருவருக்கும் நடுவில் கை கலப்பு ஆனது. அம்மாவுக்கு ஏதும் ஆகிவிடும் என்று பயந்து வீர் ஓடிவரும் முன் இருவரும் தரையில் விழுந்தனர். ரத்தம் வெண்ணிற டைல்ஸ் தரையை நனைந்து ஓடியது.
அதிர்ச்சியில் உறைந்தே போனான் வீர். "அம்மாவுக்கு ஏதோ ஆகிவிட்டது. அவரை இழந்து விட்டோம் என்று நினைத்து கண்ணீர் கசிய தனக்கு மேல் கிடந்தவளை நகர்த்தி போட்டுவிட்டு எழுந்து நின்றார். அவரை கண்டு அதிர்ந்தவன் அருகில் செல்ல, வயிற்றில் குத்திய கத்தி நிற்க, எழுந்தாள் ரிது.
தன் வயிற்றில் பிறக்காமல் போனாலும் தன் மகளாகவே ஒரு சர்பத்தை வளர்திருக்கிறோம் என்று தெரிந்த அன்னை தன் கையாலே அவளை கொல்ல வயிற்றில் கத்தியை இறக்கினார். அதிலும் அவள் சாகவில்லை. வீரை கொன்றே தீர வேண்டும் என்கிற வெறியில் மீண்டும் எழுந்து நின்றாள்.
தட்டு தடுமாறி வீர் அருகில் வர ஷார்ட்கன் வெடித்து அவள் முகத்திலே இறங்கியது புல்லட். முகம் சிதறி தரையில் விழுந்து மடிந்தாள் ரிதன்யா. பழி வாங்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக எந்த பாவமும் அறியாத சிசுக்களை சிதைத்தவள் இன்று தலை சிதறி செத்து மடிந்தாள். ஜெஸ்வந்த் தங்கை தாண் அவளை கொன்றிருந்தாள்.
தூக்கி வளர்த்த அன்னை என்றும் பாராமல் கொலை செய்ய வந்தவள் அவர் காலடியில் விழுந்து செத்தாள். உயிரற்ற அவள் உடலை பார்த்து கதறி அழுதாள். அன்னையை அணைத்துக்கொண்டான் வீர்.
ஹம்சா தம்பி, மச்சான், மனைவி என மூவரும் இறந்து போய்விட்டனர். ஆனால் அக்கீன் இன்னும் இருக்கிறான். நால்வரில் ரிதுக்கு அடுத்து மோசமானவன் அவன் தான். அவனை கண்டு பிடிக்க சொல்லி வீர் சொல்லி வாய் மூடும் முன் அவன் உடலில் புல்லட் பாய்ந்தது. தடுமாறி விழுந்தவனை மற்றவர்கள் அதிர்ச்சியாக பார்க்க, ஒருத்தி மட்டும் அவன் கண் வழியாக புல்லட்டை இறக்கி இருந்தாள்.
கண் வழியாக நுழைந்த புல்லட் தலைக்கு பின் பக்கம் வழியாக வெளியேறி போயிருந்தது. வேறு யார் ஜெஸ்வந்த் தங்கை தான். வயது இருபது தான். ஆனால் தெறிக்கவிட்டாள். கூலிக்கு வந்தவர்கள் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடைய, மற்றவர்கள் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.
அனைத்தும் முடிந்து அம்மாவை சமாதானம் செய்துவிட்டு மனைவியை பார்க்க சென்றான் வீர். காதுகளை பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜனனி.
"ஜனனி.." அவள் தோள் தொட்டு அணைக்க தாவி அணைத்துக் கொண்டாள் அவனை. "என்னால இதெல்லாம் கேக்க முடியல. பாக்க முடியல.." என்று கேவி கேவி அழுதாள்.
துப்பாக்கி, கொலை, தோட்டா இதெல்லாம் ஜனனிக்கு பிடிக்காதது. மலரினும் மெல்லியவள் அவள். பயந்து போயிருந்தாள். மற்றவர்கள் துப்பாக்கி எடுக்காவிட்டாலும் மாஃபியா கூட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு இது பழக்கப்பட்டது தான். ஜனனி முழுக்க முழுக்க வேறுபட்டவள்.
"ஒன்னும் இல்ல டா. அழாத. அவ்ளோ தான் எல்லாமே முடிஞ்சிருச்சு. இனிமே நீ பயப்படவே கூடாது.." அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினான். அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.
இரவு அவரவர் வீட்டுக்கு புறப்பட்டனர். பிணங்களை அப்புறபடுத்தி சுத்தம் செய்ய ஆட்கள் வந்தனர்.
ஜனனியை அறைக்கு போக சொல்லிவிட்டு அம்மாவிடம் வந்தான். அவரோ இன்னும் குற்றவுணர்ச்சியில் அழுது கொண்டிருந்தாள்.
"ம்மா.. பீல் பண்ணாதீங்க. உங்கமேல எந்த தப்பும் இல்ல. எல்லாம் அவளா தேடிக்கிட்டது. நாம அவள நம்மல்ல ஒருத்தியா தான் நினைச்சோம். அவ கடைசி வரைக்கும் அப்டி நினைக்கவே இல்ல மா.." என்றிட, "உனக்கும் அவளுக்கும் நா வித்தியாசம் பாத்தது இல்ல வீர். ஆனா இன்னைக்கு என் பொண்ணையே நா கொன்னுட்டேன்.." என்று கூறி அழுதாள்.
அவள் செய்த துரோகங்கள் தெரிந்தும் அன்னையானவர் மனம் மகளுக்காக வருந்தியது.
"கவலை படாதீங்க மா. எல்லாமே சரியாகிடும். நீங்க பீல் பண்ற அளவுக்கு அவ நல்லவ இல்ல. கருவுல இருந்த சிசுக்களை கொன்னப்பவே அவ வாழற தகுதிய இழந்துட்டா. சாத்தான்களுக்கு பூமில்ல இடம் இல்ல மா.." என்று அன்னையை சமாதானம் செய்தான்.
அழுது தீர்த்தவர் புரிந்து கொண்டார். அழகான குடும்பம் இருந்தும் அவளுக்கான முடிவை அவளே தேடி கொண்டாள்.. மனதை தேற்றிக் கொண்டவர், "ஜனனிய போய் பாரு. அவ ரொம்ப பயந்து போயிருப்பா.." என்று கூறி அனுப்பினார். அவனும் ஜனனியை பார்க்க சென்றான்.
அறைக்குள் சென்று பார்க்க தலைக்கு குளித்துவிட்டு தண்ணீர் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தாள் ஜனனி. கதவை அடைத்துவிட்டு வந்தவன் ஹேர் ட்ரையர் எடுத்து அவள் கூந்தலை உள்ளரதிவிட்டான். வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவள் முகத்தை கண்ணாடி பிம்பத்தில் பார்த்தவன், "ஏதாவது பேசு ஜனனி.." என்றான்
கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தவள், "இனிமே நா நிம்மதியா தூங்குவேன்.." என்றாள்.
"அன்னைக்கு அப்டி ஆனதுக்கு அப்புறம் நா சரியா தூங்குறது இல்ல. மறுபடியும் இந்த ரூம்க்கு வந்ததுக்கு அப்புறமும் கூட நா சரியா தூங்கல. உங்கள கட்டி புடிச்சிட்டு படுத்திருக்கும் போது கூட நா தூங்கல. அப்டியே தூங்கினாலும் அடி மனசுல ஒரு பயம் அழுத்திட்டே இருக்கும்.
மறுபடியும் கர்ப்பம் ஆனா கூட அவங்க மறுபடியும் என்ன ஏதாவது பண்ணிருவாங்களோன்னு பயந்துட்டே இருந்திருப்பேன். இனிமே நா பயப்பட தேவை இல்ல தைரியமா இருப்பேன். நிம்மதியா தூங்குவேன். உங்ககூட முழு மனசோட சந்தோசமா இருப்பேன். குழந்தை பெத்துக்குவேன்.." என்றவள் "என்ன ஆனாலும் உங்க கூட மட்டும் தான் இந்த வீட்டவிட்டு வெளியே போவேன்.." என்றவள் அவன் வயிற்றில் சாய்ந்து கட்டிக் கொண்டாள்.
ரிது அவளின் கெட்ட கனவு என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள். இப்போது அவள் இல்லை. அதனால் தான் நிம்மதியாக இருப்பேன் என்றும் சொல்லிவிட்டாள். ஜனனி பழைய இருப்பதே தனக்கு போதும் என்று நினைத்தான் வீர்.
கூந்தல் உலர்த்தி தலர்வான பின்னலிட்டவன் அவளை தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்து தானும் படுத்துக் கொண்டான். நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியான பயம் இல்லாத உறக்கம் இருவருக்கும். ஆனால் பெற்றெடுக்காவிட்டாலும் பிள்ளையாய் நினைத்த அன்னை உள்ளம் ஊமையாய் அழுதது.
இரண்டு வாரங்கள் கடந்து சென்ற நிலையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் ஆதிலா. குழந்தை தூக்கி கொஞ்சினாள் ஜனனி. ஜெஸ்வந்த் ஆதிலா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் கூறினர். நாட்கள் அப்படியே சென்றது.
ஒருநாள் இரவு...
போனில் எதையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த வீரை பின் பக்கமாக இருந்து கட்டி அனைத்தாள் ஜனனி. மென்மையான அவள் விரல்கள் தீண்டலில் சிலிர்த்தவன் அவளை திரும்பி பார்க்க, "என்ன தூக்கு.." இரு கைகளை தூக்கிக் கொண்டு கூறினாள்.
அவனும் தூக்கிக் கொள்ள, கன்னம் பற்றி முகம் முழுக்க முத்தமிட்டாள். நெற்றியில் முத்தமிட்டு அவன் முகம் பார்த்தவள், "கொஞ்சிக்கலாமா?" என்று கேட்க வேறு என்ன வேண்டும் அவனுக்கு. அவளோடு கட்டிக் கொண்டு கட்டிலை நிறைத்தான். மனம் நிறைந்த மன்னவன் தீண்டலில் தேனாய் உருகி, ஆடை நழுவி, அணைத்துக் கொள்ள ஆண்மையும் பெண்மையும் இணைந்து, மோட்சத்தை அடைந்து, புதியதோர் கிரகத்தில் சஞ்சரித்துவிட்டனர்.
நேரம் போவது தெரியாமல் பிண்ணி பிணைந்து கட்டிக் கொண்டவர்கள் மூச்சு வாங்கி பிரிந்தனர். அப்போதும் அவள் அவன் புஜத்தில் தள்ளியேற்றி படுத்திருந்தாள்.
"மறந்தே போயிட்டேன். அவங்கள என்ன பண்ணிங்க?" என்று கேட்க அர்த்தமாய் சிரித்தான்.
அவள் யாரை கேட்கிறான் என்று அவனுக்கு தெரியுமே.
"உனக்கு உயிருக்கு ஆபத்து இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவங்கள ரிலீஸ் பண்ணிட்டாங்க. மறுபடியும் அவங்களால உனக்கு எந்த தொந்தரவும் வர கூடாதுன்னு அவங்க ஐஞ்சு பேரையும் சுரங்க வேலைக்கு அனுப்பிட்டேன்.." என்றிட திடுக்கிட்டு விழித்தாள்.
"உழைப்புனா என்னன்னே தெரியாத அவங்க இனிமே உழைச்சு தான் சாப்பிடணும். அவங்களால அங்க இருந்து தப்பிக்கவும் முடியாது. என் ஆள் அவங்கள கண்கனிச்சுட்டே இருப்பான்.." என்றிட நிம்மதியாக இருந்தது அவளுக்கு.
பெற்றவர்கள் தான் ஆனால் பிறந்த ஈரம் காயும் முன்னே விற்றவர்கள். தன் உதிரத்தில் பிறந்த பிள்ளை என்று நினைக்காதவர்கள். பணம் காய்க்கும் மரமாக நினைத்தவர்கள். அவர்கள் மீது அவளுக்கு பாசம் எப்போதுமே இருந்ததில்லை. பச்சாதாபம் இருந்தது. அதுவும் கால போக்கில் இல்லாமல் போனது.
இப்போது அவர்களை வீர் கொலை செய்து போட்டிருக்கவில்லை. சாவு அவர்களுக்கான தண்டனையும் இல்லை. உழைப்பு, வியர்வை சிந்தி உழைப்பது எப்படி இருக்கும் என இனி அவர்களுக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டாள்.
நாட்கள் இனிமையாக சென்றது. காதலும், காமமுமாக இருவரும் ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி சென்றனர். வீர் அன்னை மட்டும் இன்னும் சோகமாகவே இருந்தார். ஜனனி அவர் அருகிலே இருந்து அவராவ் தேற்றினாள். காலப்போக்கில் ரிதுவை மறந்து சகஜமாகினார்.
அந்த நேரத்தில் ஜனனி தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக கூறி அவர்களை மகிழ்ச்சி படுத்தினாள். உண்மையில் அந்த செய்தி இருண்ட அவர்கள் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைப்பது போல இருந்தது. உச்சி நுகர்ந்து அணைத்துக் கொண்டார் வீர் அன்னை. அன்பு மனைவியை கட்டி தழுவிக் கொண்டான் வீர்.
ஜெஸ்வந்த்க்கும், லாவண்யாவுக்கும் விஷயம் சொல்ல பட ஓடி வந்தனர். ஜெஸ்வந்த் தவிர வேறு யாரையும் நம்பாத வீர் ஜனனி தோழி லாவண்யாவை மட்டும் நம்பினான். அவள் மட்டும் இல்லை என்றாள் ஜனனிக்கு என்ன நடந்தது என்றும் தெரியாமல் போயிருக்கும், ஜனனி தனிமையின் கொடுமை தாங்காமல் எப்போதோ இறந்து போயிருப்பாள். அல்லது பைத்தியம் ஆகி இருப்பாள்.
தான் இல்லாத நேரத்தில் ஜனனியை பார்த்துக் கொண்ட லாவண்யா, மகதி, லோகி அனைவருமே அவனுக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆகினர்.
வயிற்றை தள்ளிக் கொண்டு வந்த மகதியை பார்த்த வீர், ஜனனி, ஜெஸ்வந்த் கண்கள் லோக்கியை பார்க்க, "லவ் ஓவர் ஃப்லோவ் ஆகிடுச்சு.." தோள் குலுக்கி கூற சிரித்தனர் அனைவரும்.
நீண்ட வருடத்திற்கு பிறகு அந்த வீட்டில் நம்பிக்கைக்கு உரிய நல்லவர்கள் சூழ்ந்திருக்க சிரிப்பும் மகிழ்ச்சியும் பூவாய் பூத்து மனம் பரப்பியது.
முற்றும்.
எபிலாக்...
"ஜனனி... சீக்கிரம் வாயேன் டி.." கத்திக் கொண்டிருந்தான் வீர்.
"வந்துட்டேன்.." புடவையை கட்டிக் கொண்டு ஓடி வந்தாள் ஜனனி.
"என்னால இவங்கள சமாளிக்க முடியல.." பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாம் மாஃபியா தலைவன். அருகிலே அமர்ந்து சிரித்தான் குட்டி மாஃபியா. அதாவது வீர் மூத்த மகன். நான்கு வயதாகும் அர்ஜித்.
கட்டிலில் குட்டி வாண்டுகளாய் இரட்டையர்கள் ஹரி மற்றும் ஓம். ஜனனி வீர் காதலின் வெளிப்பாடாய் கருவில் வளர்கிறாள் வீர்ராவனின் அன்பு மகள். அவர்களுக்கு டயப்பர் போடுவதற்குள் அவன் படும் பாடு. படுத்தி வைத்துவிட்டார்கள் இருவரும்.
"நா பாத்துக்குறேன்.." என்று அவர்களுக்கு உடைமாற்றி விட்டாள்.
அர்ஜித்ம் வீரும் உடைமாற்றி தயார் ஆனார்கள். ஜனனி மீண்டும் தன் மருத்துவர் பணியை தொடர்கிறாள். அவளுக்குரிய பாதுகாப்பை பொறுப்பாக கவனிக்கிறான் வீர் ராவன். இன்று மகதி, லோகி திருமணம். ஒன்று அல்ல. இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிறகு கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்து இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. குழந்தைகள், அம்மா, மனைவியுடன் புறப்பட்டான் வீர்.
சோகத்தில் இருந்த அம்மாவை பிஸியாக வைத்துக் கொள்ள மூன்று குழந்தைகள் பெற்று அவர் சோகத்தை விரட்டியடித்துவிட்டான் வீர்.
ஜெஸ்வந்த் தன் மகள், மகன், மனைவியோடு வந்தான். பெரியவர்கள் ஆசியோடு தன் காதலியை, தன் குழந்தைகளின் அம்மாவை மனைவியாக கரம் பிடித்தான் லோக்கி.
தாலிகட்டி, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட, அனைவரும் கத்தி கூச்சலிட்டு சிரித்தனர். மகதிக்கு வெட்க வெட்கமாய் வந்தது.
"ரெண்டு புள்ள பெத்துட்டா அப்புறம் என்ன வெட்கம்?" என்று கேட்க அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
அனைத்தும் நல்ல படியாக முடிந்தது. இரவு குழந்தைகள் சூழ்ந்து உறங்கும் மனைவியை பார்த்தவன் அவளை மட்டும் தூக்கிக் கொண்டு சோஃபாவில் படுக்க வைத்து அவளோடு அணைந்து கொண்டான். "இதே பொழப்பா உங்களுக்கு.." தூக்கத்திலே அவள் கேட்க, ஆமா.. என்று கட்டிக் கொண்டான்.
ஆதிலாவும் குழந்தைகளும் சேர்ந்து ஜெஸ்வந்தை தனியாக படுக்க வைத்து விட்டனர்.தனியாக படுத்து புரண்டு புரண்டு பார்த்தவன் தலையை தூக்கி பார்க்க குழந்தைகளை அணைத்துக் கொண்டு உறங்கினாள் ஆதிலா.
"என்ன பத்தி கவலை படாம எப்டி தூங்குறா பாரு?" கடிந்து கொண்டே அவனும் தூங்கி போனான். நடு இரவில் மார்பில் ஏதோ அழுத்த தலையை தூக்கி பார்த்தான். அவள் தான். அவளாலும் தனியாக உறங்க முடியவில்லை. ஓடி வந்து விட்டாள் அவனிடம். சார் புன்னகையுன் அணைத்துக் கொண்டான்.
குடும்பத்திற்குள் எவ்வளவு கோபமும் பகையும் இருந்தாலும் அவர்கள் கொண்ட உறுதியான காதல் அவர்களை ஒன்று சேர்த்து, இரு குடும்பங்களின் பகையை ஒன்றில்லாமல் செய்து விட்டது. பகை கொண்டு முறைத்துக் கொண்டு திரிந்தவர்கள் இன்று பேர பிள்ளைகளை கொஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையான அன்பு க்கு அனைத்தையும் மற்றும் மகாசக்தி இருக்கிறது என்று ஜெஸ்வந்த் ஆதிலா நிரூபித்து விட்டார்கள்.
இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு முதலிரவு கொண்டாடி கலைத்து போய் உறங்கும் மனைவி அழகை ரசித்துக் கொண்டு அவள் அருகில் படுத்து தூங்கினான் லோக்கி. தனிமையில் யாரும் இல்லாத இருவரும் சேர்ந்து என்று குழந்தைகளுடன் வாழ்கின்றனர். இந்த பிறவிக்கு இது போதும் என்று தினமும் கடவுளுக்கு நன்றி கூறுகிறான் லோக்கி.
வாழ்க்கை என்னும் நதி எப்போதும் சீராக இருக்காது. சில நேரம் காட்டாறு போல நம்மை மளங்கடித்தாலும் பல நேரம் நம்மை இதமாக அழைத்து செல்லும். நம் இணையை நமக்கு காட்டி நம் வாழ்க்கையை சீராக செலுத்துவது வாழ்க்கை என்னும் நதி தான். எங்கோ சுற்றி திரிந்தாலும் நதி கடலை அடைவது போல வாழ்க்கை நதியும் நிம்மதியான இல்லரத்தை அடையும். அதற்கு பொறுமையும் காதலும் அவசியம்.
அதை சொல்லாமல் செயலில் மனதில் கொண்ட காதலில் காட்டிவிட்டான் வீர் ராவன். அவனை புரிந்து கொண்டு அவனுடன் ராவணன் மைதிலியாய் வாழத் துவங்கினாள் டாக்டர் ஜனனி.
மாஃபியா கணவனும் மருத்துவர் மனைவியுமாக தாங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ அடுத்த கதை எப்போது
பதிலளிநீக்குNo chance 😍😍😍😍😍😍சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻delay பண்ணாலும் மனசுக்கு நிறைவா குடுத்துட்டிங்க 😍😍😍😍😍😍
பதிலளிநீக்கு