Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

எங்கள் எழுத்தாளர்கள்

📚திவ்யஷோபனா

என் பெயர் திவ்யசோபனா. இதே பெயரில் தான் கதைகள் எழுதுகிறேன். சிறு வயதில் என் அன்னையிடமிருந்து ஏற்பட்ட வாசிப்பு ஆர்வம் புத்தகங்கள் மீதான விருப்பத்தை அதிகரித்தது. வார இதழ், மாத இதழ், குறுநாவல்கள் என் வாசிப்பு ஆர்வத்திற்கு தீனி போட்டது. வாசிப்பு ஆர்வம் ஒரு கட்டத்தில் எழுத்து ஆர்வமாக மாறியது. என் கற்பனையில் தோன்றிய கதாப்பாத்திரங்களுக்கு என் கதைகளில் உயிர் கொடுக்க ஆரம்பித்தேன். வாசகர்கள் வரவேற்பு சிறப்பாக இருந்ததை தொடர்ந்து முழு நேரமும் எழுத ஆரம்பித்தேன். சில தடைகள் வந்த போதும் தொடர்ந்து எழுதி கொண்டே இருக்கிறேன். குடும்பம், காதல், சைக்கோ, ஒரு தலை காதல், பாண்டஸி, அதிரடி ஆக்ஷன் கதைகள் என என் படைப்பு நீளுகிறது. நிறைய கதைகள் எழுதி இருந்தாலும் இன்னும் இன்னும் எழுத ஆர்வமும் கதை கருவும் நாளுக்கு நாள் புதிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவற்றையெல்லாம் கதையாக்கி விரைவில் உங்களுக்காக கதையாக படைப்பேன். நன்றி!

என்றும் உங்கள் ஆதரவோடு திவ்யசோபனா


📚பத்மினி நாராயணன் 

தெற்கத்திய மண்ணில் மகளாய் பிறந்து.. கொங்கு மண்டலத்தில்  மருமகளாய் வசித்து வரும்.. இன்றைய நவீன எழுத்துலகில் அடி எடுத்து வைத்துள்ள புதிய எழுத்தாளர் நான் உங்கள் பத்மினி நாராயணன்...

சிறு வயதிலேயே  நாவல்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் படிக்கத் தொடங்கி, அதன் பரிணாம வளர்ச்சியின்  தாக்கத்தினால் என் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கினேன்...

இன்றைய நவீன மயமாக்கபட்ட காலகட்டத்தில் நாம் கவனிக்க தவறிய குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நான் எழுதிய முதல் நாவல் உன்னில் உருகுகிறேன் கண்மணி...

இந்நாவல் பல்லாயிரக்கணக்கான வாசக நெஞ்சங்களை கட்டி இழுத்து, மேலும் நாவல்களை எழுத என்னை ஊக்கப்படுத்த அதன் வரிசையில் மயக்காதே மைவிழியே... அனலின் நிழலே...! என்னழகா...! இரும்பு இதயனின் அனிச்சம் மலரே..! விழிதனில் அரும்பிய மனமே..! முரணாய் வந்த ராட்சசியே..! சூரியகுமிழியின் சுந்தரதாகமே..! பாற்கரனில் உருகும் பார்த்தவியே..! கொஞ்சநாள் பொறு தலைவா..! ஆனால் என் அன்பே..? எனும் தொடர்களையும்,

அதன் தொடர்ச்சியாக இதோ, தற்போது காதலும் குடும்பமும் இணைந்த மனிதனின் வாழ்வை, இராவணனின் ரௌத்திரை இவள்..! தொடரில் தந்துள்ளேன் படித்து மகிழுங்கள்...


📚யாஷ் கார்முகில் 

வணக்கம், நான் யாஷ் கார்முகில்.
​ஒரு சாதாரண பொழுதுபோக்காகத் தொடங்கிய என் எழுத்துப் பயணம், இன்று என் தனித்துவமான அடையாளமாகவே உருவெடுத்து நிற்கிறது. குடும்பக் கதைகள், நகைச்சுவை, அறிவியல் புனைவு, உளவியல் நாடகம் (Psychological Drama), குற்றப் புலனாய்வு (Crime Thriller), காதல், திகில், சஸ்பென்ஸ் எனப் பல்வேறு பாணிகளில் என் பேனா தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
​ஒரே வகையான கதைக் களத்திற்குள் என்னைச் சுருக்கிக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை. நவரசங்கள் நிறைந்த நம் வாழ்க்கையை நாம் எப்படிப் பல கோணங்களில் ரசித்து வாழ்கிறோமோ, அதேபோல என் கதைகளும் பல வண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
​எழுத்து என்பது என்னை மட்டுமல்ல, வாசிக்கும் வாசகரையும் ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் மாயக் கருவி என நம்புகிறேன். என் கதையின் ஏதோ ஒரு புள்ளியில் — ஒரு கதாபாத்திரத்திலோ, ஒரு வரியிலோ அல்லது ஏதேனும் ஒரு உணர்விலோ — வாசகர்கள் தங்களைத்தாமே கண்டுகொள்ள வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம்.
​புத்தகத்தைப் புரட்டும்போது சில வினாடிகளாவது தங்களின் நிஜ உலகை மறந்து, கதையோடு ஒன்றிப்போய் அதன் ஒரு பகுதியாகவே வாசகர்கள் மாறிவிடுகிறார்கள் என்றால்... அந்தத் திருப்தியே ஓர் எழுத்தாளனாக எனக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த விருது!

ஆசிரியரின் பிறநூல்கள்                                                                                                                                                                                                                                                                                        1. மாயோனின் காரிகை அவள்
2. உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா? பாகம் 1
3. உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா? பாகம் 2 
4. முத்தம் நூறு வகையோ? 
5. என் விரல் தேடும் மெல்லிசை நீ 
6. அன்பு vs அன்பு 
7. தேன்மிட்டாய் காதலி 
8. மீண்டும் மீண்டும் தாலாட்டு 
9. கங்குவன் திதலி 
10. கரை தொடும் வரையில் 
11. சில்லாஞ்சிறுக்கியே 12.  எனக்குள் நானே 
13. அரகனின் இரை பதுமை
14. ஆஹா அழகாய் தொலைந்தேனே 
15. மதனோற்சவம் இரதியோடுதான் 

 ஆன்கோயிங் நாவல்ஸ்
16. நெருஞ்சி மலரோ? என மோக கானமோ?
17. தீ மீது வீணை  

📚தளிர் நிலா  
தென்தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். சிறுவயது முதலே வாசிப்பின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டவள். புத்தகங்களையே என் உலகமாகக் கருதி, கற்பனைகளோடு பயணித்த அந்த நாட்களே என்னை எழுத்துலகிற்குள் அழைத்து வந்தன.

நிகழ் வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் சம்பவங்கள், மனிதர்களின் உணர்வுகள் மற்றும் உறவுகளின் பல்வேறு பரிமாணங்களே என் கதைகளின் மையக் கருவாக அமைகின்றன. அன்றாட வாழ்வில் நிகழும் சிறு நிகழ்வுகளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளை என் கற்பனையுடன் இணைத்து நாவல்களாக வடிவமைத்து வருகிறேன்.

இதுவரை பதினான்கு கதைகளை எழுதியுள்ளேன். ஒவ்வொரு கதையும் எனக்கு புதிய அனுபவங்களையும், புதிய கற்றல்களையும் வழங்கியுள்ளது. வாசகர்களின் அன்பும் ஆதரவும் என்னைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்து வருகின்றன.

இன்னும் பல கதைகள் மூலம் உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் என் எழுத்துப் பயணம் தொடர்கிறது.

அன்புடன்,
தளிர் நிலா







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்