தீ மீது வீணை 22
அத்தியாயம் 22
ஏதோ குருக்ஷேத்திர கௌரவ சேனைபோல் தேனீகளோ வெஞ்சினத்துடன் படையெடுத்து வர, உயிருக்கு பயந்த ஜயத்ரதன் போல், "ஐய்யயோ ஒன்னு கூடிடுச்சுடா ஒன்னு கூடிடுச்சு.." என்று அலறியபடியே தெறித்து ஓடினான் கிரிஸ்டோபர்.
ஒருபக்கம், "நே தேட்ஸி! ஸ்தோய் ப்ரி மீரு! சே போஷ் தேகெல், தே போதோ செபெலே பிச்சிலே!" பதற்றத்தில் மார்கோ கத்த, "டேய், நில்லுடா! ஓடுனாதான் தேனீ கடிக்குமாம். மார்கோ சொல்றதைக் கேளு!" மறுபக்கம் மைக்கேல் மொழிபெயர்க்க, "ஏது... நிக்கிறதா? போய்யா! ஏன், உங்க வீட்டு தேனீக்கு என்ன ட்ரீட்டா கொடுக்கலாம்னு பார்க்கிறீயா? ஆஹாங்… முடியாது... முடியாது... ஓசியில கொடுக்க நான் ஒன்னும் ஓ பாசிட்டிவ் இல்ல, ஓ நெகட்டிவ்.” அந்நிலையிலும் வீர வசனம் பேசினான் கிரிஸ்டோபர்.
“உக்கும்… இது திருந்தாத கேஸு.” எரிச்சலில் தலையில் அடித்துக் கொண்ட மைக்கேல், “அப்படியே இந்தியாவுக்கே ஓடிடு. திரும்பி மட்டும் வந்துடாத!” என்ற கத்த, “ஐயோ பாஸ்! அப்படி மட்டும் சொல்லாதீங்க.” கதறியபடியே கிரிஸ்டொபர் ஓட, அவனது வேகத்திற்கு ஈடுக் கொடுத்து தேனீகளும் விரட்ட, ஒரு மினி கலவரமே அங்கே நிகழ துவங்கியது.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு மின்னலென ஓடியவன், தெரியாதனமாக அங்கிருந்த ஏரியில் பொத்தென்று தவறி விழுந்தான்.
விழுந்த வேகத்தில் நீரோ நாலாப்பக்கமும் சிதறிட, அவனை துரத்திய தேனீகளோ சிறிது நேரம் அவ்விடத்தை வட்டமடித்துவிட்டு தனது கூட்டை தேடி திரும்பின.
பயந்த விழிகள் பயந்தபடியே இருக்க, ‘தேனீகள் அனைத்தும் திரும்பி விட்டனவா?’ என பார்க்க வேண்டி, தலையை மட்டும் வெளியே தூக்கினான் கிரிஸ்டோபர்.
அவனது நடுக்கத்தையும் பயந்த விழிகளையும், அவனது தலைக்கு மேல், “ கிரிட் கிரிட்…” என சத்தமிட்ட தவளையையும் கண்ட, “ஹாஹா…” வாய் விட்டே சிரித்தாள் ரீனா.
அவள் சிரிப்பு ஆயுசு குறைவு போல, கிரிஸ்டோபரை விட்ட தேனீகள் ரீனாவிடம் திரும்பின.
“கீங்… கீங்…” என்றபடியே அது வர, இமைகள் படபடக்க, “ஆ…” என்று அலற போனவளின் வாயில் கை வைத்து அழுத்தினான் மைக்கேல்.
“டோண்ட் பெனிக்! ஜஸ்ட் ரிலாக்ஸ்… உஷ்… அமைதியா இரு.” காதுக்குள் கிசுகிசுத்தவன், ஆறுதலாய் அவளை இறுக அணைத்தும் கொண்டான்.
அவளின் கமல விழிகளை கண்டு மலர் என நினைத்துக் கொண்டன போலும், நேராக அவளின் விழிகளை நோக்கியே ரீங்காரமிட்டு அவைகள் வர, மிரண்ட விழிகளை இறுக மூடினாள் ரீனா.
மலரை நாடி வந்தவைகளோ இமை மீது மெதுவாக உரசி, கன்னத்தில் வந்து அமர்ந்தன.
ஒன்றிரண்டாகத் தொடங்கிய அவற்றின் எண்ணிக்கை, சிறிது நேரத்தில் ஐந்தாக... பத்தாக... மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
தேனீக்களின் ரீங்கார ஓசையோ அவளைச் சுற்றி வட்டமடிக்க, மூச்சு விடப் பயந்தவளாய் மைக்கேலின் மார்பில் ஒண்டினாள் ரீனா.
அவளது நடுக்கத்தை உணர்ந்தவன், "ரிலாக்ஸ்... பயப்பிடாத! நான் இருக்கேன்.” மெல்லிய குரலில் முணுமுணுத்தபடியே தைரியம் கொடுத்தான் மைக்கேல்.
என்ன தான் அவனது வார்த்தைகள் தைரியத்தை கொடுத்தாலும், இமைகளின் மேல் ஊர்ந்த தேனீக்களின் மெல்லிய தொடுகையில் அவளது விரல்கள் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டன.
அவ்விருவரையும் காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்தில், மார்கோ, எலினா, லூகா மூவரும் ஆளுக்கு ஒரு புகைப்பானை தூக்கி வந்தனர்.
“நே பொய் சே...” பயப்படாதே! என தங்கள் மொழியில் அவ்விருவருக்கும் தைரியம் ஊட்டியவர்கள், மெல்லப் புகையைப் பரப்பி தேனீக்களை விலக்கத் தொடங்கினர்.
வெண்மையான புகை மெல்ல தேனீக்களைச் சூழ்ந்ததும், ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவ்விருவரையும் விட்டு விலகின.
சில நொடிகளில் அவை அனைத்தும் மீண்டும் தங்களது கூட்டை நோக்கிப் பறந்து செல்ல, மார்கோவும் அவரது குடும்பத்தினரும் பெருமூச்சுடன் நிம்மதி அடைந்தனர்.
“ஸ்தாய் யெ வ்சே வ் ரெது!” இப்போது எல்லாம் சரியாகிவிட்டது! என்று கூறி மைக்கேலின் தோளைத் தட்டினார் மார்கோ.
அதன்பின்பே தன்னிலை உணர்ந்தவன், சட்டென அவளிடமிருந்து விலகி, “ஆர் யூ கே?” என கேட்டு அவளை ஆராய்ந்தான் மைக்கேல்.
அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய், மழையில் நனைந்த சிடுக்குருவி போல் நடுங்கிக் கொண்டிருந்தாள் ரீனா.
அவளின் அந்நிலையைக் கண்டு பதைபதைத்தவன், “நத்திங்... நத்திங்...” என்று ஆறுதல் கூற, பயத்தில் நடுங்கியவள் அவனது மார்புக்கூட்டிற்குள் தஞ்சம் புகுந்தாள்.
“ஏய்... அதெல்லாம் போயிடுச்சு! பயப்படாத! அதான் நான் இருக்கேன்ல...” என்று கூறி ஆறுதலாய் அவளது முதுகை வருடினான் மைக்கேல்.
பயம் இன்னும் விலகாதவளாய், சுற்றியிருந்தவர்களையும் மறந்து, மேலும் ஒண்டினாள் ரீனா.
“ப்ச்... என்ன பண்ற?” சுற்றியிருந்தவர்களைப் பார்த்து அசடு வழிந்தபடியே, செல்லமாய் அவளை அதட்டியவனின் கரங்கள் மட்டும் ஏனோ அவளை விட்டு பிரிய மறுத்தன.
முதுகை வருடியபடியே தர்மசங்கடத்தில் இவன் நெழிய, மொழி புரியாவிட்டாலும், மனித உணர்வுகளைப் புரிந்த மார்கோவும் அவரது குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
மைக்கேலின் தோளை மெதுவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, அவ்விருவருக்கும் தனிமை கொடுத்து அமைதியாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.
அவர்கள் சென்றதும், “ஏய்… ப்ச்… ஏய்… எல்லோரும் பார்க்கிறாங்க பாரு.” காதருகே கிசுகிசுப்பாய் பொய் கூறினான் மைக்கேல்.
அவனது அணைப்பும் நெருக்கமும் அவளோ ஏதோ செய்திட, பதில் பேச வேண்டியவளோ அமைதி காத்தாள்.
அவளுக்கு பதிலாக அவளது வெட்கம் அவனிடம் பேசியது.
கன்ன சிவப்புடன் தனது மார்பில் முகம் புதைத்திருக்கும் தன்னவளை ஆசையுடன் நிமிர்த்தி, “கேட்கிறேன்ல பயமா?” என்று வினவ, அவனது கைகளில் குலைந்து மார்பில் சாய்ந்தாள் ரீனா.
அவளது நெற்றி வகிடில் முத்தமிட்டு, இரு கையால் அவளது கன்னம் தாங்கி, “யூ வுட்ன்ட் மைண்ட் இஃப் ஐ கிஸ்டு யூ, வுட் யூ?" என்று இவன் வினவ, அவனுக்கு முன் அவனது சூடான மூச்சு காற்றோ, அவளது இதழை மெல்ல தீண்டியது.
“வுட் யூ?" மீண்டும் அவனோ வார்த்தைகளை அழுத்த, இதய துடிப்போ மெல்ல உயர்ந்தது ரீனாவிற்கு.
நாணமோ அவளை பிச்சு திங்க, அவனை காண முடியாமல் இமை மூடினாள் ரீனா.
அதையே சம்மதமென எடுத்துக் கொண்டு இவனோ அவளது இதழ் நோக்கி குனிந்தான்.
ஒரு நிமிடம் போது இதழ்கள் இரண்டும் இணைந்து கவிப்பாட.
அதற்குள் எப்போதும் போல் சிவ பூஜை கரடியாய், “பாஸ்…” என்று அலறியபடியே அவர்களை நோக்கி ஓடி வந்தான் கிரிஸ்டோபர்.
அவனுக்கு பின்னால் சிவப்பு நரிகள் சில ஓடி வந்தன.
“வாவ் வாவ்…” குரைத்தபடியே அவைகள் அவனை துரத்த, “ப்ச்…” என சலித்து, ரீனாவை தன்னிடமிருந்து விலகியவன், இமைக்கும் நொடிக்குள் கால் சட்டைக்குள் பதுக்கிய துப்பாக்கி எடுத்து வானை நோக்கி சுட்டான் மைக்கேல்.
அதில் மிரண்ட நரிகளோ, “கீகீ…” என்று அலறி காட்டுக்குள் சென்று மறைய, “பாஸ்… தேங்கிஸ் பாஸ்.” நிம்மதி பெருமூச்சு விட்டவனாய் மைக்கேலின் காலடியில் பொத்தென விழுந்தான் கிரிஸ்டோபர்.
காலடியில் விழுந்தவனை எரிச்சலுடன் பார்த்தான் மைக்கேல்.
‘கொஞ்சம் சந்தேசமா இருந்திட கூடாதே உடனே இவனுக்கு மூக்கு வியர்த்திடுமே.’ என நினைத்து பற்களை அரைத்தவன், “ஐயோ! உன்னோட எனக்கு பெரிய பேஜார போச்சு. இப்ப என்ன தான்டா பண்ணி தொலைச்ச? பாக்ஸ் ஏன் உன்ன தொறத்திச்சு?” சலித்தான்.
“அதான் பாஸ் எனக்கும் தெரியல. நான் பாட்டுக்கு சூசுவான தான் லேக்ல இருந்து வெளியே வந்தேன். எங்கிருந்தோ ‘உர்ர்…’னு ஒரு சத்தம் திரும்பி பார்த்தா, கூட்டமா சில நரிங்க, பாஸ்… உங்க பிஏவே, உங்க கிரிஸ்டோபர லஞ்சுக்கு யூஸ் பண்ணலாம்னு பாக்குதுங்க பாஸ்.” என்று வாயில் கை வைத்து குலுங்கினான் கிரிஸ்டோபர்.
அவனது முகபாவனைகளை கண்டு, ரீனாவோ வெடித்து சிரிக்க, “ப்ச்… நீ இருக்கியே!” வழக்கம் போல் அவளது சிரிப்பை கண்டு புன்னகைத்தான் மைக்கேல்.
இப்படியே சில நாட்கள் ஓடின.
அன்று லூகாவும் கிரிஸ்டோபரும் கால் பந்தாட்ட விளையாட்டை காண ல்யூப்லியானா சென்றுவிட்டன.
கால் பந்தாட்டம் பார்க்க போகும் ஆர்வத்தில் சமைத்து வைக்காமல் சென்றுவிட்டான் கிரிஸ்டோபர்.
அவன் சென்ற நேரம் பார்த்து இவளுக்கோ பசி வந்து தொலைக்க, சமையலறை வந்தவள், அடுப்பு ஏது? பாத்திரம் கழுவும் இயந்திரம் ஏது? என்று தெரியாமல் ஒவ்வொன்றாக திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னது... இது லைட்டர காணோம்?” என்று முணுமுணுத்தபடியே, மேடையின் ஓரத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்திட, "பீப்... பீப்... பீப்...! வீய்ய்ய்...!" என்ற சத்தம் வீடு முழுவதும் ஒலிக்க துவங்கியது.
அதில் பயந்து, “ஐயோ அம்மா…” என்று இரு காதையும் பொத்திக் கொண்டு இவள் அலற, “ஏய் என்னடி ஆச்சு?” என்னமோ ஏதோ என நினைத்து பதறியடித்துக் கொண்டு அவ்விடம் ஓடி வந்தான் மைக்கேல்.
தொடரும்...
Super super super super super super super super super super super super super super super super
பதிலளிநீக்குமிக மிக மிக நன்றி சிஸ்... ❤❤❤❤❤❤❤❤
நீக்கு