Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 18


அத்தியாயம் 18


கவ்வியவன், கடித்தான், மென்றான், திண்றான், திணறடித்தான், அவனது வலியை மழுங்கடிக்கும் கருவியென அவளை உபயோகித்தான். 

அவளும் விரும்பிய அவனுக்கு ஆகுதியானாள். 

அவன் உபயோகிக்க கருவியானாள். 

ஏன்? எதற்கு? புரியவில்லை அவளுக்கு? 

தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். தந்தையோ சிறையில் கம்பி எண்ணுகிறார். தம்பி? தம்பி எங்கே சென்றான்? எப்படி இருக்கிறான்? என யாருக்கும் தெரியாது.  

இவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கடமையும் அவளுடையதே. 

ஆனால்… 

ஆனால் ஏன் அவர்களை மறந்தாள்? தப்பிக்க வழி இருந்தும் ஏன் அதை துறந்தாள்? எதற்கும் பதில் இல்லை அவளிடத்தில். 

அவளின் நினைவுகள் மொத்தமும் அவனாகி போனான். 

அவனுக்கோ வெறும் இதழ் யுத்தம் போதவில்லை போலும். 

அவனது வலியை குறைக்க இன்னும்… இன்னும் வேண்டும் என்ற நிலையில் இதழை கொய்ந்தபடியே அவளை கீழே தள்ளி பக்கவாட்டில் படுத்தான்.  

விரல்கள் என்னும் ஆயுதத்தை அவளது மேனி எங்கும் ஆயவிட்டான். 

தீரா பசிக் கொண்ட அவைகளோ கன்றி சிவக்கும் அளவிற்கு அவளது மென் உடலை கசக்கி பிளிந்தன. 

சொல்ல போனால் அவளை துடிக்க விட்டன. 

துடித்தாள், துவண்டாள் இருப்பினும் அவன் தரும் இன்ப வதைகளை பொறுத்தருளினாள். 

அவளை அவ்வாறு துடிக்க வைத்தவன்,  வலி குறையவும்,  பசியாறிய குழந்தை போல் வாய் பிளந்தவாறு துயில் கொள்ள, தடதடவென சத்தமிடும் தொடர்வண்டிக்கு போட்டியாக அவனது மூச்சு காற்றும், “ஸீீீ... ஸீீீ…” என சீரான சத்தத்தை எழுப்பியது. 

அந்த சத்தம் அவன் ஆழ்நிலை தூக்கத்தில் இருக்கிறான் என்பதை அவளுக்கு சொல்லாமல் சொல்ல, மெல்ல அவனை அருகில் கிடத்திவிட்டு எழ முயன்றாள் ரீனா. 

அவனோ சிறுபிள்ளையென அவளது உடையை இறுக பற்றிக் கொண்டு தூங்க, அன்று அவனது அம்மா கூறிய வார்த்தைகள் இன்று அவளது செவிதனில் ரீங்காரமிட்டன. 

“ஐயோ இந்த மிகி இருக்கானே! அதான் நீ கட்டிக்க போறவன். தடிமாடு மாதிரி வளந்திருக்கானே ஒழிய கொஞ்சம் கூட விவரம் இல்ல டா.  மார்னிங் எந்திச்சதுல இருந்து நைட் தூங்க போற வரைக்கும் அம்மா அம்மானு என் உயிர வாங்கிடுவான். ஏழு கழுத வயசாகிடுச்சு, இன்னும் மார்னிங் டூத் பேஸ்ட்ட நான் தான் எடுத்துக் கொடுக்கிறேன். சாப்பாடு கூட நீ ஊட்டுனா தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிச்சா என்ன டா அர்த்தம்? அச்சோ முடியல டா. நீ எப்ப எங்க வீட்டுக்கு வருவ, எப்ப டா இவன உன் கையில பிடிச்சி கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம்னு இருக்கு.” என்று அவர் அங்கலாய்த்தை நினைத்துப் பார்த்து, “ஹும்…” மெல்ல இதழ் விரித்தாள்.   

ஒரு சென்டி மீட்டர் அளவிற்கு தான் இதழ் விரிந்திருப்பாள் அதற்கே அவன் அதகளம் செய்து வைத்த இதழ்கள் வலி கொடுத்தன. 

சிவந்து தடித்த இதழ்களை தடவியபடியே “ஸ்ஸ்…” என முணுமுணுத்தவள் மெல்ல அவனது கரத்தை தனது உடையிலிருந்து பிரித்தும் விட்டாள். 

உடனே அவன் தூக்க கலக்கத்தில் அசைந்திட, சிறு குழந்தையை தட்டிக் கொடுத்து தூங்க வைப்பது போல் அவனது தோள்களையும் தட்டி கொடுத்து தூங்க வைத்தவள், அவன் தூங்கிவிட்டான் என்பதை உறுதி செய்துக் கொண்டே மெல்ல எழுந்து அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள். 

களைந்த கூந்தலும், கசங்கிய உடையும் அவனது வலியின் அளவை அவளுக்கு பறை சாற்றின. 

‘பெயின்… பயங்கரமா இருந்திருக்கும் போல.’ அப்போதும் அவனை பற்றியே கவலை கொண்டாள் ரீனா. 

மலைகள் காடுகள் நீர்நிலையங்கள் என அனைத்தையும்  தாண்டி, தொடர்வண்டி தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொள்ள, பாவையின் விழிகள் மட்டும் ஏனோ அவனை விட்டு வர மறுத்தன.

மூடிச்சிட்ட புருவங்கள் அவனுக்குள் எஞ்சிய வலிகளை எடுத்துக் கூறிட, கரிசனத்துடன் மெல்ல அவனது கேசத்தை வருடிவிட்டாள். 

வருடிய கைகளை இரு கையால் அணைத்து, “ஏன் டி ஏன் எனக்கு இப்படியொரு துரோகத்த பண்ண?” தூக்கத்தில் அவன் புலம்ப, இவளுக்கோ இதழ்கள் இரண்டும் அழுகையில் துடித்தன.  

“ஏன் மைக்கேல் ஏன்? ஏன் என்ன நீ நம்ப மாட்டியா? நா… நான் உங்க அப்பா அம்மாவா கொல்வேனா?” சலனமின்றி தூங்கும் அவனிடம் நியாயம் கேட்டாள் ரீனா. 

பதில் சொல்ல வேண்டியவனோ கனவின் ஆழத்தில் தொலைந்து போயிருந்தான்.

“நான்… நான் உங்கள அணுவணுவா நேசிச்சவ மைக்கேல். உங்கள எனக்குக் கொடுத்த உங்க அப்பா அம்மாவ மட்டும் எப்படி நேசிக்காம போவேன்? எப்படி… எப்படி மைக்கேல் நான் உங்க அப்பா அம்மா சாவுக்கு காரணமா இருப்பேன்னு நீங்க நினைக்கலாம்? யார் யாரோ என்னவோ நினைச்சிட்டு போறாங்க. நீங்க… நீங்க என்ன தப்பா நினைக்கலாமா?” தனியாய் புலம்பியவளுக்கோ கண்ணீர் கன்னம் தாண்டியது. 

“அன்னைக்கு என்னை காதலிக்கிறதா சொன்னீங்களே மைக்கேல்... என்னை மனசார நேசிக்கிறதா சொன்னீங்களே மைக்கேல்... அதெல்லாம் பொய்யா? ஏன் மைக்கேல்? ஏன்? ஏன் எனக்குள் காதலை விதைச்சீங்க? ஏன் எனக்கு கல்யாண ஆசைய காட்டினீங்க? உங்களை முழுசா நம்பினேனே... அப்புறம் ஏன் என்னை கைவிட்டீங்க?” கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் வெறித்துப் பார்த்தவள்,

“ஓ ஜீசஸ்... இந்தப் பாழாப் போன காதலால நான் இன்னும் எவ்வளவு கொடுமையை அனுபவிக்கணும்? ஒவ்வொரு நாளும் அணுவணுவா செத்துட்டு இருக்கிறதுக்கு...” குரல் உடைய, “பிளீஸ்… தயவுசெய்து... என்னை மொத்தமா கொன்னுடுங்க. பிளீஸ்… கில் மீ அண்ட் சேவ் மீ...” என்று இரு கரங்களையும் கோர்த்தபடி வானத்தை நோக்கி கதறினாள் ரீனா.

கேட்க செவிகள் அன்ற வார்த்தைகளுக்கு உயிர் ஏது? உயர் இரத்த அழுத்ததைக் கூட்டிவிட்டு அவைகளோ செத்து மடிந்திட, “எனஃப் காட் எனஃப் இ… இதுக்கு மேல எ… என்ன சோதிக்காதீ…ங்…க” என்றபடியே மயங்கி  பொத்தென தரையில்  சரிந்தாள். 

பொத்தென சரிந்தவள் தொடர்வண்டியின் இரும்பு தரையின் குளிரில் அப்படியே உறைந்திட, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தான் மைக்கேல். 

“ப்ச்… யாரது? ஓ மை காட் ஹூ ஆர் யூ மேன்?” தூக்க கலக்கத்தில் இவனோ சத்தமிட, “பாஸ்! பார்டர் போலீஸ் பாஸ்போர்ட் செக் பண்ண வந்திருக்காங்க.” வெளியே நின்றவாறே குரல் கொடுத்தான் கிரிஸ்டோபர். 

“ம்ம்ம்… ஓகே! உள்ள வா.” ஆணையிட்டபடியே எழுந்து அமர்ந்தவனின் விழிகள் கீழே விழுந்து கிடக்கும் ரீனாவை பார்த்துவிட்டன. 

பார்த்த விழிகள் அதிர்ந்து விரிந்திட, “ஏய் ரீனா.” சட்டென அலறியவன் அவளிடம் விரைந்திட, “என்னாச்சு பாஸ்?” பதறியபடியே அவ்விடம் வந்தான் கிரிஸ்டோபர். 

“தெரியல…” என்றவாறு அவளை தூக்கி தனது மடியில் அமர்த்திக் கொண்டான் மைக்கேல். 

பேச்சு மூச்சின்றி இருந்தவளின் கன்னத்தை தட்டி தட்டி, “ரீனா ஹேய் என்னாச்சு டி உனக்கு?” என்று அழைத்துப் பார்த்தான். 

அவளிடத்தில் எந்த சலனமும் இல்லை.  

குளிரில் விரைத்துப் போய் கிடந்தாள். 

“ஐயோ என்னாச்சுனு தெரியலையே! கிரிஸ்டோபர்! கிரிஸ்டோபர்! சீக்கிரம் ஓடி போய் வாட்டர் எடுத்துட்டு வா.” என்று விரட்டியவன், “ஏய் ஒழுங்கா கண்ண தொற டி! நான் சொல்றேன்ல தொற! தொறக்கல… நான்… நான் உன்ன கொன்னுடுவேன் டி.”  காதலை கூட மிரட்டி தான் காட்டினான். 

“சொல்றேன்லே எந்திரி டி.” அவளின் தோளை குலுக்கியபடியே இவன் அரட்ட, “பாஸ்! வாட்டர்.” நொடியில் தண்ணீருடன் ஓடி வந்தான் கிரிஸ்டோபர். 

“ஹாங் கொடு.” கிட்டத்தட்ட கிரிஸ்டோபரின் கையிலிருந்த நீரை பறித்து ரீனாவின் முகத்தில் தெளித்துவிட்டான் மைக்கேல். 

சுள்ளென நீர் படவும் புருவம் சுருங்கியது ரீனாவிற்கு. 

“ஹப்பா…” அதன் பின்பே இவனுக்கு உயிர்ப்பு வர, பெருமூச்சு விட்டான். 

மீதி நீரை அவளுக்கு மருக கொடுக்க, “லபக் லபக்” என்று விழுங்கியவள் தொண்டை நனைத்ததும் அரை மயக்கத்தில் ஏதோ முணுமுணுக்க, “என்ன டி என்ன வேணும்?” வினவியபடியே அவளது வாய் அருகே இவன் காதை வைக்க,  “கி… கில் மீ பிளீஸ்…” என்றாள் குரல் கரகரக்க.  

“வாட் கி…” முதலில் புரியாமல் இமை இடுக்கியவன் புரிந்த பின் விழி விரித்தான். 

விரிந்த விழிகள் கலங்கி நீர் திரையிட்டன. 

கரங்களோ அவளை இன்னும் இறுக்கமாய் தனது மார்பு கூட்டுக்குள் புதைத்துக் கொண்டன. 

“ஹேய்…” நா தளதளத்தது. 

இதயம் படபடத்தது. 

இதை தானே விரும்பினான். 

அவளே தனது மரணத்தை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தான்.  

ஆனால் ஏன் அவள் சொல்லும் போது இவனுக்கு வலிக்கிறது? ஏன் உயிர் உடைக்கிறது? 

விசும்பலுடன் அவளது கன்னத்தோட இவனோ கன்னம் பதித்திட, அவனது இதய துடிப்போ அவளுக்கு தாலாட்டானது. 

ஆணவனின் உடல் கதகதப்பில் இதமாய் இவள் கண் மூட, கணமான போர்வையால் அவளோடு சேர்த்து தன்னையும் மூடிக் கொண்டான். 

கிரிஸ்டோபரோ எல்லை பாதுகாப்பு படையினரிடம், பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களை காட்டிவிட்டு இவனுக்கு அருகில் வந்தமர்ந்தான். 

“எனி பிராப்ளம்?” வந்தமர்ந்தவனிடம் மைக்கேல் வினவ, “நோ பிராபளம் பாஸ். பாஸ்போர்ட், விசா எல்லாம் வெரிபை பண்ணி அனுப்பிட்டாங்க.” என்றான் கிரிஸ்டோபர் அமைதியாக. 

“ம்ம்…” என்றதுடன் மைக்கேல் அமைதியாகிட, “பாஸ் நா… நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது.” பீடிகையுடன் ஆரம்பித்தான் கிரிஸ்டோபர். 

“ம்ம்… சொல்லு.” உடனே இவன் அனுமதி வழங்க, “எனக்கு என்னமோ மேடமா பாத்தா தப்பானவங்க மாதிரி தெரியல. இன் ஃபாக்ட் சிஸ் இஸ் வெரி இன்னசெண்ட். எங்கேயோ தப்பு நடக்குது? யாரோ மேடமுக்கு எதிரா ஸ்டோரி கிரியேட் பண்றாங்க.” மனதில் பட்டதை பட்டென போட்டுடைத்தான் கிரிஸ்டோபர். 

விழிகள் சிவக்க, “யு ஆர் ரைட். சம்திங் இஸ் ஃபிஷி. யாரோ பின்னாடி இருக்காங்க. அவங்க யாருன்னு கண்டுபிடிக்கிற நாள்... அவங்களோட கடைசி நாளா இருக்கும்.”  என்றவனின் உடல் மெல்ல இறுகியது.  


தொடரும்… 

கருத்துகள்

  1. செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது 🫰

    பதிலளிநீக்கு
  2. 😍❤️ ரொம்ப சந்தோஷம் சிஸ்... இனி வரப் போகும் அத்தியாயங்களும் உங்களை ஏமாற்றாது என்று நம்புகிறேன். 🤞✨

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊

பிரபலமான இடுகைகள்