Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 9

 அத்தியாயம் 9



தோழிகள் இருவரும் அதிர்ந்து போய் வாசலை பார்க்க,



“மேடம்… மேடம்…” என்றபடியே அவ்வறைக்குள் நுழைந்தாள், தலைமை பணிப்பெண் டெய்சி.



மைக்கேலின் பங்களாவில் பல பணிப்பெண்கள் உண்டு. அவர்கள் அனைவரையும் நிர்வகிக்கும் பொறுப்பை டெய்சி தான் ரொம்ப காலமாக செய்து வருகிறாள்.



நாற்பதை கடந்துவிட்ட பெண்மணி என்பதால் சாம்பல் நிற சீருடையை தாண்டி தொந்தி தெரிந்தது.



அவளையும் அவளது சீருடையையும் கண்ட பின் தான் இவ்விருவருக்கும் நிம்மதியே…



அறையை திறந்துகொண்டு வந்தவள் வேலைக்காரி தான் என நினைத்து, இருவரும் ஒருசேர நிம்மதி பெருமூச்சு விட, “மேடம்… சாப்பிட ஜூஸ் ஏதாவது கொண்டு வரட்டுமா?” மரியாதையுடன் செரீனாவிடம் விசாரித்த டெய்சி, அருகில் நின்ற ரீனாவை வெறுப்புடன் பார்த்தாள்.



“அதை கேட்க இப்படித்தான் கதவை தட்டாம உள்ள வருவியா? வில்லேஜ் பம்கீன்!” என செரீனா திட்ட, அவளோ முகம் சுளிக்க, “சாரி மேடம்…” பதிலுக்கு டெய்சியோ அசடு வழிய, “ம்ம்ம்… சரி ஆப்பிள் ஜூஸ் கொண்டு வா.” என்றாள் செரீனா அதிகாரமாக.



அதை கேட்டதும் சிரித்தபடியே,


“ம்ம்… சரிங்க மேடம்.” என பணிவாய் அவளிடம் தலையாட்டியவள், ரீனாவிடம், 


“ஏய்! நீ இங்க என்ன பண்ற?” என ஒருமையில் பேசினாள்.



அதுவரை அங்கே நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரீனாவோ டெய்சி அரட்டவும் அதிர்ந்து விழிக்க,



“என்ன பார்க்கிற? போ! சார்… உன்ன ஃபஸ்ட் நைட் ரூமை ரெடி பண்ண சொன்னாங்க.” ஏதோ நாயை விரட்டுவது போல் சிறிதும் மரியாதையின்றி விரட்டினாள், டெய்சி.



பிறந்த வீட்டில் இளவரசி போல் நடத்தப்பட்ட ரீனாவின் விழிகள் வேலைக்காரியின் குத்தல் பேச்சில் கலங்கி தவித்தன.



மருமகளாக ஆள வேண்டிய இடத்தில், இன்று இப்படியெல்லாம் வாழ வேண்டிய நிலை தனக்கு வந்துவிட்டதே என நினைத்து கண் கலங்கியவள், கண்ணீரை தனது தோழியிடம் காட்ட விரும்பாமல் வேக வேகமாக அவ்வறையை விட்டு வெளியேற, போகும் அவளை வெறுப்புடன் பார்த்தாள், டெய்சி.



“க்கும்… வந்துட்டா.” என முணுமுணுத்து இதழ் சுளித்த டெய்சியோ,



பின் சினேகத்துடன் செரீனாவை பார்த்து, “மேடம்… இவகிட்டயெல்லாம் பேச்சு வச்சுக்காதீங்க.” என சொல்ல, “ஏன்?” என கேட்டு புருவம் உயர்த்தினாள், செரீனா.



விடை தெரிந்தே பணிப்பெண்ணின் மனதில் இருப்பதை அறிய வேண்டி இவ்வாறு அவள் கேட்டு வைக்க,



“இவ நம்ம சார் குடும்பத்தையே நாசம் பண்ணவ மேடம். பெரிய்யாவும் அம்மாவும் எவ்வளவு நல்லவங்க? அவங்கள போய் கொல்ல இவளுக்கும் இவ குடும்பத்துக்கும் எப்படி தான் மனசு வந்ததோ?” என பொரிந்து தள்ளினாள், டெய்சி.



பதிலுக்கு வாதாடாமல், விட்டேற்றியாக, “ஓ அப்படியா?” என்பதுடன் இவளோ முடித்துக் கொள்ள, “ஓகே மேடம். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் ஜூஸ் கொண்டு வர்றேன்.” அசடு வழிய பணிவாய் விடைப்பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள், டெய்சி.



இதற்கிடையில் சோகமே திரு உருவாய் அவ்வறையிலிருந்து வெளியே வந்த ரீனாவை பார்த்து, சில பணிப்பெண்கள், “இப்படியும் சில பொண்ணுங்க இருக்காங்க பாரு.” என்றும், “ச்சே இவ முகத்துல முழிச்சாலே பாவம்.” என்றும், இன்னும் என்னென்னவோ பேசி செல்ல, அதுவரை கலங்கி நின்ற விழிநீர் இப்போது இமை தாண்டி வெளியே குதித்திட, கூனி குறுகினாள், ரீனா.



ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவசொற்களை பேசி அவளை காயப்படுத்தினர்.



பல பேர் சேர்ந்து அடிக்கும் போது எதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்ற தெளிவில்லாமல் இவளோ கூனி குறுகி சுவரோட சுவராக பதிந்திட, செரீனாவிடம் பேசிவிட்டு அவ்வறையை விட்டு வெளியே வந்த டெய்சியோ பல்லி போல் சுவரோட ஒட்டி நின்ற ரீனாவை பார்த்து பற்களை அரைத்தாள்.



“ஏய்… இன்னும் இங்க என்னடி பண்ற? போ! போய் ரூம் ரெடி பண்ணு.” என அரட்டி விரட்ட, வேறு வழியின்றி கண்ணீரை துடைத்தபடியே அலங்காரம் செய்ய வேண்டிய அறைக்குள் மெல்ல நுழைந்தாள், ரீனா.



மற்ற பணிப்பெண்களோ அவளுடன் வேலை செய்ய விருப்பமின்றி, அதே நேரம் முதலாளி குடும்பத்திற்காக ரீனாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவ்வறைக்கு வெளியே அதுவும் அவளை பார்த்தபடியே காத்திருந்தனர்.



அவள் செய்யும் சின்ன தவறுக்கெல்லாம், “ஆள மயக்க தெரியுது. இது உனக்கு தெரியாதா!” என்றும், “இவளுக்கெல்லாம் அடுத்த வீட்டை கெடுக்க மட்டும் தெரியும் போல.” என்றும் வசைப்பாடினர்.



அத்தனை ஏச்சு பேச்சுகளையும் சகித்துக் கொண்டு, அவ்வறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்காரம் செய்தாள், ரீனா.



அவர்களின் வசவு சொற்கள் கூட அந்த அளவிற்கு அவளுக்கு வலிக்கவில்லை. அதை விட பல மடங்கு வலி… அவள் விரும்பியவனுக்கும், அவளது தோழிக்குமே முதலிரவு… அந்த முதலிரவு அறையை அவள் அலங்கரிக்க வேண்டிய நிலை வந்ததே என்று எண்ணும் போது யாரோ அவளது இதயத்தை ஈட்டியால் குத்தி கிழித்த உணர்வு.



மூச்சு முட்டியது.



எல்லா பெண்களைப் போல அவளுக்கு அவளது முதலிரவை, தனக்கு பிடித்த ஒருவனுடன் கொண்டாட வேண்டும்.



வெட்கத்தில் கன்னம் சிவக்க, தயங்கி தயங்கி அவ்வறைக்குள் மெல்ல நடந்து வர வேண்டும்.



கையில் பற்றிய பால் செம்புடன் தனது கரத்தை பற்றி இழுக்க வேண்டும்…



அப்படி இழுத்து தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டு ஏதேதோ அவன் கதை பேச வேண்டும்.



அவன் போடும் மொக்க ஜோக்குக்கெல்லாம் கன்னம் சிவக்க சிரிக்க வேண்டும்.



அதை கண்டு அவன் ரசிக்கவேண்டும்.



அதே ரசனையுடன் அவளது கரத்தை பிடிக்க வேண்டும்.



அவன் தொட்டதும் இவள் மிரள வேண்டும்.



அவளது மிரட்சியை போக்க, மெல்ல நெருங்கி வந்து அவன் முத்தமிட வேண்டும் என ஏதேதோ கனவுகளுடன் காத்திருந்தவளுக்கும் இன்று வெறும் கண்ணீர் மட்டுமே எஞ்சியது.



புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துச் செல்வது போல புதிய உறவு பழைய உறவையும் சேர்த்து அழித்ததை எண்ணி கலங்குவதா? கண்ணீர் வடிப்பதா? இல்லை… இதுவும் கடந்துப் போகும் என்ற ஜென் நிலைக்கு செல்வதா? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.



ரோஜா, மல்லிகை, முல்லை, நந்தியாவட்டை என விதவிதமான பூக்களை மெத்தை மேல் தூவி, பக்கவாட்டு மேஜையில் பால், பழங்கள், இனிப்புகளை அடுக்கி, அறை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு ரீனாவோ



வெளியே வர, சிவப்பு நிற ஜார்ஜெட் புடவையில், ஆளை மயக்கும் அலங்காரத்துடன் எதிர்ப்பட்டாள், செரீனா.



அவளை அவ்வாறு அந்நிலையில் கண்டதும், முதன்முறையாக தன்னை மற்றோரு பெண்ணுடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணம் தோன்றியது, ரீனாவிற்கு.



‘ஹும்… கொடுத்து வச்சவ.’ தன்னை அறியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டாள், ரீனா.



அது பொறாமையால் வந்த உணர்வா? இல்ல உள்ளே கிடங்கில் உறைந்து கிடந்த ஏக்கமா? என்பதை அவளே அறிவாள்.



தனக்குள் நிகழும் உணர்வு மாறாட்டத்தை வெளிக்காட்ட விருப்பமின்றி, குனிந்து விலகி இவள் நடக்க, வழியில் வந்துப் பேசினாள், செரீனா.



“ஞாபகம் வச்சுக்கோ ரீனா! இன்னைக்கு நைட்டே எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சிடு.” என்றாள், காதருகே கிசுகிசுப்பாக.



போதாக்குறைக்கு சுற்றி முற்றி பார்த்தபடியே, ஒரு பழைய பொத்தான் கைப்பேசியை இவளது கரத்தில் அவள் திணிக்க, ‘எதுக்கு?’ என்பது போல் புருவம் உயர்த்தினாள், ரீனா.



“ஹாங்… கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு மெசேஜ் பண்ணு. மறந்துடாத!” என்றுவிட்டு அவள் அகல, ஒரு நிமிட யோசனைக்கு பின் கைப்பேசியை தனது உடைக்குள் மறைத்துக் கொண்டு எங்கு செல்வது? என்ன செய்வது? என்று தெரியாமல் இவளோ பேந்த பேந்த விழிக்க, “ஏய் ரீனா! இன்னும் அங்க என்னடி பண்ணிட்டு இருக்க? சீக்கிரம் இங்க வா… சார கிளப்பனும்.” சிடுசிடுப்பாய் அழைத்தாள், டெய்சி.



சத்தம் கேட்டு பதறியவள், தயங்கியபடியே அவளிடம் செல்ல, “ஒரு வேலையும் செய்யாம ஓசி சோறு திங்கலாம்னு நினைக்கிறியா? போடி போ வேலைய பார்.” தலையை கொட்டி மைக்கேலின் அறைக்குள் டெய்சி அனுப்ப, வியர்வை பூத்துக் குழுங்க, இதயம் படபடக்க அவ்வறைக்குள் நுழைந்தாள், ரீனா.



மைக்கேலோ வெறும் துண்டுடன் ஒப்பனை மேசை முன் கம்பீரமாய் அமர்ந்திருந்தான்.



அப்போது தான் குளித்துவிட்டு வந்திருப்பான் போல சோப்பின் மணம் அவ்வறை எங்கும் நிறைந்திருந்தது.



அவனை சுற்றிலும் பணியாளர்கள் பலர், அவன் அணிய வேண்டிய ஆடை அணிகலன்களோடு காத்திருக்க, கண்ணாடியூடே அவளை கண்டுவிட்டு ஏனைய பணியாளர்களை கண் ஜாடை காட்டி வெளி அனுப்பினான், மைக்கேல்.



அவர்களும் குறிப்பறிந்து வெளிநடப்பு செய்ய, என்ன நடக்கிறது என்பதும் புரியாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியாமல், திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் இவள் முழிக்க, “ஏய்… இங்க வாடி.” என சத்தமிட்டான், மைக்கேல்.



எஸ்பிபி போல் இனிமையாக இருந்த அவன் குரல் ஏனோ இன்று கர்ண கொடூரமாக ஒலித்தது, ரீனாவிற்கு.



அவன் குரல் கேட்டு உதறல் எடுக்க, தொண்டைக்குழி ஏறி இறங்க, மெல்ல நடந்து அவனிடம் சென்றாள், ரீனா.



“இந்தா இத பிடி.” என்றவன் அவன் அணிய வேண்டிய ஆடைகளை அவளது கையில் திணிக்க, அவளது கரமோ தன்னிச்சையாக அவன் இட்ட வேலைகளை சத்தமின்றி செய்தது.



கால் சட்டை முதற்கொண்டு அனைத்தையும் அணிவித்தவள் இறுதியாக அவனது கரத்தில் கை கடிகாரத்தை அணிவிக்க, “ஏன்டி அன்னைக்கு நான் உன்ன சேட்டிஸ்பைட் பண்ணேனா?” பார்வை அவளை அளவிட, ஒரு விரலால் நெற்றியை நீவியபடியே வினவினான், மைக்கேல்.



சட்டென அவன் கேட்ட கேள்வியில் இவளுக்கோ பொறை ஏறிக்கொள்ள, “க்கும்…க்கும்…” என செருமினாள், ரீனா.



“ஹும்… ஆக்டிங் ஆர்கானிசம்.” இதழ் பிதுக்கியவன், “எந்த பொசிஷன்ல நான் பேட்டரா பெர்பார்ம் பண்ணேன்.” அடுத்த கேள்வியை இவ்வாறு கேட்டு மேலும் அவளை திணறடித்தான்.



உடனே வெட்கம் வந்து அப்பிக் கொள்ள, “ஏ… ஏன் அப்படி கே…கேட்கிறீங்க?” என்றாள் இவள் திக்கி திணறி.



“இல்ல… ஃபஸ்ட் நைட் ரூமுக்கு போறேன். என் வைஃபை நான் செட்டீஸ்பை பண்ணனும்ல அதான் கேட்கிறேன். ம்ம் சொல்லு நான் அந்த விசயத்துல எப்படி?” மர்ம புன்னகையுடன் அவன் வினவ, இதயம் நொறுங்க, விழிநீர் மட்டும் கேட்பாரின்றி சாரை கட்டின.


தொடரும்..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்