தீ மீது வீணை 8
அத்தியாயம் 8
காதைப் பிளக்கும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுப் பயந்து போன உறவினர்களோ ஆளுக்கு ஒரு திசையில் தெறித்து ஓடினர்.
மைக்கேலின் ஆட்கள் சிலர் ரீனாவை தூக்கிச் செல்ல, மற்றும் சிலர் செரீனாவை பத்திரமாய் அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
இறுதியில் சில அடியாட்களுடன் மைக்கேலும் டேவிட்டும் எஞ்சியிருக்க,
இரத்தம் சொட்ட சொட்ட, குண்டடி பட்ட கரத்தை உதறியபடியே, “யூ? மைக்கேல்?” என அதிர்ச்சியில் புருவம் உயர்த்தினான், டேவிட்.
அதுவரை துப்பாக்கி முனையை நிதானமாகத் தனது கைகுட்டையால் துடைத்துக் கொண்டிருந்த மைக்கேலோ, டேவிட்டின் குரல் கேட்டதும், “ஹும்…” என வெற்று புன்னகையை இதழோரம் உதிர்த்தான்.
அதில் அந்தப் புன்னகையில் கடுப்பான டேவிட்டோ,
“ஹும்… இவ்வளவு நடந்த பிறகும் எப்படி உன்னால சிரிக்க முடியுது? அவளால தான் உன் அம்மாவும் அப்பாவும் இறந்தாங்க. அவளால தான் என் பொண்டாட்டி இன்னைக்கு கோமால கிடைக்கிறா, அவளால தான் என் பொண்ணு இன்னைக்கு ஹிஸ்டீரியாவால பாதிக்கப்பட்டிருக்கா. அதெல்லாம் மறந்துப் போச்சா மைக்கேல்? ஹாங் சொல்லு மறந்துப் போச்சா?” உச்ச ஸ்தானத்தில் கத்தினான், டேவிட்.
“சோ… அவள போட்டுத் தள்ளிடலாம்னு சொல்றீயா?” நிதானமாகக் கேட்டான், மைக்கேல்.
மைக்கேலின் அமைதியும் நிதானமும் டேவிட்டின் கோபத்தை பன்மடங்காக்கியது.
ஒரு கசந்த புன்னகையுடன், “ம்ம்ம்… புரிஞ்சு போச்சு… எனக்கு இப்ப நல்லாவே புரிஞ்சு போச்சு.” தலையாட்டியவன் ஆழ ஒருமுறை மைக்கேல் பார்த்துவிட்டு, “ஹும் காதல்… காதல் உன் கண்ண மறச்சிடுச்சுல்ல.” என்றான் நக்கலாக.
பதில் பேசாது துப்பாக்கியைத் துடைக்கும் வேலையை மைக்கேல் கவனிக்க, “அதான் அவ இவ்வளவு பண்ண பிறகும் அவள ஒன்னுமே பண்ணாம வச்சிருக்க. ஹும்… இதே உன் இடத்தில நான் இருந்தா… என்ன பண்ணிருப்பேன் தெரியுமா? வெட்டிக் கூறு போட்டிருப்பேன். ஆனா நீ?” எரிச்சலுடன் டேவிட் குற்றம் சாட்ட, மூண்ட கோபத்தில் சட்டென அவனது சட்டையைப் பிடித்தான், மைக்கேல்.
“என்ன சொன்ன என்ன சொன்ன? சே இட் அகைன்.” பெரும் ஆவேசத்துடன், “கொன்னுட்டா அவள கொன்னுட்டா எல்லாம் சரியா போயிடுமா? என்னவிட்டு போன என் அம்மாவும் அப்பாவும் திரும்ப வந்திடுவாங்களா? இல்ல என்ன விட்டுப் போன என் சந்தோசமும், மன நிம்மதியும் தான் எனக்கு மறுபடியும் கிடச்சிடுமா ஹாங ?” என்று கத்த, “அப்ப அவள அப்படியே விடப் போறீயா?” பதிலுக்குச் சீறினான், டேவிட்.
“ஹும்… அப்படினு யார் சொன்னா?” தனிவாக மைக்கேல் புருவம் உயர்த்த, புரியா பார்வையுடன் அவனை ஏறிட்டான், டேவிட்.
“டேவிட்… உனக்கு இந்தப் பிஸ்டல் யாரோடதுனு தெரியும்ல. அப்பாவோடது… மிஸ்டர் ராயப்பனோடது… ஊருக்காகவும் ஊர் மக்களுக்காகவும் பல பேர, இதாலேயே சுட்டு தள்ளிருக்கார். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுனு சொல்வாங்க. அப்படி போயிருந்தா கூட நான் இந்தளவுக்கு வருத்தப்பட்டிருக்க மாட்டேன். போயியும் கார்ல அடிபட்டு இல்ல செத்துட்டார்… சிங்கமா சாக வேண்டியவர், தெரு நாய் மாதிரி அடிபட்டுல செத்துப் போனாரு.” நா தளதளக்க கூறியவனின் கண்கள் ஏனோ அநியாயத்திற்கு சிவந்து கலங்கின.
அவனைப் போலவே டேவிட்டும் கண் கலங்க, “இந்தா இந்த ட்ரிகரை ஒருதடவை அழுத்தினபோது அவ நிம்மதியா மேல போய்ச் சேர்த்துடுவ? அப்படி அவ சாகலாமா? உஹும் சாகக் கூடாது தினம் தினம் என் கையால சித்திரவதை அனுபவிச்சி அணுவணுவா சாகனும்.” எனப் பற்களை அரைத்தவன் மேற்கொண்டும் தனது வன்ம பேச்சைத் தொடர்ந்தான்.
“சாவு கூட ஒருவகையில விடுதலை தான் டேவிட், அந்த விடுதலை கூட அவளுக்குக் கிடைக்க கூடாது. நித்தம் நித்தம் என்ன கொன்னுடு மைக்கேல்’னு அவ என்கிட்ட கெஞ்சனும். கெஞ்ச வைப்பேன்.” என முடித்தவனின் குரலில் டன் கணக்கில் குரூரம் தெரிந்தன.
இரத்தவெறி கொண்ட மிருகமாய் இங்கே இவன் பசியோடு காத்திருக்க, சிங்கத்தின் வாயில் சிக்கிய புள்ளிமானாய் அவள் அவனது பங்களாவில் பாதி மயக்க நிலையில் படுத்திருந்தாள்.
படுத்திருந்தாள் என்று சொல்வதை விடச் சுருண்டு கிடந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
போட்டிருந்த வெள்ளை நிற அங்கி கூட கசங்கி கிடந்தது.
பாவைகளோ இமைக்குள் அங்கும் இங்கும் ஓட, சுற்றிலும் பேய்களும் பிசாசுகளும் வட்டமடிப்பதாகத் துர்சொப்பனம் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள், ரீனா.
இரத்தம் சொட்ட சொட்ட நாக்கை தொங்கப்போட்டு அலையும் அப்பேய்களையும் பிசாசுகளையும் கனவில் கண்டுவிட்டு,
“நோ… நோ… வேணாம் வேணாம் விட்டுடுங்க… பிளீஸ் என்ன விட்டுங்க…” என்றலறியபடியே விழி திறந்தாள்.
அவளுக்கு முன் செரீனா அமர்ந்திருக்க, பயத்தில் வியர்க்க விறுவிறுக்க நடுங்கியபடியே எழுந்தவள் செரீனாவை எதிரே கண்டதும் வந்த கோபத்தில் முகத்தைச் சுளித்தாள்.
அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத செரீனாவோ, “ஏய் ரீனா ரிலாக்ஸ்… ரிலாக்ஸ் டி…” என்றபடி தண்ணீர் குவளையை எடுத்து நீட்ட, ‘போயியும் போயியும் ஒரு துரோகியின் கையில் நீர் அருந்துவதா?’ என நினைத்து இவளோ முகத்தைத் திருப்ப, “ஏன் டி என்மேல கோபமா?” எனக் கேட்டுக் கண் கலங்கினாள், செரீனா.
தோழி கண் கலங்கவும் இரக்கமே வடிவான ரீனாவின் கண்களும் கலங்க தான் செய்தன.
கைகள் கூடச் செரீனாவை அடக்கத் துடித்தன. இருப்பினும் தனது வாழ்க்கையில் பங்கு போட வந்தவள் இவள் என்ற நினைப்பு வரவும் திருப்பிய முகத்தைத் திருப்பியபடியே இவள் இருக்க, “ரீனா! பிளீஸ் டி… ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ. ஐயோ எனக்கு உன்ன மைக்கேலட்ட இருந்து காப்பாத்த வேற வழி தெரியல டி. அதான்… அதான் அவர் என்ன கல்யாணம் பண்ணிக்கிறீயா'னு கேட்கவும் சரி'னு தலையாட்டிட்டேன்.” வழிய வந்து ரீனாவின் கன்னம்பற்றிக் கெஞ்சுவது போல் பேசினாள், செரீனா.
‘என்ன காப்பாத்தவா?’ குழப்பத்துடன் ரீனா அவளை ஏறிட்டு பார்க்க, “ஆமா ரீனா! உனக்கு மைக்கேல் பத்தியும் அவரோட பேமிலிய பத்தியும் நல்லவே தெரியும் தான? அவங்க எல்லாம் எந்தப் பலி பாவத்துக்கும் அஞ்சாதவங்க டி. அதான் நான் அன்னைக்கே உன்கிட்ட மைக்கேல் உனக்கு வேணாம் ரீனா, அவரும் அவங்க பேமிலியும் உனக்கும் உங்க பேமிலிக்கும் சரிபட்டு வராதுனு படிச்சு படிச்சு சொன்னேன் நீ தான் என் பேச்சைக் கேட்கவே மாட்டேன்னுட்ட.” குறைப்பட்டுக் கொண்டவள் மேலும் பேச்சைத் தொடர்ந்தாள்.
“ஹும்… சரி விடு உன்ன சொல்லியும் ஒரு பிரயோஜனம் இல்ல. லவ் உன்ன அந்தளவுக்கு மாத்திடுச்சு. பட் மைக்கேல் உன் அளவுக்கு உன்ன லவ் பண்ணலையே. பண்ணிருந்தா, நீ தான் அவங்க அப்பா அம்மா சாவுக்குக் காரணமானு நினைப்பாரா?” என்று அவள் கேட்க, “ச்சே ச்சே அப்படி சொல்லாத செரீனா. மைக்கேல் நீ நினைக்கிற மாதிரி இல்ல. ஏதோ கோபத்துல இப்படியெல்லாம் நடந்துக்கிறாரே ஒழிய அவருக்கு என் மேல லவ் இல்லாம இல்ல டி.” ஏனோ அவன் அவ்வளவு செய்தும் அவனை மற்றவரிடம் விட்டுக் கொடுத்துப் பேச
பிடிக்கவில்லை ரீனாவிற்கு.
முடிந்தமட்டும் அவனுக்காக இவள் பரிந்துப் பேச, “ம்ம்… அது சரி என்னைக்கு என் பேச்ச கேட்டிருக்க? இன்னைக்கு கேட்கிறது? என்னமோ பண்ணு ரீனா. பட் நீ இங்க இருக்கிறது உனக்கு சேஃப் இல்ல. எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சி போற வழிய பாரு.” என்ன சொன்னாலும் திருந்த மறுக்கிறாளே என்ற எண்ணம் களைப்பை தர, அலுப்புடன் எச்சரித்தாள், செரீனா.
“தப்பிக்கிறதா? அதுவும் நானா? எங்க மாதம் டாட்டும் எங்க இருக்கானே தெரியல. அது தெரிஞ்சுக்காம நான் எப்படி இங்கிருந்து போறது?” என்று இவள் கவலையுடன் வினவ, “ஏய் உனக்கு விஷயமே தெரியாதா? உங்க அப்பாவ போலீஸ் அன்னைக்கே அரஸ்ட் பண்ணிட்டாங்க டி.” என்ற உண்மையை செரீனா போட்டுடைக்க, “ஏய் என்ன டி சொல்ற?” பதறி எழுந்தாள், ரீனா.
“அது மட்டும் உங்க அப்பாவ போலீஸ் அரஸ்ட் பண்ணவும் உங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டி அவங்கல நான் தான் ஜி.ஹச் ல சேர்த்தேன்.” அடுத்த குண்டை செரீனா போட, “என்ன டி சொல்ற? மாமுக்கு ஹார்ட் அட்டாக்கா? ஓ மை காட். நாங்க யாருக்கு என்ன பாவம் பண்ணோம்? ஏன் எங்களுக்கு மட்டும் இந்த நிலைம? ஐயோ எல்லாம் என்னால… என்னால தான். நான் தான் நம்ம பேமிலி இப்படியானதுக்கு காரணம்.” தன்மீதே கழிவிரக்கம் கொண்டவள் தொடர்ந்து புலம்ப, “ஏய் பிளீஸ் டி அழாத டி.” முதுகை தடவி ஆறுதல் கூறினாள், செரீனா.
“இல்ல டி இல்ல… நான்… நான் இங்க வந்திருக்கவே கூடாது. மைக்கேல நான் பாத்திருக்கவே கூடாது. எல்லாம் என்னால தான் நான் தான் எல்லாத்துக்கும் காரணம்.” செரீனா என்ன சொல்லியும் சமாதானம் ஆகாமல் புலம்பியவள், பின் யோசனையுடன், “சார்லஸ்? அவன்… அவன் எங்க?” பதறி வினவிட, “ஐயோ அந்தக் கொடுமைய ஏன் டி கேட்கிற? அவன் எங்க இருக்கானே தெரியல. நிறைய பேர் அவன மைக்கேல் ஏதோ ஒரு அரபிய ஷேக்கிட்ட வித்துட்டதா சொல்றாங்க.” கவலை தோய்ந்த முகத்துடன் செரீனா முடிக்க, “என்ன டி சொல்ற?” மீளா அதிர்ச்சியுடன் வினவிய ரீனாவிற்கோ மயக்கம் வராத குறை.
கண்கள் இருண்டன. பூமியோ காலுக்குக் கீழ் நழுவின.
“சா… சார்லஸ்…” பெரும் சத்தத்துடன் மயங்கிச் சரிய போன ரீனாவை தாங்கிப் பிடித்து அவளது முகத்தில் தண்ணீர் தெளித்தாள், செரீனா.
“ஐயோ ரீனா பிளீஸ்… ஹோப்ப விடாத. எப்படியும் சார்லஸ கண்டுப்பிடிச்சிடலாம். நீ எதுக்கு கவலப்படாத! அப்பா… எங்க அப்பா எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டார். இன்ஃபக்ட் அவருடைய பொலிட்டிகல் இன்ஃபுளுயன்ஸ் வச்சு அவன கண்டுப்பிடிக்க நாளாபக்கமும் ஆள் அனுப்பிருக்காரு டி. அது மட்டுமில்ல அங்கிளோட பெயிலுக்கு கூட ஏற்பாடு பண்ணிட்டாரு டி. எப்படியும் கிடைச்சிடும். பட் ஆண்ட்டி தான்…” என்று அவள் இழுக்க, “மாம்… மாமுக்கு என்னாச்சு?” பதறி வினவினாள், ரீனா.
“நாங்க எவ்வளவு ட்ரீட்மெண்ட் பார்த்தாலும் நாளுக்கு நாள் அவங்க உடம்பு மோசமாகிட்டே தான் டி இருக்கு. அடிக்கடி ரீனா ரீனானு உன் பேர தான் சொல்லிக்கிட்டே இருக்காங்க. மே பி அவங்க உன்ன ரொம்பவும் மிஸ் பண்றாங்கனு நினைக்கிறேன். பாவம் டி அவங்க, அவங்களுக்காகயாவது நீ இங்கிருந்து தப்பிச்சி போகனும் டி.” என்று அவள் முடிக்கும் முன், “தப்பிச்சு தப்பிச்சு போனா, நான் எப்படி தப்பிச்சி போறது. நீயும் சுத்திலும் ஆளுங்க இவங்க கண்ணுல மண்ண தூவிட்டு நான் எப்படி போறது.” இவள் புலம்ப, “ம்ம்ம்… அப்படி கேளு. இவ்வளவு பண்ணவ அதையும் பண்ண மாட்டேனா? அதெல்லாம் பக்காவா பண்ணிட்டேன். பேலஸ் பேக் சைட் ஆட்கள் கொஞ்சம் தான். அவங்கள மட்டும் எப்படியாவது ஏமாத்தி தப்பிச்சிடு. நம்ம காலேஜ் பிரண்ட்ஸ் கொஞ்சம் பேர் உனக்காகப் பேக் சைட் காத்திருப்பாங்க. அவங்க உன்ன எங்க அப்பாகிட்ட கூட்டிட்டு போயிடுவாங்க. அப்பா உன்னையும் உங்க அம்மாவையும் மைக்கேலுக்கு சந்தேகமே வராத கண்ட்ரிக்கு அனுப்பி வச்சிடுவாரு. கொஞ்ச நாள்ல உங்க அப்பாவும் சார்லஸும் கூட அங்க வந்திடுவாங்க.” போட்டு வைத்த திட்டத்தைத் தெளிவாக எடுத்துக் கூறினாள், செரீனா.
அழகான திட்டம் தான், இருப்பினும் மைக்கேலை மீறிப் போக முடியுமா? என்ற பயம் முதலில் அவளை ஆட்கொண்டாலும், இதை விட்டாலும் வேறு வழியில்லை என்ற நிதர்சனம் புரிய, “ம்ம்… சரி.” என ஆமோதித்துத் தலையாட்டினாள், ரீனா.
அந்நேரம் பார்த்து யாரோ கதவைத் திறந்துகொண்டு உள்ளே வர, சட்டென இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு அவ்வறையின் வாசலை நோக்கினர்.
தொடரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊