தீ மீது வீணை 4
அத்தியாயம் 4
விழிகள் நாலாபக்கமும் சுழன்றன.
பயத்தில் முதுகுத்தண்டோ சில்லிட்டது.
வியர்வையோ அருவி போல் கொட்ட, விதிர்விதிர்த்துப் போனாள், ரீனா.
இதயம் வேறு காரணமின்றி படபடவென அடித்துக் கொண்டது.
"வே… வேணாம் வேணாம் ப்ளீஸ் எ… என்ன விட்டுடுங்க." கெஞ்சியபடியே வாசலை நோக்கி இவள் ஓட, அவர்களோ நாலாபக்கமும் அணை கட்டினர்.
இதுவரை பெண்களையே பார்க்காதவர்கள் போல், "ஏய் இவ முடி ரொம்ப அழகா இருக்குல." என்று ஒருவனும், "இந்தா பொண்ணே கவலப்படாத நாங்க ரொம்ப நல்லவங்க உனக்கு வலிக்காத மாதிரி பார்த்துக்கிறோம்." என்று ஒருவனும், "கொஞ்சம் வலிச்சா தான் என்ன? அதெல்லாம் இந்த குட்டி தாங்கிக்குவா, அப்படித்தானே?" என வினவியபடியே மற்றொருவனும் அவளை அணைப்பது போல் வர, "நீ… நீங்க நினைக்கிற மாதிரியான பொ… பொண்ணு நா… நான் இல்ல." பதறி அலறினாள், ரீனா.
அவர்களோ அவளது அலறலையும் கதறலையும் கிஞ்சித்தமும் மதியாமல் அவளை பெண்டாட துடித்தனர்.
சுற்றிலும் அவர்கள், கதவும் ஜன்னலும் மூடியிருக்க, எப்படி தப்புவது? எங்கனம் தனது பெண்மையை காப்பாற்றுவது? புரியாமல் தவித்தாள், ரீனா.
'ஜீசஸ் பிளீஸ் சேவ் மீ பிளீஸ்…' இறைவனிடம் மருகி மன்றாடினாள்.
இறைவன் மனித ரூபத்தில் தனது பக்தர்களை காக்க வருவான் என்பார்களே! அப்படி யாரேனும் தன்னை காக்க வந்துவிட மாட்டார்களா? ஏங்கினாள்.
"பிளீஸ் பிளீஸ்… என்ன யாராவது வந்து காப்பாத்துங்க." கத்தி பார்த்தாள், கதறி பார்த்தாள்.
யாரும் அவளை காக்க வருவதாக இல்லை.
அவள் கத்தி கதற கதற அந்த தடியர்களோ பரிகாசம் செய்து சிரித்தனர்.
கரை விழுந்த முத்திரண்டு பற்களும் தெரியும் வண்ணம் ஈஈஈ… என வழிந்தவர்கள் அவளை யார் முதலில் முத்தமிடுவது என போட்டி போட்டனர்.
"ஆ… வேணாம் வேணாம்…" பயத்தில் தனது உடைகளை இறுக பற்றிக் கொண்டவள், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம் என நினைத்து, தன்னை இந்த இக்கட்டில் மாட்டிவிட்டவனிடமே தஞ்சம் புக வேண்டி, கூனி குறுகி இரு கண்களையும் இறுக மூடி, "மைக்கேல்… மைக்கேல் பிளீஸ் பிளீஸ் சேவ் மீ." என்று கத்த, பட்டென கதவை திறந்து புயலென உள்ளே நுழைந்தான், மைக்கேல்.
அவன் வந்ததை கவனிக்காத அந்த தடியர்களோ அவளது மேனி மேல் கை வைக்க போக, அவர்களின் சுண்டு விரல் நகம் அவள் மேல் படும் முன் அந்நால்வரையும் பூச்சி போல் பிடித்து வெளியே எறிந்தான்.
அவர்களும் அவனுக்கு பயந்து ஆளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓட, சிறிதும் தாமதமின்றி சிக்கென அவளின் சங்கு கழுத்தை பற்றி பிடித்தான், மைக்கேல்.
"ஆங்… மைக்கேல். பிளீஸ்…" பலம் பொருந்திய அவனது ஒரு கரத்தை வலுவிழந்த அவளின் மென் கரங்கள் தட்டி தட்டி தன்னை விடுவிக்க முயல, கண்ணீர் திரை விழுந்த விழிகளோ மெல்ல மேலே சொருகின.
நாசியோ மூச்சுக்கு ஏங்க, உடலோ மெல்ல தளர, வலுவிழந்த அவனது கரத்தில் துவண்ட நேரம் சட்டென அவளின் கழுத்திலிருந்து தனது கரத்தை எடுத்தான், மைக்கேல்.
விட்ட வேகத்தில் துவண்டு விழ போனவளின் பிடரி முடியை கொத்தாக பிடித்து, "ஏன்? ஏன் டி என் பேர சொல்லி கூப்பிட்ட? ஹாங் சொல்லு ஏன் என் பேர சொல்லி கூப்பிட்ட?" எனக் கேட்டு கேட்டு மாறி மாறி கன்னம் கன்னமாய் அடிக்க, "ஹங்.. மை…. மைக்கேல்." விழிகளை திறக்க முடியாமல் முணுமுணுத்தாள், ரீனா.
"ஹேய் டோண்ட் கால் மீ பை மை நேம்." பதிலுக்கு அவனோ ஏதோ கேட்க கூடாத ஒன்றை கேட்டவன் போல், காதை மூடிக் கொண்டு, வானமே இடிந்து விழும் அளவிற்கு கத்தினான்.
அவன் கத்தியது காதில் விழுந்தாலும் எதிர்வினையாற்ற தெரியாமல் துவண்டு அவனது தோளில் விழுந்தாள், ரீனா.
அவளது தீண்டல் தீயென அவனை சுட்டதோ என்னவோ சட்டென சிறிது விலகி, "ஏய்…" என்றவாறு அவளது தாடை பற்றி தன்னை பார்க்க வைக்க முயன்றான், மைக்கேல்.
அவன் விருப்பம் போல் அவளும் விழிகளை தட்டி அவனை பார்க்க முயல, "நா… நான் எப்படி இருந்தேன்னு உனக்கே தெரியும்ல டி? ஹாங் தெரியும்ல?" காதுக்குள் கத்தியவன், "ரொம்ப ஹாப்பியா, பாவத்துக்கு பயப்படுற சாதாரண மனுஷனா இருந்தவன், இன்னைக்கு இப்படி… இப்படி மிருகமா ஆகிட்டேனா, அதுக்கு நீ.. நீ தான் டி காரணம்." என்று அவன் உறும, சாராய வாடை மூக்கை துளைத்தது ரீனாவிற்கு.
மூக்கு முட்ட குடித்திருப்பான் போல.
அந்த வாடை பிடிக்காமல் இவளோ முகம் சுளிக்க, "நா… நான் அப்படி என்ன… என்ன டி தப்பு பண்ணேன் ஹாங்? உன்ன லவ் பண்ணேன் அது தப்பா? ம்ம்ம்… சொல்லு டி அது தப்பா?" என்று அவன் கேட்க, பேச வார்த்தைகளின்றி கண்ணீரை மட்டும் பதிலாக அளித்தாள், ரீனா.
'எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டானே!' மனம் வெதும்பியது அவளுக்கு.
இதயத்தில் இரத்தம் கசிந்திட, வெற்று புன்னகை இதழோரம் அரும்பியது அவளுக்கு.
அந்த சிறு புன்னகை அவனை உறுத்தியதோ என்னவோ, "உன்ன… உன்ன அப்படியே கழுத்த நெறிச்சி கொல்ல சொல்லி எ… என் மூளை… என் மூளை சொல்லுது." எனக் கூறி இரு கரத்தையும் அவளது கழுத்தை நெறிப்பது போல் கொண்டு வந்தவன், "ஆனா… ஆனா என்னால முடியல. ஐ… ஐ காண்ட் ஐ காண்ட் ஐ சே…" என கத்தி, அவள் மேல் உள்ள கோபத்தை எல்லாம் சுவரில் அடித்து காட்ட, அவன் அடித்த அடியில் மேற்பூச்சோ பெயர்ந்து அவள் மேல் கொட்டியது.
அதில் அதிர்ந்து, "ஆ.." என்று இவள் அலற, "உன்ன கொல்லவும் முடியாம உன்ன மன்னிக்கவும் முடியாம… ஹாக்.." முஷ்டியை முறுக்கியவன், "இங்க பார் உனக்கு மூணு ஆப்ஷன் தர்றேன். ஆப்ஷன் ஏ, திரும்பவும் மெண்டல் ஹாஸ்பிட்டல் போயிடு. ஆப்ஷன் பி, இந்தா வந்தானுங்கல்ல இவனுங்கள மாதிரி வேளைக்கு நாலு அனுப்புறேன். அவனுங்களோட சந்தோசமா இரு. தேர்ட் ஆப்ஷன், என் கூட, என் கூட மட்டும் லிவ் இன்ல இரு." அழுத்தி கூறி அவளது முகத்தை பார்த்தான், மைக்கேல்.
'லிவ் இன்னா? அதுவும் மைக்கேலா?' அதிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள், ரீனா.
"என்ன பார்க்குற? நான் முழுசா மிருகமாறதுக்குள்ள இந்த மூணு ஆப்ஷன்ல ஒரு ஆப்ஷன சூஸ் பண்ணிடு. டிக் டிக் ஓன்." என்று அவன் மிரட்ட, ரீனாவின் விழிகளோ உவர்நீரை வியர்வை போல் வழிய விட்டன.
பெரியவர்களின் ஒப்புதல் கிடைத்து காதல் கைகூடிய பின்பும் கூட திருமணத்திற்கு முன் முத்தம் கொடுப்பதே தவறு என்று சொன்ன மைக்கேலா இது? மனமோ நம்ப மறுத்தது.
'சே சே… இருக்காது இருக்காது. இவன் எவனோ? நிச்சயமா இது மைக்கேல் இல்ல.' என்று மனமும், 'சிகரெட் புடிக்கிறான், ட்ரிங்க் பண்றான். இதெல்லாம் பண்ணும் போது… இத மட்டும் விட்டு வைப்பானா?" என்று அறிவும் மாறி மாறி உள்ளுக்குள் சண்டையிட, 'எது எப்படி இருந்தாலும் அவன் கொடுத்த ஆப்ஷன்ல ஒரு ஆப்ஷன சூஸ் பண்ணி தானே ஆகனும்.' என்ற நிதர்சனம் புரிந்து அமைதியாக யோசித்தாள், ரீனா.
கொல்லிக்கட்டையில் எது சிறந்த கொல்லிக்கட்டை? எல்லாமே ஒன்று தான் இருப்பினும், ஆப்ஷன் ஏ மற்றும் பி'க்கு ஆப்ஷன் சி பரவாயில்லை என நினைத்தவள், கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு மலையென நிமிர்ந்தாள்.
"என்ன சூஸ் பண்ணிட்டியா?" என்று அவன் புருவம் உயர்த்தவும் வார்த்தைகளால் பதில் சொல்ல விரும்பாதவள் துப்பட்டாவை கழட்டி தூர எறிந்துவிட்டு அவனுக்கு முன் மண்டியிட்டு அமர, அதன் அர்த்தம் புரிந்து அவன் அலட்சிய பார்வையுடன் இதழ் வளைத்தான்.
"ஹும்… இதுக்கு நீ ரொம்பவே வருத்தப்படுவ?" என்றவனின் இறுதி எச்சரிக்கை அது என்று அவளுக்கும் தெரியும், இருப்பினும் இதை விட்டால் வேற என்ன வழி இருக்கிறது என்று நினைத்தவள், இரு கரம் கூப்பி, "பிளீஸ்… டேக் மீ." என்றாள் அமைதியாக.
அடுத்த நொடி அவள் மேல் அப்படியே சரிந்தவன், நகங்கள் கீறிட, உடைகள் அனைத்தையும் கிழித்து எறிந்தான்.
இதழ்கள் அவனது அதரங்களுக்கு இடையே சிக்கி திண்டாடின.
மென் பாகங்களை எல்லாம் அவனது கைக்குள் சிதைந்திட, வலி தாங்க முடியாமல், "மை… மைக்கேல்… பிளீஸ்" என்றலறினாள், ரீனா.
அதிர்ச்சியில் உடல் கூட கிடுகிடுத்தன.
'உண்மையிலேயே இது மைக்கேல் தானா? எனக்காக உருகின அந்த மைக்கேலா இது? கோபம் ஒருத்தனை இவ்வளவு தூரம் மிருகமாக்குமா?' விழியோரம் நீர் கசிந்தன அவளுக்கு.
அவளது கன்னத்தை சுவைத்தபடியே அவளின் கண்ணீரையும் சுவைத்தவன் என்ன நினைத்தானோ சிறிது நேரம் மென்மையை கையாண்டான்.
பாலைவன சோலை போல் சிறிது நேரம் அவனது மென்மையில் இவளோ இளைப்பாற, பழைய காதல் துளிர் விட ஆரம்பித்தது.
காதல் நாணத்தை நல்கிட, உடலோ மெல்ல சிவக்க துவங்கின.
"மைக்கேல்…" உருகி அழைத்தவள் உணர்ச்சியுடன் அவனது கேசத்தை பற்ற, சட்டென எழுந்து ஓங்கி அறைந்தான், மைக்கேல்.
"என்ன அப்படி கூப்பிடாத டி." என்று அவன் உறும, கண்ணீருடன் உடல் குலுங்கினாள், ரீனா.
"ஓ சிட் அழாத!" அரட்டியவன் அடித்த கன்னத்தை தடவியபடியே இதழை கவ்வி சுவைக்க, அவளோ அவனுக்குள் நடக்கும் உணர்வு போராட்டத்தை ஐயம் திரிபுற உணர்ந்து கொண்டாள்.
ஒரு நிலையில் அவன் இல்லை.
பெண்டுலம் போல் காதலுக்கும் பலிவாங்கலுக்கும் இடையில் கிடந்து போராடினான்.
அவனது அப்போராட்டத்தை காண்கையில் அப்பா சொல்லும் பிசாசு கதைகள் தான் அவளின் ஞாபகத்திற்கு வந்தன.
மனிதர்கள் உடலை பிடித்துக் கொண்டு, பிசாசு தனக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொள்ளுமாம் என்று அவர் அடிக்கடி சொல்வதை கேட்டு, "டேட் சயின்ஸ் எங்கேயோ வளர்ந்து போச்சு. நீங்க என்ன டா இன்னும் பிசாசு பூதம்னு." அன்று நக்கலடித்ததை எண்ணி இன்று வருந்தினாள்.
'டாட் சொன்னது உண்மை தான் போல, பழி என்னும் பிசாசு இவனை பிடிச்சு ஆட்டுது.' என்ற எண்ணம் வர, கோபத்தை விட இரக்கமே அவளை ஆட்கொண்டது.
தீ மீது விழுந்தாலும் வீணை அப ஸ்வரத்தை நல்குவதில்லையே, ‘பாவம்…’ அவனுக்காக வருந்தியவள் அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இசைந்தாள்.
அவனோ அவனது கோபதாபங்கள் அனைத்தையும் அவள்மேல் கொட்டிவிட்டு கண் மூட, "ஐ நோ மைக்கேல் நீ இன்னும் என்ன லவ் பண்ற. உன் கோபம்… உன் கண்ண மறைக்கலாம் ஆனா உன் காதல… அது மறைக்காது, மறைக்கவும் முடியாது. நிச்சயமா நான் அத வெளிய கொண்டு வருவேன், அது மட்டுமில்ல நான் எந்த தப்பும் பண்ணலைங்கிறதையும் உனக்கு நிரூபிப்பேன்." சத்தமின்றி சூளுரைத்தவள், தனது மார்பில் குழந்தையென உறங்கும் மைக்கேலின் கேசத்தை வருட, அவன் அடுத்து ஆடப் போகும் ஆட்டத்தை நன்கு உணர்ந்த விதியோ அவளின் அறியாமையை எண்ணி எள்ளி நகையாடியது.
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊