Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ராட்சசன் 3

ராட்சசன் 3

"எனக்கு சின்ன வயசுல இருந்தே உன்ன ரொம்ப பிடிக்கும். ஸ்கர்ட், யூனிபோர்ம், ரெட்டை ஜடை, குட்டி பொட்டு. ரொம்ப அழகா இருப்ப. உன்ன பாக்க பாக்க பார்த்துட்டே இருக்கலாம். ஸ்கூல்ல பசங்க உன்ன கிண்டல் பண்ணும் போது எனக்கு கோபமா வரும். அப்டியே அடிச்சு வாய உடைச்சிரலாம்னு தோணும்.  அப்புறம் தேவை இல்லாமல் உன் பேர் டேமேஜ் ஆகும் அதனால அமைதியா இருந்தேன்.

உன்கிட்ட பேச ஆசை படுவேன். உனக்கு என்கூட பேச பயமா இருக்கும். நானே பேச வந்தாலும் நீ பயந்து ஓடுவ. எத்தனையோ தடவ என் காதல உன்கிட்ட சொல்ல நினைச்சேன். என்னால முடியல. இனிமேலும் பொறுமையா இருக்க வேண்டாம்னு தான் வீட்டுல சொல்லி உன் பேரெண்ட்ஸ்கிட்ட பேச சொன்னேன்.

கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னாங்க.  இன்னைக்கு என் காதல் கை கூட போகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அப்டியே உன்ன கட்டிக்கணும்னு தோணுது. கட்டிக்கவா?"  கடப்பாறையை விழுங்கிய கல் சிலை போல நின்ற மதியிடம் பக்கம் பக்கமாக காதல் வசனங்கள் பேசி கொண்டிருந்தான் அபிநவ்.

ஆனந்த குதுகலத்தில் அவளை அணைக்க வர தீயாய் முறைத்தாள். பார்வையாலே எரித்தாள். ஆர்வமாக கட்டி அணைக்க வந்தவன் அப்படியே நின்றான். அவள் தீ கங்கு பார்வையில். மதிக்கு அவனை கொஞ்சம் கூட பிடிக்காது. அவன் பொண்ணு கேட்கிறான். வசதியானவன் என்கிற ஒரே காரணத்தினால் அவனுக்கு தன்னை திருமணம் செய்து வைக்க நினைக்கும் அன்னை தந்தையை நினைக்கும் போது கடுப்பாக இருந்தது.

'எல்லாம் இந்த தாய் கிழவி பண்ற வேலை..' முறைப்பாக வீட்டுக்குள் சென்று விட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன் சொன்னது போல, இப்போது மேகலா  அபிநவ் குடும்பத்தில் இருந்து பெண் பார்க்க வர சொல்ல, அவர்கள் முன் பொம்மை போல நின்றாள். அழகாக மகளுக்கு ஒப்பனை செய்து மேகலா நிற்க வைத்திருக்க அவளோ கடுப்பாக இருந்தாள். அவள் விருப்பம் பற்றி அறியாமல் அபிநவ் உருகி உருகி அவளிடம் பேசி கொண்டிருந்தான்.

"மதிய தான் எங்களுக்கு சின்ன வயசுல இருந்தே தெரியுமே. முறைக்காக தான் பொண்ணு பாக்க வந்தோம். முன்னாடி  மூணு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னோம். ஆனா அபி ரொம்ப அவசர படுறான். அதனால அடுத்த மாசமே கல்யாணம் வச்சுக்கலாம். இந்த வாரத்துல ஒரு நல்ல நாள்ல நிச்சயம் பண்ணிக்கலாம்.." அபிநவ் தந்தை சிவராம் கூற மேகலாவுக்கு ஏக போக மகிழ்ச்சி.

உடனே சம்மதம் கூறினார்.  அவள் வாழ்க்கை முடிவுகள், அவள் விருப்பம் இல்லாமல் எடுத்தனர். பேசா மடந்தை போல ஊமையாக நின்றாள்.

மாலை மயங்கி இரவு எட்டு மணியை கடந்த பிறகு அபிநவ் குடும்பம் புறப்பட்டு செல்ல, "எனக்கு கல்யாணம் வேண்டாம் ப்பா.. ப்ளீஸ்.. அபி.. அவனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ப்ளீஸ்ப்பா.." அழுதாள் மதி.

"மதி மா.. சொல்றத கேளு டா. அபி நல்ல பையன். நம்ம குடும்பமும் அவங்க குடும்பமும் சின்ன வயசுல இருந்தே நல்ல நட்புல இருக்கோம். இப்போ கல்யாணம் பண்ணி உறவாக போறோம். அவ்ளோ தான் நீ பயப்படுற மாதிரியெல்லாம் இல்ல டா. அதோட உனக்கும் ஒரு சேஞ்ச் வேணும். கேத்தரின் டெத்க்கு அப்புறம் இருந்து நீ மோசமான ட்ராமால இருக்க. அது சரியாகணும்னு. சொல்றத கேளு டா.." பக்குவமாக அவளுக்கு எடுத்து சொல்ல பார்க்க அவள் கேட்பதாகஇல்லை.

அழுது கொண்டே இருந்தாள். கடுப்பான மேகலா, "நீ அழுது சீன் போடுற அளவுக்கு இது மோசம் இல்லை. கல்யாணம் தானே பண்ணி கொடுக்க போறோம். ஏதோ கிணத்துல புடிச்சு தள்ள போற மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ற? ஒழுங்கா மாரியாதையா சொல்றத கேட்டு கல்யாணம் பண்ணிக்கிற வழிய பாரு" விரல் நீட்டி எச்சரிக்க அமைதியாக அழுதாள்.

"நீ இப்டி பிடிவாதம் பிடிக்கிறத பாத்தா யாரையாவது லவ் பண்றியா?" புருவம் தூக்கி கேட்க அன்னையை முறைத்துவிட்டு தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.

"மேகலா.. என்ன பேசுற? அவ இன்னும் நார்மல் ஆகல. அதுக்குள்ள கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணதே தப்பு. இதுல அவள ஏன் இன்னும் பேசி பேசி காய படுத்துற?" செங்கோட்டையன் கேட்க,

"வேற என்ன பண்ண சொல்றிங்க? கண்ணே மணியேன்னு நீங்களும் தான் கொஞ்சறீங்க கொஞ்சமாவது அசைஞ்சு கொடுக்குறாளா? இல்ல. அவகிட்ட இப்டி தான் பேசணும். ஒரு மாசம் தான் அவளுக்கு கல்யாணம் ஆச்சுன்னா சரியாகிடுவா. நீங்க உங்க வேலைய பாருங்க" என்று விட்டு தன் வேலையை பார்த்தார்.

மகளை நினைத்து அதிகம் கவலைபட்டார் செங்கோட்டையன்.

அறைக்குள் வந்து கவிழ்ந்து படுத்தவள் தலையணையில் முகம் புதைத்து கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். அவள் இப்போது இருக்கும் மனநிலையில் திருமணம் என்பதே பயமான விஷயம். அதிலும் அபிநவ் தான் மாப்பிளை என்பதை அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அழுதவள் அப்படியே உறங்கி போனாள். 

கேத்தரின் நண்பர்களை விசாரித்த ஆடியோவை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருந்தான் விதுர்ஜித். யாரும் தெரியாத புது விஷயங்கள் எதுவும் சொல்லவில்லை. மதி கூறியதை தான் மாறி மாறி கூறினர். மதிக்கு ட்ரெஸ் எடுக்கும் போது உடன் சென்ற தீக்ஷித்க்கும் பெரிதாக எதுவும் தெரியவில்லை.

ஏதோ யோசித்தவன் அட்டாப்சி டாக்டர்க்கு போன் செய்து "இன்னைக்கு அட்டாப்சி பண்ணனும்" என்றான்.

எப்படியும் விட மாட்டான் என்று தெரிந்து கொண்டவர் "பத்து மணிக்கு மேல லொகேஷன் அனுப்பு வர்றேன்.." என்று இணைப்பை துண்டித்தார். 

அடுத்து மதிக்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைக்க அழுது சோர்ந்து போனவள் போன் அழைப்பை உணர்ந்து எழுந்து அமர்ந்தாள். முகப்பு திரையில் விதுர் பெயரை கண்டு அழைப்பை ஏற்றாள்.

"எவ்ளோ நேரம் கால் பண்றது? கால் எடுக்காம என்ன பண்ற?" அவள் நிலை தெரியாமல் அவன் திட்ட,

"ஆங்.. அது.. ஒன்னும் இல்ல.." சுருதி குறைந்த குரலில் கூறினாள்.

"என்னாச்சு? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?"

"ஒன்னும் இல்ல எதுக்கு கால் பண்ணிங்க?"

"கேத்தரின அடக்கம் பண்ண இடம் உனக்கு தெரியுமா?" 

"ம்ம்.."

"ஓகே.. பத்து மணிக்கு உன் வீடு இருக்குற தெரு லாஸ்ட் நா உனக்காக வெயிட் பண்றேன் வந்திரு.." 

"என்ன? எதுக்கு?"

"கேத்தரின் பாடிய மறுபடியும் அட்டாப்சி பண்ணனும் உன்கிட்ட ஏற்க
சொல்லி இருந்தேன்ல"

"ஆங்.. ஆமா. ஆனா நா ஏன் வரனும். இடம் சொல்றேன். நீங்க போலாமே.."

"சுடுகாட்டுல அவ பொணம் மட்டும் இருக்காது. மாத்தி வேற யாரையும் தோண்டி டிஸ்டர்ப் பண்ண முடியாது. உனக்கு இடம் தெரியும். சோ நீ கண்டிப்பா வர்ற" உத்தரவாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

மணி ஒன்பதை கடந்திருந்தது. இந்த நேரத்தில் வெளியே போக முடியாது. அம்மாவும் அப்பாவும் தூங்கும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தாள்.

தண்ணீர் எடுக்க அறையை விட்டு வெளியே வந்தாள். அவளுக்கான உணவை எடுத்து வைத்த மேகலா "ஒழுங்கா சாப்டு.." என்று ரத்த அழுத்த மாத்திரையை உண்டார்.

இந்த மாத்திரை உண்டுவிட்டு  உறங்கினால் பத்து நிமிடத்தில் உறங்கி விடுவார் என்று அவளுக்கு தெரியும். அமைதியாக உண்டு முடித்து தண்ணீர் எடுத்து கொண்டு அவள் பெற்றோர் அறையை திறந்து பார்க்க அவர்கள் உறங்கியிருந்தனர். நிம்மதி பெருமூச்சு விட்டவள் வீட்டை திறந்து கொண்டு சென்றாள்.

மணி ஏற்கனவே பத்தை கடந்திருக்க அவசர அவசரமாக ஓடினாள். தெரு முனையில் சொன்னது போலவே காத்திருந்தான் விதுர். பெண் பார்க்க வருவதால் டிசைனர் லாங் கவுன் அணிந்திருந்தாள். அதோடு வர அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.

"மேக்கப், லூஸ் ஹேர்? சுடுகாட்டுக்கு தானே போறோம்னு சொன்னேன்? கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லலையே.." இழுவையாக கூறிவனை முறைத்தவள் "வண்டிய  எடுங்க.." என்று பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

வேலை தான் முக்கியம் என்று வண்டியை எடுத்தான். கவனம் சாலையில் இருந்தாலும் அவ்வப்போது அவளை மிரர் வழியாக ரசிக்க தவறவில்லை. ரசிக்கும் போது கூட அவன் முகம் இனங்காமல் கடுமையாக தான் இருந்தது. ஆனால் அவன் கந்தர்வ விழிகள் நிறைந்திருந்தது. அரை மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வர, டாக்டரும் அங்கிருந்தார். தாமதிக்காமல் கேத்தரின் அடக்கம் செய்ய பட்ட இடத்தை காட்டினாள். மூவரும் வேக வேகமாக தோண்டினர்.

அவர்கள் அளவுக்கு வேகமாக தோண்ட முடியாமல் மூச்சு வாங்கியது அவளுக்கு. "என்ன முடியலையா? மேல போய் உக்காரு. நாங்க பாத்துக்குறோம்.." விதுர் அவளை போக சொல்ல,

"வேண்டாம். எனக்கு ஒன்னும் இல்ல.." போவதாக இல்லை அவள். ஒருவழியாக அவளை உடலை வெளியே எடுத்தனர். 

மூன்று மாதத்திற்கு முன் புதைக்க பட்ட உடல் சிதைந்து அழுகி கொண்டிருக்க கெட்ட வாடை குடலை பிரட்டியது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பிரேத பரிசோதனையை ஆரம்பித்தார் மருத்துவர்.

விதுர், மதி இருவரும் குழிக்கு மேலே நின்று யாரவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டிருந்தனர்.  "என்ன ஸ்பெஷல்?" அவன் பேச்சை ஆரம்பித்தான்.

"ஆங்.. என்ன?" மயக்கத்தில் இருந்து தெளிந்தவள் போல கேட்டாள்.

"இந்த நேரத்துல சூப்பர் ட்ரெஸ், மேக்கப். அதான் ஸ்பெஷல்லான்னு கேட்டேன்.."

"பொண்ணு பாக்க வந்திருந்தாங்க.."

"ஓ. அத ஏன் இவ்ளோ சலிப்பா சொல்ற? லைப்ல மூவ் ஆகி போறது தப்பு இல்ல. அதோட உனக்கும் கல்யாண வயசு தானே.."

"...."

"ஏன் உனக்கு கல்யாணம் பிடிக்கலையா? மாப்பிளை பிடிக்கலையா?"

"அது.. அத விடுங்க. கேத்தரின் சோசியல் மீடியா id பாஸ்வர்ட் கொடுத்தேனே. ஏதாவது கண்டு பிடிச்சிங்களா?" பேச்சை மாற்றினாள்.

பேச்சை மாற்றுக்கிறாள் என்று புரிந்து கொண்டான். "ம்ம்.. பாத்துட்டே இருக்கேன். நாளைக்கு சொல்றேன்.." என்றான்.

இருவரும் பேசி கொண்டிருக்கும் போது "முடிஞ்சிது.." குழிக்கும் இருந்து குரல் கொடுத்தார் மருத்துவர். அவரை தூக்கிவிட்டு குழியை மூடினர். உடனே அந்த இடத்தை காலி செய்து மருத்துவர் லாப்க்கு வந்தனர். 

"என்ன தெரிஞ்சிது..?"

"ட்ரக்னால தான் அந்த பொண்ணு இறந்து போயிருக்கா. ஊசி மூலமா கை நரம்புல எடுத்துக்குற ட்ரக் போதைய கொடுக்கும். அதுக்கு அடிமையாகி அதிகமான அளவுக்கு ட்ரக் தொடர்ந்து எடுத்திருக்கா. அதுவும் டோஸ் அதிகமா. கை நரம்பு மூலமா எடுத்துக்குற போதை அவளுக்கு நாளைடைவில் பத்தாம போயிருக்கு.

அதனால கழுத்துல ஊசி போட்டுக்க ஆரம்பிச்சிருக்கா. அது தான் அவ உயிர எடுத்திருக்கு.." என்று முடிக்க 

"நோ.. இதுக்கு வாய்ப்பே இல்லை. கேத்தரின்க்கு ட்ரக்ஸ் பழக்கம் இல்ல.."

"நீ ஒதுக்கலனாலும் அது தான் உண்மை. அவளோட உடம்பு ட்ரக் ட்ரேசஸ் நிறைய இருக்கு. ரெகுலர் ட்ரக் அடிக்ட் அவ. ஆனா கழுத்துல போட்டிருக்க ஊசி தான் அவ உயிர எடுத்திருக்கு" என்று முடிக்க எங்கோ இருந்து பாய்ந்து வந்த தோட்டா மருத்துவர் மார்பிலே இறங்கியது.

குண்டு பாய்ந்த வேகத்தில் சுருண்டு விழுந்தார். நொடியில் சுதாரித்த விதுர் மதியை அணைத்த படி  பதுங்கினான்.

எங்கிருந்து சுடுகிறார்கள் என்று தெரியவில்லை. அமைதியாக அப்படியே சில நிமிடங்கள் போக கன்னுடன் வந்தான் ஒருவன். குண்டடி பட்டு உயிருக்கு போராடி  கொண்டு கிடந்தவரை எல்லாக பார்த்து அவர் தலைக்கு குறி வைக்க, "இங்கையே இரு.." சைகையில் கூறிவிட்டு, பின்னால் இருந்து தாக்கினான் விதுர்.

இருவருக்கும் பயங்கர சண்டை.  ஒரு கட்டத்தில் அவன் கழுத்தை இருக்கி பிடித்து மயக்கமடைய வைத்தான். மயங்கியவனை அங்கியே போட்டு மருத்துவரை பார்க்க, "எனக்கு ஒன்னு இல்ல. கொஞ்சம் உதவி பண்ணு" என்றவர் அவன் உதவியோடு தோட்டாவை எடுத்துவிட்டு கட்டு போட்டு கொண்டார். 

பயந்து பயந்து மதி அவர் அருகில் வர, "நீ நம்பலனாலும் இது தான் உண்மை. அந்த பொண்ணு ட்ரக் அடிக்ட் தான். ஆனா கழுத்துல ஊசி போட்டுக்குற அளவுக்கு அவ முட்டாளா இருப்பான்னு எனக்கு தோணல.   கழுத்துல ஊசி போட பட்டிருக்கும். அதனால தான் அவ இறந்து போயிருக்கா.. சாம்பில்ஸ் டெஸ்ட் பண்ணா தான் மேற்கொண்டு எதுவா இருந்தாலும் தெரியும்" தலர்வான குரலில் கூற அழுதாள் மதி.

துப்பாக்கியுடன் வந்தவனை ஒரு அறையில் அடைத்தான். "என்ன என் வீட்டுல விட்டுடு விதுர்.." என்றிட அவரையும் அழைத்து கொண்டு புறப்பட்டான். மதி அழுது கொண்டே வந்தாள். 

டாக்டரை அவர் வீட்டில் இறக்கிவிட்டு அவளுடன் புறப்பட்டான். சோகமான அவள் முகம் பார்த்து "உண்மைகள் கசக்க தான் செய்யும். ஆனாலும் நாம அக்செப்ட் பண்ணிக்கணும்" என்றான். அவள் எதுவுமே பேசவில்லை. அவளை இறக்கி விட வேண்டிய இடத்திற்கு வந்தவன், "ஓகே.. மேலும் விசாரிக்கட்டுமா? இல்ல போதுமா?" என்று கேட்டான்.

"விசாரிங்க. என்ன நடந்ததுன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.." என்றாள்.

"ஓகே.. நாளைக்கு பாக்கலாம்.." என்றிட இறங்கி தன் வீட்டுக்கு சென்றாள்.

தன் அறைக்குள் சென்று மூலையில் அமர்ந்தவள் கேத்தரினுடன் எடுத்த போட்டோவை பார்த்து அழுதாள்.

வீட்டுக்கு  வந்த விதுர் ஷவரை திறந்துவிட்டு நின்றான். இருகிய அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அவன் இதயத்திற்குள் என்னென்ன ஓடியதோ அவனுக்கே வெளிச்சம். கலைந்து கிடந்த அறைக்குள் படுக்கையில் விழுந்தவன் விட்டத்தை பார்த்து கொண்டே குடித்தான். 

எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கி போன மதிக்கு  தன் தோழியின் மறுமுகம் தெரிய வர போகிறது.

நேற்று துப்பாக்கியால் சுட்டவனை பார்த்தான் விதுர். அடித்த அடியில் முகம் வீங்கி போயிருந்தது. "உன்ன யார் அனுப்பினா? அத மட்டும் சொல்லு.." அழுத்தி கேட்க, காசு கொடுத்து தன்னை அனுப்பியவன் பெயரை கூறினான்.

புருவம் சுருக்கி யோசித்த விதுர், அவனை ஒரு இடத்திற்கு அழைத்து வந்து இறக்கிவிட்டான். "உயிர் மேல ஆச இருந்தா இனிமே என் கண்ணுல படாத.." என்றிட தலையை நாளா பக்கமும் ஆட்டினான். ஸ்டேஷன்க்கு வந்த விதுர் கேபினில் செங்கோட்டையன் அமர்ந்திருந்தார். அவரை எதிர் பார்த்திராத விதுர் உயர் அதிகாரி என்று சல்யூட் அடிக்க வில்லை. கேள்வியாய் பார்த்தான். "எல்லாம் எப்படி போகுது விதுர்?" என்று கேட்க, "நல்லா போகுது.." என்றான்.

"நீ செய்யுற வேலையால எனக்கு டென்ஷன்.. தோண்டுன குழிய ஒழுங்கா மூட மாட்டிங்களா?"

"நைட் டைம், அவசரம். சோ சரியா மூடாம போயிருக்கலாம்.. இந்த கேஸ்ல எந்த பிரச்சனை வந்தாலும் உன் பொண்ணு பேர் வெளில வரும் அதுக்காக நீ தான் எல்லாத்தையும் சரி பண்ணி ஆகணும்.." கேசுவலாக கூற முறைத்தார்.

"ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடைக்குறான்னு தான் அந்த கேஸ் பத்தின டீடெயில்ஸ் கொடுத்து நீயே தேடுன்னு சொன்னேன். தெரியா தனமா உன்கிட்ட உன்ன பத்தி சொல்லிட்டேன். சரி ஓகே. நீ என் பொண்ணுகிட்ட இருந்து விலகியே இருக்கு. அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம். கம்மிங் ஃப்ரைடே எங்கேஜ்மெண்ட். வந்திரு.." என்றவர் அவனை முறைத்துவிட்டு சென்றார்.

அவர் சென்ற வழியை பார்த்து இதழ் சுழித்தவன் "இந்த கல்யாணம் நடக்க போறது இல்ல. உங்க பொண்ணு எனக்கு தான். அத அவளே நினைச்சாலும் மாத்த முடியாது" என்று நினைத்தான்.

சிகரெட் எடுத்து இதழுக்கு நடுவில் வைத்து அதன் தலைக்கு கொள்ளி வைத்து இழுத்தான். அடி வயிறு வரை இழுத்து புகை விட்டவன், "அவிர்மதி.. என்கிட்ட இருந்து நீ தப்பிக்க மாட்ட. என்ன மீறி எவனும் உன் நிழல கூட நெருங்க முடியாது டி.." என்று நினைத்து சிரித்தான்.

"ச்சே.. அவங்க தப்பிச்சுட்டாங்க.  கேத்தரின் பாடிய ரீ அட்டாப்சி பண்ற அளவுக்கு போவான்னு நான் நினைக்கவே இல்லை. சும்மா விட கூடாது. சீக்கிரம் விதுர்ஜித் சாகனும் இல்ல நம்ம மொத்த குட்டும் வெளில வந்திரும்.." ஜீவன் கத்தி கொண்டிருந்தான்.

"அமைதியா இரு. விதுர்ஜித்க்கு எண்டு கார்ட் போடலாம்.." என்றான்.

"என்ன பண்ண போற?" 

"வெயிட் பண்ணி பாரு.." என்றவன் செங்கோட்டையனுக்கு அழைத்தான். 

எதிர் முனையில் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்தவர் "எப்போ? எங்க? உடனே வர்றோம்.." என்று விரைந்து சென்றார்.

அவன் சொன்ன இடத்தில் ஒரு ஆணின் உயிரற்ற உடல் கிடந்தது. அது நேற்று துப்பாக்கியோடு வந்தவன். அதை கண்டு அதிர்ந்தவர் சுற்றி பார்க்க அருகில் ஒரு cctv கேமரா இருந்தது. அதன் பதிவுகளை பார்த்தவர் அதிர்ந்து போனார். தலையிலே கை வைத்தார்...


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்