Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 2

அத்தியாயம் 2


வீரியமிக்க அம்மருந்தின் தாக்கத்தால் அசௌகரியமான அந்த நாற்காலியில் கூட தன்னை மறந்து தூங்கிக் கிடந்தாள், ரீனா.


காட்டு கத்து கத்தும் பிற மனநோயாளிகளின் கூச்சல் சத்தத்தைக் கூட காதில் வாங்காமல் தூங்கிய ரீனாவின் செவிகளில் திடீரென, “டாடி உனக்காக என்னவேணாலும் பண்ணுவேன் டா.” என்றுருகும் ஜோசபின் குரலும், “ஐயோ ஜோசப்…” என்று கத்தி கதறிய ஸ்டெல்லாவின் குரலும் மாறி மாறி விழுந்திட, “ஓ நோ டாட்…” என்றலறியபடியே சட்டென விழி திறந்தாள், ரீனா.


திறந்தவளின் இதயம் ஒரு நிமிடம் நின்று பின் படபடத்தன.


உறைந்த இரத்தத்தை வியர்வைத் துளிகளோ கரைத்திட, கண்களோ உறைந்து விரிந்தன.


விரிந்த கண்கள் மெல்லக் கலங்கிட, “டாட்…” எனக் காற்றுக்கும் வலிக்கா வன்னம் மெல்ல அசைந்த அவளின் அதரங்கள் பின், “நோ… நோ… மாம் டாட்…” என வேகமெடுத்தன.


“நா… நான் உங்கள எப்படியும் கண்டுப்பிடுச்சிடுவேன். ஓ ஜீசஸ் அவங்க… அவங்க எங்க எங்க இருக்காங்க?” புலம்பியபடியே பரபரப்பாக எதையோ தேட துவங்கினாள்.


“எங்க? எங்க போச்சு?” பதற்றத்துடன் கட்டிலுக்குக் கீழ், மேஜையின் இழுப்பறை என அனைத்தையும் இழுத்துப் போட்டு தேட ஆரம்பித்தவளுக்கு நேரம் செல்லச் செல்ல பதற்றம் எல்லாம் கோபமாக உருமாற துவங்கியது.


போதாக்குறைக்கு அவளை வெறுப்பேற்றும் வன்னம் பிற மனநோயாளிகள் வேறு கத்தி

கூச்சலிட்டனர்.


அவர்கள் எழுப்பும் இறைச்சல் சத்தத்தில் இவளுக்கோ கூட கொஞ்சம் எரிச்சல் வர,

“ஆ…” என இரு காதையும் மூடிக் கொண்டு பலமாகக் கத்தினாள், ரீனா.


இவள் கத்த கத்த அவர்களும் இவளுக்கு இணையாகக் கத்தி கூட கொஞ்சம் வெறியேற்ற, “ஜஸ்ட் கட்… கட் இட் ஆவுட்.” எனத் தொண்டை கிழிய கத்தியவள் போர்வை இழுத்து கீழே எறிந்தாள்.


எறிந்த வேகத்தில், “டப்…” என்ற சத்தத்துடன் சட்டமிடப்பட்ட புகைப்படம் ஒன்று போத்தெனத் தரையில் விழுந்தது.


அந்தச் சத்தத்தில் புகைப்படத்தின் கண்ணாடி தான் உடைந்துவிட்டனவோ எனப் பதறியவள் வேகவேகமாய் ஓடி சென்று அப்புகைப்படத்தைத் தனது கையில் ஏந்த, அதற்கு ஆயுசு கொஞ்சம் நீளம் தான் போல, சிறிதும் கீறல் இன்றி நன்றாகவே இருந்தது.


அதில் நிம்மதி வர, “ஹப்பா…” என்ற பெரும் மூச்சுடன் அப்புகைப்படத்தைப் பார்த்தாள், ரீனா.


அதில் சிரித்தமுகமாய் ஜோசபும், ஸ்டெல்லாவும் வெள்ளை நிற மெது இருக்கையில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின் ரீனாவும் அவளின் தம்பி சார்லஸும் நின்றிருந்தனர்.


பற்களைக் காட்டியபடியே காட்சியளித்த அவர்களின் முகத்தில் இவளின் கண்ணீர்த் துளிகள் சொட்டு சொட்டாய் நனைத்தன.


“டாட், மாம், சார்லஸ்…” என அவர்களின் பெயரை உச்சரித்தபடியே சிந்திய விழிநீரை இவள் துடைக்க, மனமோ மெல்ல எழுந்து, வேகமாய் அவளின் இறந்த காலத்திற்குள் சென்றது.


மின்னலை விட வேகமாகப் பயணித்து சரியாக, அவள்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த அந்த நாளில் வந்து நின்றது.


வெள்ளை நிற பழைய கணினிக்கு முன், நகத்தைக் கடித்தபடியே அமர்ந்திருந்தாள், ரீனா.


அந்தக் கணினியில் இணையதளமோ மந்தமாகவே இருந்திட, ஒரு வட்டம் மட்டும் பல மணி நேரமாக அந்தக் கணினி திரையில் சுழன்றுக் கொண்டே இருந்தது.


பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு கட்டத்தில் எரிச்சலாகி, “ஓ டாட்… என் ரிசல்ட இப்ப பார்க்க முடியுமா? முடியாதா? எனக் கடுகடுத்தாள்.


“ப்ச்… ரீனா… அதுக்குள்ள உனக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்? ஜஸ்ட் வெயிட் பண்ணு. மாம் இப்ப தான் ரோப் எடுக்கப் போயிருக்காங்க.” ஆரவாரமின்றி நிதானமாகப் பதில் கொடுத்தான், சார்லஸ்.


“ப்ச்… ரோப்பா? ரோப் எதுக்கு?” புரியாமல் இவளோ புருவம் உயர்த்த, “பின்ன இண்டர்நெட்ட கட்டி இழுக்க வேணாம்?” என்றான் அவன் சிரிக்காமல்.


“ஏய் யூ…” பதிலுக்கு இவளோ பற்களைக் கடிக்க, “ப்ச்… எனஃப்… இரண்டு பேரும் சண்டைப் போடாம கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. என்ன ஜோசப் இன்னுமா இன்டர்நெட் வரல?” அங்கலாய்த்தபடியே ஜோசப்புக்கு அருகில் வந்தமர்ந்தார், ஸ்டெல்லா.


“ம்ம்ம்… இதோ இப்ப வந்துடும்.” மூக்கு கண்ணாடியை மேலே தள்ளிவிட்டுக் கணினியில் முகம் பதித்தார், ஜோசப்.


“ம்ம்ம்… இதையே தான் டாடி நீங்க ஒன் அவரா சொல்றீங்க.” செல்லச் சிணுங்களுடன் மார்புக்குக் குறுக்கே கைக் கட்டினாள், ரீனா.


அதில் கலங்கியவர்ப் பதில் பேசும் முன், “ப்ச்… ரீனா! உங்க அப்பா ஒன்னும் பில் கேட்ஸ் இல்ல, சாதாரண சர்ப் பாஸ்டர் தான். அவரால என்ன பண்ண முடியுமோ அதைத் தான் பண்ணுவாரு.” கணவனுக்காகப் பரிந்து பேசி, ரீனாவைக் கண்டித்தார், ஸ்டெல்லா.


என்ன தான் மனைவி தானாகப் பேசினாலும், மகளைத் திட்டினால் பொறுத்துக் கொள்வாரா தந்தை?

“ஸ்டெல்லா எதுக்கு இப்ப என் குயினத் திட்டுற?” என்றரட்டினார்.


“ம்ம்ம்… இப்படியே செல்லம் கொடுத்துக் கொடுத்துக் கெடுத்து வைங்க.” பதிலுக்கு ஸ்டெல்லாவும் ஊடல் கொண்டு தனது முகத்தைத் திருப்ப, “ம்ம்ம்… பாருங்க டாட்! மாம் எப்படிப் பேசுறாங்கனு?” செல்லமாகக் குறை கூறியபடியே ஜோசபின் தோளில் சலுகையாய் சாய்ந்துக் கொண்டாள், ரீனா.


“ப்ச்… அவ கிடக்கிறா, நீ விடு. இப்ப என்ன உனக்கு ரிசல்ட் பார்க்கனும் அவ்வளவு தான? இரு நான் ஹெட் மாஸ்டருக்கும் ஃபோன் பண்ணிக் கேட்கிறேன்.” என்றவர் அவளின் தலைமை ஆசிரியருக்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு தனது கைப்பேசியை எடுக்க, “வேணாம் ஃபாதர் நானே வந்துட்டேன்.” என்றபடி அவர்களின் வீட்டு வாசலில் வந்து நின்றார், தலைமை ஆசிரியர் மரியகோஸ்.


“அடடே வாங்க மரியகோஸ் வாங்க.” வந்தவரை வரவேற்கும் பொருட்டு ஜோசப்போ எழுந்து நிற்க, “அட உட்காருங்க ஃபாதர். நானே உங்களப் பார்த்து காங்கிராட்ஸ் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றபடி அவர்களுக்கு அருகில் வந்தார், அவர்.


“குட் மார்னிங் சார்.” ரீனோவோ எழுந்து நின்று அவருக்கு இடம் கொடுக்க, “காங்கிராட்ஸா? எதுக்கு?” எனப் புருவம் இடுக்கினார், ஜோசப்.


“எதுக்கா? என்ன ஃபாதர் உங்களுக்கு எதுவுமே தெரியாதா? ட்வில்த் எக்சாம் ரிசல்ட் பார்த்தீங்களா இல்லையா?” கேட்டப்படி அவரோ நீள் இருக்கையில் அமர, “அதைத் தான் சார் நாங்க ரொம்ப நேராம பார்த்துட்டு இருக்கோம்.” அங்கலாய்ப்பாய் கணினியைச் சுட்டி காட்டினாள், ரீனா.


“ஹும்… அது சரி. ஸ்டேட் ஃபஸ்ட் ஸ்டூடண்டோட கம்ப்யூட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு போல.” சிரித்துக் கொண்டவர், புரியாமல் விழிக்கும் ஜோசபைப் பார்த்து, “என்ன ஃபாதர் உங்களுக்கு இன்னும் புரியலையா? நம்ம ரீனா… போர்ட் எக்சாம்ல 99.9% மார்க் ஸ்கோர்ப் பண்ணிருக்கா.” என்றார் மரியகோஸ் பெருமையாக.


“வாட் 99.9% மார்க்ஸா? உண்மையாவா?” நம்பாமல் ஸ்டெல்லா விளிக்க, “யஸ்… அதுவும் டிஸ்ட்ரிக்ட் லெவல் இல்ல, ஸ்டேட் லெவல்ல ரீனா தான் ஃபஸ்ட் ரேங். உங்க பொண்ணு ரொம்ப பெரிய சாதனைப் பண்ணிருக்கா.” பெருமையுடன் கூறினார் மரியகோஸ்.

“ஓ ஜீசஸ்…” கண்களில் நீர்ப் பெருக, இரு கைகளையும் இணைத்து விண்ணை நோக்கி நின்றார் ஸ்டெல்லா.

“மை குயின்… ஐ நியூ இட்!” என மகிழ்ச்சியில் கத்தி, ரீனாவைத் தழுவிக் கொண்டார் ஜோசப்.

“டாட்… ரியலாவா?” இன்னும் நம்ப முடியாமல் தந்தையின் மார்பில் முகம் புதைத்தாள் ரீனா.

“இது என்ன கேள்வி ம்ம்ம்? எல்லாம் நீ போட்ட எஃபோர்ட். அதற்கான பலன லார்ட் ஜீசஸ் உனக்குக் கொடுத்திருக்கிறார்.” அவளின் கூந்தலை வருடினார் அவர்.

“வாவ் அக்கா! இனிமே நீ ஃபேமஸ் ஆயிடுவ.” சந்தோசத்தில் குதுகளித்தான், சார்லஸ்.

“ஆமா பாஸ்டர்! சார்லஸ் சொல்றது ட்ரூவ் தான். ஆக்ச்சுவலி நான் வந்ததே அத சொல்லத்தான். ரீனாவ இன்டர்வியூ பண்ண பாப்பலர் மீடியாஸ் எல்லாம் ஸ்கூல் வாசல்லக் காத்திருக்காங்க. நீங்க எப்ப வருவீங்க?” என்றார் மரியகோஸ் ஆர்வமாக.

“இதோ இப்ப கிளம்புறோம் மரியகோஸ்.” உடனே உற்சாகமானவர், “ரீனா! ம்… சீக்கிரம் ரெடியாகுடா. இது உன்னோட லைஃப்லையே இம்பார்ட்டான டே. வந்திருந்த ரிப்போர்டர்ஸுக்கு முன்னாடி நீ ஏஞ்சல் மாதிரி ஜோலிக்கனும்.” எனத் தனது மகளை விரட்ட, “இருங்க ஃபாதர். நான் உங்க கிட்ட இன்னொன்னும் சொல்லனும்.” என்றார் மரியகோஸ் பூடகமாக.

“என்ன மரியகோஸ்?” ஆர்வத்துடன் ஜோசப் புருவம் இடுக்க, “ரீனா மார்ப் பார்த்து ஃபாரின் யுனிவெர்சிட்டில இருந்து ஸ்காலர்ஷிப் ஆஃபர்ப் பண்ணிருக்காங்க ஃபாதர். போர்டிங் கூட அவங்களே பார்த்துக்கிறாங்கலாம்.” மகிழ்ச்சியுடன் மரியகோஸ் பதில் கொடுக்க, “வெளிநாடா?” அதிர்ச்சியுடன் அனைவரும் ஓரே நேரத்தில் சத்தமிட்டனர்.

“யஸ் ஃபாதர்! ரீனாவுக்கு இது மிகப் பெரிய ஆப்பர்ச்சுனிட்டி. அதுவும் அங்க போய் மெடிகல் படிச்சானா, மம்ம்… அவ ஃப்யூச்சர்ப் பத்தி நீங்க கவலையே படவேண்டியதில்ல. மார்க் மை வோர்ட் அவ ஃப்யூச்சர்ல எங்கேயோ போயிடுவா.” ஆருடம் கூறினார், மரியகோஸ்.

“ம்ம்ம்… ஆமா ஜோசப். சார்ச் சொல்றதும் கரக்ட் தான்.” பதிலுக்கு ஸ்டெல்லாவும் ஆமோதித்திட,“சார் எனக்கு ஃபாரின் போக இஷ்டமில்ல.” மெதுவாக அதே நேரம் அழுத்தமாகத் தனது முடிவை அறிவித்தாள், ரீனா.

அவளின் பதில் கேட்டு அவ்வறையே அதிர்ந்து விழிக்க, “என்ன ரீனா என்ன ஆச்சு உனக்கு? சார்ச் சொன்ன மாதிரி இது உனக்குக் கிடச்சிருக்கிற பெரிய ஆப்பர்ஜுனிட்டி. அதைப் போய் ஏன் வேணாம்ங்கிற?” கண்டித்தார், ஸ்டெல்லா.

“ஐ தீங்! ஃபார்ன் போனா அதிகம் செலவாகும்னு ரீனா யோசிக்கிறா போல.” கருத்துக் கூறினான், சார்லஸ்.

“அப்படியா ரீனா? சார்லஸ் சொல்ற மாதிரி உனக்குப் பணம் தான் பிரச்சனையா?” தனது இயலாமையால் தான் மகள் தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஏற்க மறுக்கிறாளோ என நினைத்துக் கலங்கியவர், “இங்க பாருடா ரீனா! பணத்தைப் பத்தியெல்லாம் நீ என்னைக்கும் கவலப்படாத. உன் மாம் சொன்ன மாதிரி நான் பில் கேட்ஸ் எல்லாம் இல்லத் தான். ஒரு சாதாரண சர்ப் பாஸ்டர் தான். இருந்தாலும் உனக்காக நான் என்னவேணாலும் செய்வேன். புரியுதா? இப்ப சொல்லு. ஏன் ஃபாரின் போக முடியாதுங்கிற?” விழிகளால் மகளை அளவிட்டபடியே வினவினார், ஜோசப்.

“ஐயோ டாட் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல!” பதறி மறுத்தவள், பின் மெல்லத் தனது பேச்சைத் தொடர்ந்தாள்.

“ஆக்ச்சுவலி டாட், எனக்கு டாக்டராகனும்ங்கிற எண்ணமே இல்ல. எனக்கு, இஸ்ரோல சேரனும், சேர்ந்து அப்துல் கலாம் மாதிரி பெரிய சான்டிஸ்ட் ஆகனும் அவ்வளவு தான். அதோட நான் அங்க போயிட்டா, உங்கள எல்லாம் நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். எனக்கு என்ன விட, என் ஆசையை விட நீங்களும் நம்ம பேமிலியும் தான் முக்கியம்.” எனத் தீர்க்கமாக கூறி இவளோ தனது உரையை முடிக்க, “ஆமா டாட்! ரீனா போயிட்டா எனக்கும் செமையா போர் அடிக்கும்.” என்றான் சார்லஸ் முக வாட்டத்துடன்.

பெற்ற குழந்தைகள் இரண்டும் ஒன்றை ஒன்று விட்டுக் கொடுக்காமல் இருப்பதைக் கண்டு சந்தோசம் கொள்வதா? இல்லை இந்தப் பாசமும் அன்பும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்குமா? என்ற குழப்பத்தில் ஸ்டெல்லாவும் ஜோசப்பும் ஒருவரை ஒருவர்ப் பார்த்துக் கொண்டனர்.

“ஹும்! அதுவும் சரிதான் ரீனா! டாக்டர்ப் படிக்கிறத விட சயின்டிஸ்ட் ஆகுறது ஸ்கூலுக்குப் பெருமை தான்.” என ரீனாவை மெச்சியவர், ஜோசப்பைப் பார்த்து, “சரி ஃபாதர் நான் அப்ப கிளம்புறேன். நீங்களும் சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு வாங்க.” என்றபடி அந்த அழகான குடும்பத்திடம் விடைப்பெற்றுச் சென்றார், மரியகோஸ்.

அவர்ச் சென்றதும் பெரமிதத்துடன் தனது மகளிடம் திரும்பினார், ஜோசப்.

மெச்சுதலுடன் அவளை ஏறிட்டவர், “சரி டா ரீனா. டாட் எப்பவும் உன்னோட ஆசைக்கு நோ சொன்னது இல்ல. இனியும் சொல்ல மாட்டேன். இப்ப என்ன நீ சயின்டிஸ்ட் ஆகனும் அவ்வளவு தான? ம்ம் சரி டா உன் இஷ்டம் போல படி.” என்றார் அவளின் கூந்தலை வருடி.

“ஆமா ரீனா எனக்கும் உன் சந்தோசம் தான் முக்கியம்.” என ஸ்டெல்லாவும் அவர்ப் பங்குக்கு மகளின் கன்னத்தை வருட, தாய் தந்தையின் பாசம் கண்டு உள்ளம் நெகிழ்ந்தாள், ரீனா.

விழிகளோ ஆனந்த கண்ணீரைச் சுரந்து தள்ள, “மாம்… டாட்… ஐ லவ் யூ… லவ் யூ டாட்! லவ் யூ மாம்.” என்றாள் ரீனா நா தளதளக்க.

“அட இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா?” எனக் கேட்டு மகளின் கண்ணீரை ஜோசத் துடைக்க, “டாட்…” எனக் கதறியபடியே அவரைக் கட்டிக் கொண்டவள், “அட என்ன டா எதுக்கு அழுவுற?” எனக் கேட்டு பாசத்துடன் அவளின் கேசத்தை வருடிய ஸ்டெல்லாவையும் இவள் சேர்த்து அணைத்துக் கொள்ள, “ஹேய்! என்ன? என்ன மறந்துட்டீங்களா?” சிணுங்கியபடியே மூவருக்கும் இடையில் புகுந்தான் சார்லஸ்.

“அதானே பார்த்தேன் என்னடா என் பொறாமைப் பிடிச்ச கேஸ் ஸ்டவ் இன்னும் வரலையேனு.” செல்லக் கடிதலுடன் அவனது காதை அன்று திருகியதை நினைத்துப் பார்த்து இன்று கண்ணீர் வடித்தாள், ரீனா.

அதைத் துடைக்க கூட மனமின்றிக் கையிலிருந்த புகைப்படத்தை மார்போடு சேர்த்து இறுக அணைத்தவள், “யார்க் கண்ணு பட்டதோ தெரியல. நம்ம பேமிலி இப்படிச் சின்னபின்னமா சிதறி போச்சே.” என்றாள் உடல் குழுங்க.

புயலென உள்ளமோ கொந்தளிக்க, மடைதிறந்த வெள்ளமாய் விழிநீரோ உடை நனைக்க, தனது இழிநிலை நினைத்து ஒருபாடு அழுது தீர்த்தவள், பின் கண்ணீரைத் துடைத்தபடியே, “நோ டாட் நோ… உங்களுக்கே என்ன பத்தி தெரியும்ல நான் அவ்வளவு சீக்கிரத்துல என் தோல்விய ஒத்துக்க மாட்டேன்.” சூழுரைத்தாள்.

“எனக்கு… உங்களப் பார்க்கனும், மாம் மடியில தூங்கனும், சார்லஸ் கூட சண்டைப் போடனும். அதுக்காக நான் என்னவேணாலும் செய்வேன். யார்க் கால்ல வேணாலும் விழுவேன்.” என்று இவள் முடிக்கும் முன் அதிரடியாய் அவ்வறைக்குள் நுழைந்தனர், சிலர்.

வாட்டசாட்டமாய் இருந்தவர்களைக் கண்டதுமே, இலவசமாய் பயம் வந்து ஒட்டிக் கொள்ள, “யா… யாருங்க நீங்க? எதுக்காக இங்க வந்தீங்க?” என்று இவள் திக்கித் திணற, வெடுக்கான அவளின் புகைப்படத்தைப் பிடுங்கினான், ஒருவன்.

“ஐயோ எ… என் போட்டோ என் போட்டோ.” என்று இவள் பதற, வலுக்கட்டாயமாய் அவளின் இரு கரத்தையும் முதுகு பின்னால் கட்டினான், மற்றொருவன்.

வேறோருவனோ அவளது கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்ட, “ஐயோ என்ன பண்றீங்க? எ… என்ன விடுங்க, விடுங்க.” பயந்து அலறினாள், ரீனா.

அவள் அலற அலற வலுக்கட்டாயமாக அவளை இழுத்துச் சென்றவர்கள் பல வாகனங்களை வந்துப் போகும் நெடுஞ்சாலையின் மத்தியில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தினர்.

வாகனங்கள் ஒவ்வொன்றும் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க, ஒவ்வொரு வாகனம் கடந்துச் செல்லும் போதும் உயிர்ப் போய் உயிர் வந்தது ரீனாவுக்கு.

உடலோ கிடுகிடுவென நடங்கிட, வியர்வையோ அருவி போல் கொட்ட, இதயமோ படபடவென அடித்துக் கொள்ள, உயிர்த் தப்பிக்கும் பொருட்டு கட்டிய கயிறோடு இவள் போராட, கருப்பு நிற உயரகக் கார் ஒன்று அவளை இடிப்பது போல், சொல்லப் போனால் அவளை இடிக்கும் எண்ணத்துடன் படுவேகமாக அவளை நோக்கி விரைந்து வந்தது.

தொடரும்.... 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்