தீ மீது வீணை 12
அத்தியாயம் 12
பள்ளியறை செல்லும் மணமகனாய் அவனியை காண விரைந்தோடி வந்தான், ஆதவன்.
அவனை கண்டதும் பசலை படர்ந்த காதலியாய் அவனின்றி சோர்ந்திருந்த செந்தாமரையோ, இப்போது புன்னகையுடன் மலர்ந்து விரிந்தது.
அதனிடம் மது உண்ண வந்த ஞிமிறுவை பிடிக்க தாவிய கயலோ, தவறுதலாய் மலரின் மகரந்த சேற்றில் குதிந்து மதி மயங்க, மயங்கிய அக்கயலை பிடித்துக் கொண்டு சிச்சிலி பறந்தது.
அலகு நீண்ட கிச்சிலிடமிருந்து இரையை கவர, கரிச்சானும் நாரையும் போட்டிப் போட, இதையெல்லாம் தேவாலய கோபுரத்தில் அமர்ந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, பூங்குருவி.
நாவல், தேக்கு, சந்தனம் போன்ற மரங்களில் குடிக் கொண்டிருந்த நத்தைகளை கொத்தி உண்ட களைப்பில் அப்பூங்குருவியோ சோர்ந்திருக்க, அதன் அசதியை போக்கும் வண்ணம் தேவாலயமோ மணியோ ஓங்கி ஒலித்தது.
“டணாங்… டணாங்…” என்று ஒலித்த அச்சத்தத்தில் அரண்டு திசை மறந்து அப்பறவையோ தனது சிறகை விரித்து பறந்திட, அந்த தேவாலய மணியோசைக்கு இணையாக, “டிரீங்… டிரீங்…” என ஓசை எழுப்பி அவனை எழுப்ப போராடிக் கொண்டே இருந்தது மைக்கேலின் கைப்பேசி.
அவளை உண்ட களைப்போ? வென்ற களைப்போ? எதுவோ அவன் அசந்து தூங்க காரணமாய் அமைய, என்றும் இல்லாமல் இன்று அடித்துப் போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்தான், மைக்கேல்
அவனது கும்பகர்ண தூக்கத்தை கலைக்க, கைப்பேசிக்கு உதவியாக அவன் வீட்டு தலைமை பணியாள் டெய்சியும், அவனது உதவியாளன் கிரிஸ்டோபரும், “பாஸ் பாஸ்…” என்றும் “சார் சார்…” என்றும் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அடிக்கடி கை கடிகாரத்தை பார்த்தபடியே, “ஐயோ மீட்டிங்'க்கு வேற டைம் ஆச்சே.” என புலம்பிய கிரிஸ்டோபர், “என்ன பார்த்துட்டு சீக்கிரம் அவர எழுப்பு.” என்று டெய்சியை அரட்டி விரட்ட, அவளும் அவனுக்கு பயந்து, “சார்… சார்…” என சத்தமிட்டு மைக்கேலின் தோளில் கை வைத்து உழுக்கினாள்.
இரண்டொரு முறை அவனை உழுக்கிய பிறகே, அரை கண் போட்டு எழுந்தான், மைக்கேல்.
“ப்ச்… என்ன?” அரை தூக்கத்தில் இவன் வினவ, “காபி சார்.” பணிவாக அவனுக்கு முன் காபி குவழையை நீட்டினாள், டெய்சி.
“காஃபியா?” சோம்பல் முறிந்தவன், “ஆமா அவள எங்க? அவகிட்ட கொடுத்து அனுப்ப வேண்டியது தான?” உறுமியபடியே அவன் எழுந்து அமர, “காலையில இருந்து அந்த கழுதைய காணோம் சார். எங்க போய் தொலைஞ்சிதோ.” அலட்சியமாய் பதில் பகிர்ந்தாள், டெய்சி.
அவளது அலட்சியம் அவனிடம் இல்லை போலும், “வாட்? அவள காணோமா?” என்று பதறி படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான், மைக்கேல்.
“ஆமா சார்… நானும் அவள பங்களா முழுசும் தேடி பார்த்துட்டேன்.” என்ற டெய்சியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் விறுவிறுவென நேற்று அவள் இருந்த அறைக்கு இவனோ விரைந்தோட, அவனுக்கு பின்னாடியே கிரிஸ்டோபரும் டெய்சியும் விரைந்தனர்.
அறைக்குள் நுழைந்ததுமே அவன் விழிகள் ஏனோ அவளை தேடி அங்கும் இங்கும் அலைப்பாய்ந்தன.
“எங்க அவ? வேர் இஸ் சீ?” படபடத்தபடியே கட்டிலுக்கு கீழ், அலமாரியின் உட்பக்கம் என ஒவ்வொரு இடமாய் அலசி ஆராய்ந்தான்.
அவனோடு அவர்களும் அவளை தேட, சுற்றும் முற்றும் தேடிவிட்டு இறுதியாக குளியலறைக்கு வந்தான்.
வந்தவனுக்கு ஜன்னல் கம்பிகளில் கட்டப்பட்டிருந்த துணியும், திறந்து வைக்கப்பட்டிருந்த எக்ஸாஸ்ட் ஃபேனின் துளையும் அவள் தப்பி சென்ற வழியை பட்டவர்தனமாய் அவனுக்கு பறைசாற்ற, உடல் இறுக, “ரீனா…” என அறை அதிர கத்தினான், மைக்கேல்.
அவன் சத்தம் கேட்டு அவனது பணியாளர்களும், பாதுகாவலர்களும் அவ்விடம் கூட, “யூ… புல் சிட்… ஒருத்தி இந்த வீட்ட விட்டு வெளிய போற வரைக்கும் நீங்க எல்லாம் எங்கடா புடுங்கிட்டு இருந்தீங்க?” கோபத்தில் இவனோ கர்ஜிக்க, பதிலுக்கு அவர்களோ பதில் பேசாமல் பயந்து விழித்தனர்.
“ம்ம்ம்… போங்க… எனக்கு இப்ப அவ வேணும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன்'னு ஒன்னத்தையும் விடாதீங்க. எங்க இருந்தாலும் சரி இன்னும் ஒன் அவர்ல அவ இங்க இருக்கனும்.” பற்களை அரைத்து கட்டளையிட்டான், மைக்கேல்.
அவனது கட்டளையை ஏற்று அவர்களும் அவளை தேடி ஆளுக்கு ஒரு பக்கம் விரைந்திட, “ரீனா…” பற்களை நறநறவென கடித்து ஜன்னலில் ஒட்டியிருந்த துணியை இறுகப்பற்றினான், மைக்கேல்.
“ஹவ் டேர்… ஹவ் டேர் டூ எஸ்கேப்?” என பற்களை அறைத்தவன், கோபத்தில் ஜன்னல் கம்பிகளின் ஓங்கி ஒரு குத்தினான்.
அவனது வேகத்தில் அக்கம்பிகளோ வளைந்து நெளிந்திட, இவனுக்கோ சிறு கீறல் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது.
“ஐயோ சார்…” என்று டெய்சி பதற, “ஷிட்…” வலியில் கரத்தை உதறியவன், “அவ எங்க போயிருப்பா? எவ்வளவு தூரம் போயிருப்பா?” தனக்கு தானே முணுமுணுத்தபடியே அங்கும் இங்கும் அலைந்து அவ்வறையை அளந்தான்.
அவனுக்கு உதவியாக கிரிஸ்டோபரும் கைப்பேசி வாயிலாக அவனுக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் ரீனாவை பற்றி விசாரித்தான்.
எங்கும் தேடினும் அவள் சென்ற சுவடு கூட இவர்களுக்கு கிடைக்காமல் போக, நேரம் செல்ல செல்ல மைக்கேலின் கோபம் எக்குதப்பாக எகிறியது.
விழிகள் சிவந்து துடிக்க, “ரீனா… எங்க… எங்க டி போன? எங்க போய் தொலைஞ்ச?” என்று இவன் கத்த, “என்னாச்சு? நீங்க எல்லாம் யார தேடுறீங்க?” ஏதோ தனக்கும் அங்கு நடப்பவைகளுக்கு சம்பந்தமே இல்லாதவள் போல் மெல்ல நடந்து அவ்விடம் வந்தாள், செரீனா.
அவளிடம் கோபத்தை காட்ட விரும்பாமல் அதே நேரம் அன்பாக பேசவும் விரும்பாமல் மைக்கேலோ அமைதி காக்க, அவனது குரலாக, “மேடம் அந்த பொண்ணு அதான் அந்த ரீனா அவ… எங்கையோ ஒடி போயிட்டா மேடம்.” பதில் கொடுத்தாள், டெய்சி.
“ஏது ரீனாவ காணோமா?” அப்போது தான் கேட்பது போல் அதிர்ச்சி காட்டி அவளோ பாவனை செய்திட, “ரீனா உன் பிரண்டு தான? உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?” விழிகளை கூர்மையாக்கி அவளிடம் வினவினான், மைக்கேல்.
“ஐய்யயோ… இல்ல இல்ல…” அவளோ பதறி மறுத்திட, அந்நேரம் பார்த்து மைக்கேலின் அலைப்பேசி அவனை அவசரமாய் அழைத்தது.
ஒரு நிமிடம் அவளை பார்வையால் அளவிட்டபடியே கைப்பேசியை எடுத்து காதிற்கு கொடுத்தான், மைக்கேல்.
“ஹப்பா…” நெற்றியில் பூத்த வியர்வை துளிகளை அழுந்த துடைத்தபடியே நிம்மதி பெருமூச்சு விட்டாள், செரீனா.
அதை கவனியாது இவனோ கைப்பேசியில் கவனத்தை பதிக்க, “ஹலோ ஹலோ… மைக்கேல் சார்ங்களா?” எதிர்முனையில் ஒர் ஆண் குரல் கேட்டது.
பதிலுக்கு இவனோ யோசனையுடன், “ம்ம்ம்…” என்று மட்டும் குரல் கொடுக்க, “சார்… சார்… நீங்க தேடுற பொண்ணு என் கண்ணு முன்னாடி தான் சார் இருக்கா?” என்றான் அவன்.
“நான் தேடுற பொண்ணா? ஆமா நீ யார்?” சந்தேகத்துடன் இவன் வினவவும் அவ்விடம் வார்த்தைகள் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டதற்கு சான்றாக, “கீ்… கீ…” என்ற சத்தம் மட்டும் வந்தது.
“ஓ… ஷிட்…” கோபத்தில் இவனோ தொடையை தட்ட, “வாட் ஹெப்பன் பாஸ்?” ஆர்வத்துடன் விசாரித்தான், கிரிஸ்டோபர்.
“இந்த நம்பர ட்ரெஸ் பண்ணு.” கட்டளையுடன் தனது கைப்பேசியை அவனிடம் கொடுத்தான், மைக்கேல்.
“ஓகே பாஸ்…” பணிவுடன் இவனோ கைப்பேசியை வாங்க, அந்நேரம் பார்த்து மைக்கேலின் எண்ணிற்கு பகரி செய்தி ஒன்று வந்தது.
அச்செய்தியை அனுப்பியது சற்று முன் மைக்கேலை அழைத்த அதே புது எண் தான்.
“பாஸ் இங்க பாருங்க.” என்றபடியே கிரிஸ்டோபர் கைப்பேசியை மைக்கேலிடம் காட்ட, பெறபட்ட அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட ஒரு இடத்தின் கூகுள் வரைப்படம் இடம்பெற்றிருந்தது.
குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்தது இடம், குடகின் ஹாரங்கி படகு சவாரிக்கு அருகில் இருந்தது.
தொல்லை செய்தும் குரங்குகளை, “சூ… சூ…” என்று விரட்டியபடியே நனைந்து போன கைப்பேசியை பிரித்துப் போட்டு காய வைத்துக் கொண்டிருந்தாள், ரீனா.
விழிகளில் பதற்றமும் யாரேனும் தனக்கு உதவ மாட்டார்களா என்ற ஏக்கமும் தெரிந்தது.
அடிக்கடி மறைந்தும் வெளிப்பட்டும் அவள் தன்னை காக்க போராடிக் கொண்டிருக்க, “ஏய் ரீனா! நீ இங்க எப்படி?” என கேட்டபடியே அவ்விடம் வந்தனர் மூவர் வந்தனர்.
வந்து மூவரும் அவளுடன் கல்லூரியில் படித்தவர்கள்.
முதலாதவன் தாமஸ், இரண்டாமவன் வினோத், மூன்றாமவன் தீர்த்.
அவர்களை பார்த்தும், ‘இவனுங்களா?’ முகம் சுளித்தாள், ரீனா.
மூவரும் வெவ்வேறு காலகட்டத்தில் அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தியவர்கள்.
மூவருக்கும், “நோ…” சொல்லி அப்போதே அவர்களை துண்டித்திருந்தாள், ரீனா.
அவர்களை, அதுவும் ஒன்றாக அவ்விடம் கண்டதும் துணுக்குற்று இவளோ எழுந்து நிற்க, “ஏய் ரீனா! ஏன் எங்கள அவாய்ட் பண்ற?” வினவி அவளின் கரத்தை பிடித்தான், வினோத்.
“ப்ச்… விடு வினோத்.” சிடுசிடுப்பாய் இவள் தனது கரத்தை உதற, “அட ஏன்ம்மா நாங்க தொட்ட கூடாதா? இதுவே மைக்கேல் தொட்டாலும் இப்படி தான் சிணுங்குவீயா?” கேட்டபடியே அவளின் தோளை தொட்டான், தாமஸ்.
“ச்சீ விடு டா ராஸ்கல்.” தீயாய் முறைத்து தொட்டவன் கன்னம் பளுக்க அரை விட்டாள், ரீனா.
“ஆ…” என்று தாமஸ் அலற, “என்ன டி திமிரா?” என பற்களை அரைத்து, அவளின் பிடரியை பற்றி பிடித்தான், தீர்த்.
வலி தாங்க முடியாமல், “ஆஆஆ…” என்று ரீனா அலற, அவளின் வாயில் கை வைத்து சத்தம் வராமல் அழுத்தினான், வினோத்.
“இவள?” தாமஸோ பற்களை அரைக்க, “ப்ச்… இங்க யாரோ வர்ற மாதிரி இருக்கு. அந்த பக்கம் போவோம்.” சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டபடியே கட்டளையிட்டான், வினோத்.
அவனது வார்த்தை முடியும் முன்பே, மற்ற இருவரும் ரீனாவின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டனர்.
“ம்ம்…” முனங்கியபடியே அவர்களிடமிருந்து திமிறித் தப்பிக்க போராடினாள், ரீனோ.
அந்தோ பரிதாபம், ஹார்ங்கி நீரோடையின் சலசலப்பில், அவளது ஓலம் மற்றவர்களின் காதுகளை சென்றடையாமல் மங்கிப் போனது.
“பெரிய பணக்காரனதும் அவனுக்கு மட்டும் ஓகே சொன்னேல நீ? இன்னைக்கு உன்ன எங்க கிட்ட இருந்து யார் காப்பாத்துறாங்கனு நானும் பார்க்கிறேன்.” சூழுரைத்த வினோத்தோ, வாயோடு சேர்த்து அவளது கைகளை பிடித்துக் கொள்ள, அவனுக்கு உதவியாக தீர்த்தம் அவளது இரு கைகளையும் இறுக பற்றிக் கொள்ள, மிதிக்க மிதிக்க அவளது இரு கால்களையும் பிடித்து தூக்கினான், தாமஸ்.
அவள் திமிற திமிற மூவரும் அவளை தூக்கிக் கொண்டு ஆள் அரவமற்ற இடத்தை நோக்கி விரைந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊