தீ மீது வீணை 11
அத்தியாயம் 11
“இனி நீ வாழப் போற வாழ்க்கை… அது வாழ்க்கை இல்ல… நரகம்.” என்று அவன் உதிர்த்த வார்த்தையின் அர்த்தம் கொஞ்ச நேரத்திலேயே அவளுக்குத் தெளிவாகப் புரிந்துப் போனது.
புரிய வைத்தான், மைக்கேல்.
இத்தனைக்கும் நேற்று போல் இன்று அவன் அடிக்கவில்லை, கடிக்கவில்லை, கதறடிக்கவில்லை. இருப்பினும் ஏனோ அவளுக்கு வலித்தது.
எல்லா கணவனும் மனைவிடம் நடந்துக் கொள்வது போல் தான் நடந்துக் கொண்டான்.
தொட்டான், அணைத்தான், இதழ் பதித்தான், மென் கடி கடித்தான், இறுதியாக அவளுக்குள் தன்னை ஊற்றவும் செய்தான்.
இருந்தும் வலித்தது. காரணம் இதே போலத் தானே அவளையும் தொட்டிருப்பான்? இதே போலத் தானே அவளையும் அணைத்திருப்பான்? இதே போலத் தானே விரகதாபத்தில் அவளையும் கடித்திருப்பான்? இதே போலத் தானே உயிர் அணுக்களை அவளிடமும் கொட்டிருப்பான்? என்ற எண்ணமே அவளின் உச்சப்பட்ச வலிக்குக் காரணமாய் அமைந்தன.
தன்னவன், தனக்கு மட்டுமானவன் என்ற உரிமைக்கும், அவன் வேறொரு பெண்ணின் கணவன் என்ற உண்மைக்கும் இடையே சிக்கிக் கொண்டு நரக வேதனை அனுபவித்தாள், ரீனா.
அவள் அப்படி அனுபவிக்க வேண்டும் என நினைத்தே மிகவும் நுட்பமான தண்டனை தான் அளித்திருந்தான், மைக்கேல்.
அந்தத் தண்டனை உடலை விடுத்து உணர்வுக்குள்ளும் உயிருக்குள்ளும் சென்று தாக்கிட, அழுவதா? சிரிப்பதா? என்ற குழப்பத்தில் இவளோ கேள்வியாய் அவனைப் பார்க்க, அவனோ வந்த வேலை முடிந்ததும், திரும்பிப் பார்க்காமல் நடையை கட்டினான்.
ஏதோ வேசியிடம் வந்து செல்லும் வாடிக்கையாளன் போல்…
அவனை அப்படி காண்கையில் இதயம் ஏனோ கணத்தது.
இதயம் கணத்ததாலோ என்னவோ உடலும் பாறாங்கற்களை சுமப்பது போல் கணம் கொள்ள, சிறிது நேரம்
எழுந்து அமரக் கூட விருப்பமின்றி அப்படியே கிடந்தாள்.
அடித்து அழவோ, வெடித்து அழவோ, விம்மி அழவோ கூடத் தோன்றவில்லை.
வேர் அறுந்த பட்டமரமாய் சிறிது நேரம் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தாள்.
உடலை அசைக்கக் கூடப் பிடிக்கவில்லை. ‘என் மேல உனக்கு இவ்வளவு கோபமா? காதலித்தேன் என்றாயே இது தான் உன் காதலா? காதலின் அடிப்படை நம்பிக்கை அல்லவா?’ முகத்திற்கு நேராகக் கேட்க வேண்டிய கேள்விகளைத் தன்னுள் உறைந்திருக்கும் அவனிடம் கேட்டாள்.
அவளுக்குள் இருப்பவனோ எப்போதும் போல் புன்னகைக்க, நடு காட்டில் சிக்கிக் கொண்ட உணர்வு.
எவ்வளவு நேரம் அப்படியே அந்நிலையிலேயே கிடந்தாளோ அவளே அறியாள்.
ஆனால், கார் இருளுக்கு இடையே முகிழ்ந்த சிறு ஒளி கீற்றுப்போல், சொல்லொண்ணா துயரத்திற்கு நடுவே, ஏதோ ஒரு மூலையில், “ரீனா… திஸ் இஸ் யுவர் டைம். திஸ் இஸ் எ டைம் ஃபார் எஸ்கேப். ஸ்டே ஸ்டாங்… பி பிரேவ்… இப்ப நீ இங்கிருந்து தப்பிக்கலனா இன்னொரு சான்ஸ் உனக்குக் கிடைக்காமயே போகலாம். ஜஸ்ட் கோ ரீனா! கோ ரன்.” என்ற குரல் மட்டும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.
அந்தக் குரல் கேட்டு உணர்வு வந்தவளாய் விழி நீரை அழுத்தமாய் துடைத்துக் கொண்டு துள்ளி எழுந்தாள், ரீனா.
சிறிதும் தாமதிக்காது நிலைப் பேழையில் ஒளித்து வைத்திருந்த கைப்பேசியை எடுத்தாள்.
குளியலறைக்குள் சென்றாள்.
அங்கிருக்கும் அலமாரியில் ஒளித்து வைத்த, திரித்து வைத்த துணி கயிற்றைக் கையில் எடுத்து ஜன்னலில் கட்டினாள்.
ஜன்னலுக்கு மேலிருந்த எக்ஸாஸ்ட் ஃபேனின் ஸ்க்ரூவை சத்தமின்றி மெல்ல கழட்டினாள்.
ஏற்கனவே பாதி கழட்டப்பட்ட ஸ்க்ரூ என்பதால், தொட்டதும் அதுவோ கையோடு வந்துவிட, கம்மோடுக்கு மேல் நாற்காலி போட்டு மெல்ல ஏறினாள்.
சுமார் ஒரு அடி விட்டம் சிறு துவாரம் அது.
தோள்களைச் சுருக்கிக் கொண்டு உள்ளே நுழைய வேண்டியிருந்தது.
சிறிது கஷ்டம் தான் இருப்பினும் முக்கி முணங்கி எப்படியோ அந்தத் துவாரம் வழியாக வெளியே வந்தவளுக்கு வெளி காற்று பட்டதும் தான் நிம்மதியே.
“ஹப்பா…” பெருமூச்சு விட்டவள், லாவகமாகக் கயிற்றைப் பற்றிக் கொண்டு கவனமாய் கீழ் இறங்க, குளிர்ந்த காற்று அவளது பாதத்தில் பட்டு அவள் எதிர்க்கொள்ள வேண்டிய பெரும் ஆபத்தை அவளுக்கு உணர்த்தியது.
‘என்னது?’ யோசனையுடனே இவளோ கீழே பார்க்க, அவளது காலுக்குக் கீழ்
சுமார் எட்டடி விட்டம் கொண்ட வட்ட கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
தண்ணீர் மேல் வரை இருக்கிறது என்பதற்கு சான்றாக நிலவோளியோ அழகாய் அங்கே மின்ன, இவளுக்கோ ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது.
‘எப்படி இங்கிருந்து தப்பிக்க போறோம்?’ என்ற எண்ணமே சோர்வை தர, சிறிது நேரம் தயங்கியபடியே அந்தரத்தில் தொங்கியவள், பின், ‘ஐயோ ரீனா இன்னும் என்ன பார்த்துட்டு இருக்க? இப்ப உன்னால மேலவும் போக முடியாது. இப்படியே இருக்கவும் முடியாது. நீ பிடிச்சு இறங்கினது வெறும் துணி கயிறு தான். அது இவ்வளவு நேரம் உன்ன தாங்குனதே அதிசயம். இன்னும் லேட் பண்ணாத! கயிறு தானா அறுந்துடும். நீயா இறங்கினா கூடச் சத்தம் வராம இறங்கலாம். கயிறு அறுந்தபிறகு விழுந்தினா, உஹும்… அவ்வளவு தான் உன் கதி அதோ கதி. டொம்’னு நீ விழுற சத்தம் கேட்டு ஆளுங்க வந்துருவானுங்க. சும்மாவே மைக்கேல் உன்ன எப்படியெல்லாம் புதுசு புதுசா பலி வாங்கலாம்னு லிஸ்ட் போட்டு வச்சிருக்கான். அதெல்லாம் வேண்டாம்னா கீழ இறங்கு. தெரிஞ்ச ஸ்வீம்பிங் வச்சி எப்படியும் தப்பிச்சிடலாம். ம்ம்ம் நான் சொல்றத கேளு. கிறங்கு.’ எனத் தனக்குள் ஏதேதோ பேசி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“ம்ம்ம்ஹா…” என்ற ஆழ்ந்த பெருமூச்சுடன் துணிந்து கிணற்றுக்குள் இறங்கினாள்.
குடகு குளிரின் தாக்கத்தால் நீரில் கால் பட்டது நரம்புகள் அனைத்தும் சுண்டி இழுத்தன.
“ஸ்ஸ்ஆ…” குளிர் தாங்காமல் முணங்கியபடியே நீருக்குள் இறங்கினாள்.
இறங்க இறங்க குளிரின் தாக்கம் கூடிக் கொண்டே போக, உடல் விரைத்தது. கால்கள் தடுமாறின.
நிதானமின்றி அங்கும் இங்கும் சிறிது நேரம் தத்தளித்தாள்.
பிடிக்காத உணவை உமிழும் குழந்தைபோல் தண்ணீரோ பெரும் பெரும் அலைகளை எழுப்பி அவளை வெளியே தள்ள, இவளுக்கோ மேல் கீழ் மூச்சு வாங்கியது.
‘ஈசி டாஸ்க்.’என நினைத்து இறங்கியவளுக்கு, கிணற்று நீரோ தண்ணி காட்ட, முதலில் மிரண்டவள் பின் சுதாரித்து நிதானமாய் கைகளைத் துடுப்பாக்கி நீச்சலடித்து மறுமுனைக்கு வந்தாள்.
கிணற்று சுற்று சுவரில் பாசமோ நிறைந்திருக்க, இரண்டொரு முறை கைகள் வழுக்கின.
இருப்பினும் முயற்சியைக் கை விடாமல், தப்பிக்க வேண்டும் என்ற வெறியில் அழுத்தமாய் கரம் பதித்து மேலே ஏறினாள்.
‘டேங் காட்.’ மார்பில் கை வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து கீழே குதிக்க, அந்தோ பரிதாபம்! கிணற்றுக்கு அருகே நடப்பட்டிருந்த ரோஜா செடியின் முற்களோ அவளின் அனிச்சம் மலர் பாதத்தைப் பதம் பார்த்தன.
“ஆவுச்…” வலியில் அலறியவள் பின் திருட்டு முழி பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இரு கைகளால் வாயை அடைத்தாள்.
‘ஹப்பா யாரும் வரல.’ என்ற நிம்மதியுடன் முற்கள் நிறைந்த அந்தப் பாதையில் மெல்ல நடந்து மதில் சுவரை அடைய, அங்கேயும் அவளுக்காக ஒரு சவால் காத்துக் கொண்டிருந்தது.
மதில் சுவரின் மேல் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி துண்டுகளோ நிலவொளியில் வைரமென மின்ன, ஒரு நிமிடம் திகைத்தவள், பின் தனது வரலாறை நினைத்துப் பார்த்து நகைத்துக் கொண்டாள்.
“ஹும்…” மனநல மருத்துவமனையில் அவள் பார்க்காத கண்ணாடி துண்டுகளா?
எத்தனை முறை அதனுடன் விளையாடி இருப்பாள்?
நகைத்தபடியே கட்டியிருந்த உடையின் ஒரு சிறு பகுதியை மட்டும் கிழித்து, கைகளிலும் கால்களிலும் கட்டிக் கொண்டு, மதில் சுவற்றின் மீதேற, கண்ணாடி துண்டுகள் சில அவளது கால்களைக் கிழிக்க தான் செய்தன.
மறத்துப் போன கால்களுக்கு அவை ஒன்றும் பெரிதாகப் படவில்லை.
தப்பிக்க போகிறோம் என்ற எண்ணம் தந்த உத்வேகத்தில் மதில் சுவரில் நடந்து மெல்ல வெளி பக்கம் குதிக்க, சுதந்திர காற்றோ மெல்ல அவளின் மேனி தழுவியது.
யாரோ எவரோ எனக் குழைக்க வந்த தெரு நாய்கள் கூட அவளின் மலர் முகம் கண்டு நட்பாய் வாலாட்ட, இன்முகமாய் அதன் தலையைத் தடவி கொடுத்தவள், “வரட்டுமா செல்லக் குட்டி.” எனக் கொஞ்சி விட்டு வானத்தைப் பார்த்தபடியே இருட்டுக்குள் நடந்தாள்.
ஏனோ வான் நிலவு கூட அவளின் சுதந்திரத்தை கண்டு புன்னகை புரிந்தது.
குளிர் காற்றோ இதமாய் வீச, பாசியுடன் கூடிய மண் வாசனையை நுகர்ந்தபடியே, செரீனாவை அழைத்துத் தான் தப்பித்த விசயத்தைச் சொல்வதற்காக மார்பு கூட்டுக்குள் ஒளித்து வைத்த கைப்பேசியை கையில் எடுத்தாள், ரீனா.
அதுவோ கிணற்று நீரில் நனைத்து அணைந்து கிடந்தது.
“அச்சச்சோ…” முகம் சுளித்தவள் கைப்பேசியை தட்டிய படியே வேக நடைப்போட, வெய்யோனோ தனது காதலியான அவனியை காண கிழக்கு வானில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊