Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 10

 அத்தியாயம் 10



அவன் வித்தை பழக, தான் கருவியாக போனோமே என்ற எண்ணமே அவளை கொல்லாமல் கொல்ல, இமை தாண்டி குதித்த விழி நீரையும், கேவி அழ துடித்த இதழையும், கடலென ஆர்ப்பரிக்கும் உணர்வுகளையும் அவனிடம் காட்ட விரும்பாதவள், போரில் புறமுதுகிட்டு ஓடும் கோழை போல், அவனுக்கு முதுகு காட்டி விரைந்து செல்ல, “ஏய்… ஏய் எங்க டி போற? என்ன திமிரா ஹாங்? ம்ம்ம்… சொல்லு டி.” என நெற்றி சுருங்க அதட்டினான், மைக்கேல்.



அவன் அதட்ட அதட்ட அவளோ காதில் வாங்காமல் விரைந்து ஓட, அவள் செல்லும் வரை அதட்டுவது போல் பாவனை செய்தவன், அவள் சென்ற பின், மர்ம புன்னகையுடன் கை சட்டையின் பொத்தானை நிதானமாக நிறுத்தி மாட்டினான்.



கூடு தேடும் பறவை போல், குலுங்கி அழ அறை தேடி அலைந்த பெண்ணவளோ, இறுதியாக ஒரு அறைக்குள் தஞ்சம் புகுந்து கதவடைத்துக் கொள்ள, அவளுக்கு முன் அவளின் கண்ணீரோ மடை திறந்த வெள்ளமென பாய்ந்து உடையை நனைத்தன.



துயரம் நிறைந்த மனமோ அன்னை மடி தேட, “ம்ம்மா…” என கதறியபடியே கதவில் சாய்ந்தவள், அப்படியே உடல் குலுங்கியபடியே குத்துகாலிட்டு தரையில் அமர்ந்தாள்.



துக்கமோ தொண்டையை அடைக்க, அஞ்சனமோ கண்ணீரில் முழுவதுமாய் கரைந்துப் போக,



எவ்வளவு நேரம் அழுதாளோ? தனது தீரா சோகத்தை கண்ணீரில் கரைக்க எண்ணி, உடல் நீர் மொத்தமும் வற்றி போகும் அளவிற்கு ஒருபாடு அழுது தீர்த்தாள்.



“நா… நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்? ஏன்… ஏன் ஜீசஸ் எ… எனக்கு மட்டும் ஏன் ஏன் இ… இப்படியெல்லாம் நடக்குது?” புலம்பியபடியே தேம்பி தேம்பி அழும் அவளின் அழுகைக்கு இடையூறாக, “கீ கீ…” என சத்தமிட்டது செரீனா பரிசளித்த பழைய பொத்தான் கைப்பேசி.



அச்சத்தத்தில் நடப்புக்கு வந்தவள் திரை விழும் உவர் நீரை இரு கையால் துடைத்துக் கொண்டு, மார்புக்குள் ஒளித்து வைத்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.



அவள் எடுப்பதற்குள் கிட்டத்தட்ட நான்கு ஐந்து குறுஞ்செய்திகள் செரீனாவால் பகிரப்பட்டிருந்தன.



சீரான இடைவெளியில் வந்திருந்தன.



முதலில் அம்மெல்லிய ஒலியை கவனிக்காமல் தனது அழுகையை தொடர்ந்தவள், பின் சீரான இடைவெளியிட்டு சத்தமிடும் அந்த அலைப்பேசியை மெல்ல கவனிக்க ஆரம்பித்தாள்.



“கீ கீ…” என்ற சத்ததுடன் அதுவோ இப்போது மெல்ல அதிர, கண்ணீரை துடைத்தபடியே மார்பில் ஒளித்து வைத்த கைப்பேசியை வேகமாக எடுத்து பார்க்கலானாள்.



கிட்டத்தட்ட நான்கு ஐந்து குறுஞ்செய்திகள் செரீனாவிடமிருந்து வந்திருந்தன.



“ஏய் ரீனா… என்ன டி பண்ற?” என்றும், “எங்க இருக்க?” என்றும், “என்ன பத்தி கவலப்படாத சீக்கிரம் கிளம்பு.” என்றும், “ஏய் இது தான் சரியான டைம். நான் மைக்கேலை நகரவிடாம பார்த்துக்கிறேன். நீ எப்படியாவது இங்கிருந்து கிளம்பு.” என்றும், இறுதியாக, “கிளம்பிட்டியா?” என்றும் அவள் கேட்டு அனுப்பியிருக்க, குழப்பத்துடன் கைப்பேசி பொத்தான்களில் விரல் வைத்தாள், ரீனா.



‘செரீனா சொல்ற மாதிரி தப்பிச்சி போயிடலாமா?’ என்று ஒரு மனமும், ‘சப்போஸ் மைக்கேல் கண்டுப்பிடிச்சிட்டா… என்ன பண்றது? கூட கொஞ்சம் கொடுமை பண்ணுவானே.’ என்று இன்னொரு மனமும் மாறி மாறி அடித்துக் கொள்ள, கட்டை விரலோ பொத்தான்கள் ஒவ்வொன்றையும் நிதானமாய் தடவி பார்த்தன.



இப்ப என்ன செய்றது? என்ற யோசனையில் இவளோ அமைதியாகிட,



‘டிக் டிக்…’ என்ற கடிகார சத்தம் மட்டும் அறையெங்கும் வியாபித்தது.



அந்த “டிக் டிக்…” சத்தமும், தேவாலய மணியின், “டிங் டாங்…” சத்தத்தையும், சிலுவை சுமந்த இயேசுவின் காலடியில் மண்டியிட்டு, அல்லேலூயா என ஜபிக்கும் ஜோசபின் குரலையும் ஞாபகப்படுத்த, எங்கிருந்து தான் அவ்வளவு தைரியம் அவளுக்கு வந்ததோ? அதுவரை தயங்கிய விரல்கள் இப்போது விறுவிறுவென இயங்க துவங்கின.



வேக வேகமாக எதையோ தட்டச்சி செய்தாள்… பின் ஏனோ உதட்டை கடித்தபடி அனைத்தையும் அழித்தாள். இறுதியில், ‘ம்ம்ம்…’ என்பதை மட்டும் பதிலாக தோழிக்கு அனுப்பி வைத்தாள்.



அவள் அனுப்பிய அச்செய்தி அவ்விடம் சென்றதோ இல்லையோ என்பதைக் கூட பாராமல் இதயத்தை திடப்படுத்திக் கொண்டு மெல்ல எழுந்தாள்.



கைப்பேசியை பத்திரப்படுத்திவிட்டு, ஜன்னல் வழியாக வெளியே நடப்பவைகளை நிதானமாய் நோட்டமிட்டாள்.



ஒரு இடத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் பலபலவென மின் விளக்குகள் எரிந்தன.



ஆட்கள் கூட அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அதிகமாக இருப்பதை கவனித்தவள், செரீனா சொன்ன அந்த இடம் அதுவாக தான் இருக்கும் என்பதை ஒருவாறாக ஊகித்துக் கொண்டு, தப்பிக்கும் மார்க்கத்தை யோசிக்க துவங்கினாள்.



இரவு வேளை என்பதால், அவள் இருக்கும் உயரத்தை அவளால் சரியாக கணிக்க முடியவில்லை.



தோராயமாக முப்பது அடி உயரத்தில் தான் இருக்கலாம் என்பதை கணித்தவள், இங்கிருந்து எப்படி கீழே இறங்குவது என்ற யோசனையில் சுற்றும் முற்றும் தனது விழிகளை ஓட விட்டாள்.



அவ்வறையில் மொத்தமாக நான்கு ஜன்னல்கள் இருந்தன.



அத்தனையும் தேக்கு மரத்தாலானது. இடையில் கம்பிகள் பொருத்தப்படாமல் இணைக்கப்பட்டிருந்தன.



அவ்வழியாக தப்பிக்க வேண்டுமென்றால் கம்பிகளை அறுக்க தான் வேண்டும். அதற்கும் ரம்பம் வேண்டும். ரம்பத்திற்கு எங்கே போவது? எப்படி இங்கிருந்து தப்பிப்பது?



“ஓ… மை காட். இப்ப என்ன பண்றது?” அங்கும் இங்கும் நடந்தபடியே புலம்பி தவித்தவளுக்கு குளியலறையில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேனும் அதற்காக துளையிடப்பட்ட சிறு துவாரமும் கண்ணில் பட, மின்னல் கீற்றையாய் யோசனை ஒன்று அவளின் சிந்தனையில் உதயமானது.



பார்க்க சிறு துவாரம் போல் இருப்பினும் அவளின் மெலிந்த தேகம் செல்ல போதுமானதாக இருக்கும் என்று கணித்தவள், மேற்கத்திய கழிப்பறையில் ஏறி நின்று அந்த எக்ஸாஸ்ட் ஃபேனின் ஸ்க்ரூவை விரல் நகங்களால் மெல்ல கழட்டினாள்.



சிறிது நேரத்தில் கழட்டி முடித்தவளுக்கு இப்போது அங்கிருந்து கீழ் இறங்க கயிறு வேண்டும்.



கயிறுக்கு எங்கே செல்வது என்ற கேள்விக்கு விடையாக மெத்தை விரிப்பு கண்ணில் தென்பட, அதை நீள நீளமாக கிழித்து கயிறாக திரிக்கலாம் என்ற எண்ணம் வர, பரபரவென மெத்தை விரிப்பை நாறு நாறாக கிழித்து, ஒன்றோடு ஒன்றாக இணைத்து கயிறு திரித்தாள்.



ஒரு முறைக்கு பல முறை அதை இழுத்து பார்த்து அதன் பலத்தை சோதித்தவள், குளியலறை ஜன்னல் கம்பியில் அதை கட்டி துவாரத்தின் வழியாக கயிற்றை தூக்கிப் போடும் நேரம்… யாரோ அந்த அறையின் கதவை பலமாக தட்டினர்.



“டம்… டம்…” என கதவு தட்டப்படும் சத்தத்தில் திடுக்கிட்டவள், இதயம் படபடக்க, செய்து வைத்த ஏற்பாட்டை யார் கண்ணிலும் படாமல் மறைத்து வைத்துவிட்டு, அரும்பிய வியர்வை துளிகளை துடைத்தபடியே அவ்வறையின் கதவை திறக்க, கலைந்த கேசத்துடன் அவ்வறைக்கு வெளியே, சோர்வுடன் நின்றிருந்தான், மைக்கேல்.



சட்டை பொத்தான்களின்றி திசைக்கு ஒன்றாய் திறந்து கிடந்தன.


திண்ணிய மார்பில் அங்காங்கே லிப்ஸ்டிங் கறைகளும் நக கீறல்களும் பதிந்திருந்தன.


வியர்த்து விறுவிறுத்து வந்திருக்கும் அவனைக் கண்டதுமே அவன் எங்கிருந்து வருகிறான் என்பது பட்டவர்தனமாக இவளுக்கு புரிந்து போக, முகம் சுளித்தவாறே தலை கவிழ்ந்தாள், ரீனா.


அவளின் அந்தக் கோலத்தை வன்மத்துடன் பார்த்தபடியே அவ்வறைக்குள் நுழைந்தவன்,


“ஹும்… மிஸஸ் ரீனா… ஓ… சாரி சாரி மிஸ் ரீனா!” என்றான் கேலியாக இதழ் வளைத்து.


அவனது பேச்சும், கேலிச் சிரிப்பும் அவன் அவ்விடம் வந்ததற்கான நோக்கத்தை அவளுக்கு சொல்லாமல் உணர்த்த, ‘நான் எதற்கும் தயார்.’ என்பது போல் மார்புக்கு குறுக்கே இரு கைகளையும் கட்டி, அதே நேரம் அவன் உதிர்க்கப் போகும் வார்த்தைகளை கேட்க தயங்கி தலை கவிழ்ந்தாள், ரீனா.


இதயத்தை குத்திக் கிழிக்க சொல்லாயுதம் கொண்டு வந்தவன் அதை உபயோகிக்காமல் விடுவானா?


பட்டை தீட்டிய அம்பாய் தனது வார்த்தைகளை கூர்மையாக்கி அவள்மேல் எய்திட தயாரானான், மைக்கேல்.


“ஏன் ரீனா? ஒரு பொண்ணுக்கு… அவ லவ் பண்றவன் வேறொருத்திக் கூட இருந்தா எப்படி இருக்கும்?” என்று அவன் ஆரம்பிக்க, முதல் அம்பே அவளின் இதயத்தை கிழிக்க போதுமானதாக இருந்தது.


கிழிக்கப்பட்ட திரைச்சீலையாய் அவளின் இதயம் அங்கேயே கிழிந்து தொங்க, சுயகௌரவம் கருதி தனது உள் உணர்வையும், விழி நீரையும் அவனிடம் காட்ட விரும்பாமல், பற்களை கடித்துக் கொண்டு சிலையென நிற்க, அவளையும் அவளது முக பாவனைகளையும் அளவிட்டபடியே, “டெஃபனட்லி கஷ்டமா தான் இருக்கும் இல்ல? என்றவன், “ஆஃப் கோர்ஸ் கஷ்டம் தான். இன்ஃபக்ட் வாய் விட்டு கதறி அழனும்னு கூட தோணும். தோணனும்…” என்றான் அழுத்தமாக.


அதில் கட்டியிருந்த அவளின் கைகள் தானாக அவிழ்ந்தன.


உவர் நீர் கூட அவளை கேளாமல் கசிய துவங்க, சட்டென அவனுக்கு முதுகு காட்டி நின்றாள், ரீனா.


அவளின் முகத்தை ஏக்கி பார்க்க முயன்றபடியே, “அதே லவ்வர் வேறொரு பொண்ணோட இருந்துட்டு அப்படியே வந்து அவள தொட்டா… ம்ம்ம்… அப்ப அவளுக்கு எப்படியிருக்கும் ரீனா?” கேட்டவன், அவளுக்கு அருகில் வந்தான்.


முதுகுக்கு பின்னால் நிழலாடவும், அவசரவசரமாய் இவளோ தனது விழிகளை துடைத்துக் கொள்ள, அவளின் உணர்வு போராட்டங்களை ஒருவாறு அவதானித்தவன், மேலும் அவளை காயப்படுத்தும் நோக்கில் பின்னாலிருந்தபடியே இறுக்கமாக அவளை கட்டியணைத்து, “கேன் யூ ஸ்மேல் ஹெர் பெர்யூம்? யூஸ்வலி உனக்கு செரீனா யூஸ் பண்ற ஸ்டாங் பெர்யூம் பிடிக்காதுல.” என்றான் மெல்லிய குரலில்.


அவன் சொன்னது போலவே செரீனா உபயோகிக்கும் வாசனை திரவியத்தின் நெடி,  நாசியை துளைத்து தலை சுற்ற வைத்தது ரீனாவிற்கு. 


“உவாக்…” என்றபடியே இவளோ அவனிடமிருந்து திமிறி விலக, “ப்ச்… ஆவுச்… மெதுவா டி. செரீனா கடிச்சு வச்ச இடம்… வலிக்குது.” வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்ற சிணுங்கினான், மைக்கேல். 


சிணுங்கியதுடன் நிறுத்தாமல், “கைக்கேல் மைக்கேல்னு என் பேர நொடிக்கு ஒருமுறை சொல்லிட்டே இருந்தா.” என்றவன் அவளின் காதருகே வந்து, “ஹானஸ்டிலி அவ அழுகுல நான் கிறங்கிட்டேன் டி.” என்க, இவளுக்கோ ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றிய உணர்வு. 


பொறுக்க முடியாத அவ்வுணர்வில், “எனஃப்! எனஃப் மைக்கேல். ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என்று இவள் கத்த, “எரியுதா? சும்மா பத்திட்டு வருதா? டிஸ்கஸ்டிங்கா இருக்கும்ல.” என்றான் மைக்கேல் குத்தலாக.  


“ஆமா மைக்கேல் ஆமா… வேறோரு பொண்ண பத்தி நீங்க என்கிட்ட பேசும் போது எனக்கு டிஸ்கஸ்டிங்கா தான் இருக்கு. பத்திட்டு தான் வருது.” கண்ணீருடன் கத்தியவள், “இப்படி என்ன கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிறதுக்கு மொத்தமா என்ன கொன்னுடலாமே?” ஆதங்கத்திங் கேட்டுவிட்டு குழுங்கி அழுதிட, “ஹாஹா…” பதிலுக்கு ஏனோ அறை அதிர சிரித்தான், மைக்கேல். 


அதில் இவளோ அதிர்ந்து விழிக்க, “ஹும்… கொல்றதா? அதுவும் உன்னையா? ஹும்…கொல்ல நினச்சிருந்தா எப்பவோ உன்ன கொன்னிருப்பேனே? ம்ம்ம்… ஆமா ஏன் உன்ன விட்டு வச்சிருக்கேன்?” கேள்வியுடன் அவன் நிறுத்த, புரியா பார்வையுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள், ரீனா. 



“லவ்வா?” விழி விரிய கேட்டவன், “உஹும்… நெவர்! அப்பா அம்மாவ கொன்னவ மேல எனக்கு லவ் வர வாய்ப்பே இல்லை! அப்பறம்… அப்பறம் என்னவா இருக்கும் ரீனா?” என்ற கேள்வியுடன் புருவம் உயர்த்த, அடுத்து அவன் சொல்ல போகும் வார்த்தை கேட்க ஆர்வத்துடன் காத்திருந்தாள், ரீனா. 



“ஒருவேள லஸ்டா இருக்குமோ?” என்றவன், “ச்சே ச்சே… இருக்காது. லஸ்ட் வர்ற அளவுக்கு நீ ஒர்த் இல்ல ரீனா.” என்றான் அவளின் மலை முகடுகளை விழிகளால் அளவிட்டபடியே. 



அவன் விழி சென்ற திசையில் அவளின் கைகளும் தன்னிச்சையாய் சென்று பொக்கிஷங்களை பாதுகாத்திட, “ஹ்ம்… அங்க என்ன இருக்கு?”  என்று கூறி இதழ் வளைத்தவன், “இது லஸ்டும் இல்ல… லவ்வும் இல்ல… ரிவெஞ்ஜ்.” என்றான், தெளிவாக. 



“அதுவும் நார்மல் ரிவெஞ்ஜ் இல்ல ரீனா! இதுல உனக்கு யூஸ் இருக்கோ இல்லையோ எனக்கு யூஸ்புல்லா இருக்கிற மாதிரியான எ சிம்பிள் அண்ட் பெர்ஃபெட் ரிவெஞ்ஜ். புரியல?” என்றவாறு சட்டென அவளை இழுத்து தனது தோள் மேல் போட்டுக் கொண்டவன், “இப்ப தான் கடைசியா அவள லிப்லாக் பண்ணிட்டு வந்தேன். ம்ம்ம்… அதுவும் இரண்டு பேரோட எச்சிலும் கலக்கிற அளவுக்கு ஏ டீப் லிப் கிஸ் யூ நோ.” என்று கூறி காதோரம் கிசுகிசுக்க, ரீனாவின் முகம் ஏனோ அருவருப்பில் சுணங்கியது. 



அவளின் முக பாவனைகளை வன்மத்துடன் ரசித்தவன், டோண்ட் யூ பிலீவ் மீ. ம்ம்ம்… ஜஸ்ட் டெஸ்ட் மீ ரீனா.” என்றவாறு அவளின் இதழை கவ்வி சுவைக்க, உமட்டிக் கொண்டு வந்தது, அவளுக்கு.  



“உவாக்…” என்ற சத்தத்துடன் இவளோ அவனை விலக்கி தள்ளிட, “ப்ச்… நீ டோட்டல் வேஸ்ட் ரீனா. கிஸ் பண்ணவும் தெரியல. மத்தவங்க கிஸ் பண்ணா எப்படி ரியாக்ட் பண்ணும்னு கூட தெரியல. உன்கிட்ட… செடீயூஸ் பண்ணனும்ங்கிற ஆர்வம் இருக்கு. பட் திறமை இல்ல.” என்று அவன் கிண்டி கிளற, “எனஃப் மைக்கேல் திஸ் இஸ் லிமிட்.” உச்சக்கட்ட கோபத்தில் பொங்கி எழுந்தாள், ரீனா. 



“எனஃப் நான் சொல்லனும்… நீ இல்ல.”


அவளுக்கு மேல் கத்தியவன், 


“நீ ரொம்ப ரிஜிட் ரீனா…


உன்னோட இருக்கும்போது… ம்ம்ம்… ஒரு கம்போர்ட் பீலிங்கே வரல…


பட் அவ? … சி இஸ் வெரி சாஃப்ட்…


போத் கேரக்டர் அண்ட் இன்டிமெசி.”


என்று கூறி ஏற்கனவே அவன் சொல் பட்டு கிழிந்த இதயத்தை  


இன்னும் கொடூரமாக கிழித்தான், மைக்கேல்.



“ஷட் அப், மைக்கேல்!”


வலி தாங்க முடியாமல் பற்களை அரைத்தபடியே அவனை நோக்கி பாய்ந்தாள், ரீனா. 



பாய்ந்தவளை வாரி சுருட்டியவன், “திஸ் இஸ் யுவர் கேரக்டர் ரீனா. கோபத்துல என்னையவே கொல்ல வர்ற பார்த்தியா?” வெற்று புன்னகையுடன் குற்றம் சாற்றினான்.



“இது… இது தான் உன்னோட ஒர்ஜினல் ரா வெர்சன்.” என்று சொல்லி ஒரு நொடி நின்று பின் மீண்டும் தொடங்கினான். 



“பட்… பட்… ஏன் டி எங்க அப்பா அம்மாவ கொன்னீங்க?  அவ… அவங்க அப்படி என்ன பண்ணாங்க? நீ கோப படுற அளவுக்கு அப்படி அவங்க உனக்கும் உன் குடும்பத்துக்கும் என்ன தான் டி பண்ணாங்க?” குரல் உடைய, ஆதங்கத்துடன் வினவினான், மைக்கேல். 



அவன் சோகம் அவளையும் தாக்கியதோ என்னவோ? விழிகள் கலங்கின ரீனாவிற்கு.  



“நோ நோ… மைக்கேல்… பிளீஸ் என்ன நம்புங்க. உங்க பெரண்ட்ஸ சாவுக்கு நானோ என் பேமிலியோ காரணம் இல்ல.” என்று இவள் கெஞ்ச, “சோ… நான் என் கண்ணால பார்த்தது எல்லாம் பொய்… இல்ல? நீ சொல்றது மட்டும் தான் நிஜம் ம்ம்ம் இல்ல?” ஓர் கசந்த புன்னகையுடன்,  “ஏன் டி என்ன பார்த்தா உனக்கு கேனையன் மாதிரியா இருக்கு?” என்றான் குரல் ஏற. 



“கார் உங்களோடது. இடிச்சு எங்க அப்பா அம்மாவ கொன்னது உங்க அப்பா. இருந்தும் நீ சொல்ற, எங்க அப்பா அம்மா சாவுக்கு நீயும் உன் பேமிலியும் காரணம் இல்லனு. ஹும்… இத எவனாவது ஒரு லூசு,  லுச்சாபயன இருப்பான் அவன்கிட்ட சொல்லு. என்கிட்ட சொல்லாத.” அவனோ நம்ப மறுக்க, “பிளீஸ் மைக்கேல் பிளீஸ் என்ன நம்புங்க.” மீண்டும் கெஞ்சினாள், ரீனா. 



அவளின் கெஞ்சலை புறக்கணித்தவன், “உண்மைய சொல்லு டி. என்னோட ரவுடி குடும்பம் வேண்டாம் நான் மட்டும் போதும்னு தான நினைச்ச?” என்றான் கடினமாக. 



“ஐயோ மைக்கேல் பிளீஸ் என்ன நம்புங்க. நீங்க சொல்ற மாதிரி நீங்க மட்டும் போதும்னு நான் நினைச்சது எல்லாம் உண்மை தான் பட்…” என்று அவள் முடிக்கும் முன், ‘போதும் நிறுத்து…’ என்பது போல் கை காட்டியவன், “நீ ஆசப்பட்ட மாதிரி இதோ நான் மட்டும் தான் டி இருக்கேன். பட் அசிங்கமா…  அருவருப்பா. ஒரே நேரத்துல இரண்டு பொண்ணுங்க கூட இருக்கிற ஆயோக்கியனா… ம்ம்ம்… போதுமா? ஆர் யூ சேடிஸ்பைட் நௌ?” அவளின் காதுக்குள் கத்த, “நோ… நோ மைக்கேல்…” கண்ணீருடன் மறுப்பாய் தலையாட்டினாள், ரீனா. 



ஆடும் அவளது சிரத்தை இரு கையால் பற்றியவன், “வேறொருத்திய தொட்ட கையோட தான் இப்ப உன்ன தொட போறேன்.” என்றவனின் கரம் இறுகியது. 



“இன்னைக்கு மட்டும் இல்ல தினம் தினம் இப்படி தான். நீ இனி வாழ போற வாழ்க்கை… வாழ்க்கை இல்ல டி நரகம்.” என்றவன் கோபத்துடன் அவளை படுக்கையில் எறிந்தான். 



படுக்கையோ அவளை உள்ளிழுத்து வெளியே தள்ள, “வெல்கம் டூ மை ஹெல்…” என்ற கர்ஜனையுடன் அவள் மேல் பாய்ந்தவன், அவளோடு அவளின் கண்ணீரையும் சுவைத்தான். 


தொடரும்.....

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்